தொடக்கக்கால நவீன வரலாற்றை எழுதியவர்கள் ஐரோப்பாவையே மையமாகக் கொண்டு எழுதி பெரும்பாலும் இதர வரலாறுகளை பின்புறத்துக்குத் தள்ளும் பாணியில் ஆய்வுகளை அமைத்து இருந்தனர். இத்தகைய எழுத்துக்களைத் தகர்க்கும் பணியிலும் தாக்கும் வழியிலும், தனித்துவமான பார்வைகளைத் தெளிவாக முன் வைத்து ஆய்வாளர்கள் சீரியமுறையில் எழுதத் தொடங்கினர். இந்தப் பின்புலத்தில்தான் போர்ச்சுக்கீசியர்களின் ஆவணங்களை ஆராய்ந்து தமிழகக் கடல்சார் வரலாறாக எழுதப்பட்டதே இந்த நூல்.