பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் தொகுதி I & II

2,650

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சங்க இலக்கியங்கள் முழுவதையும் பயின்று பயின்று. பலமுறை பயின்று உள்ளத்து இருத்தினால்தான் இந்நூலை எழுதுவது சாத்தியமாகும்… இது செயற்கரிய செயல்… உண்மையிலேயே இமாலய முயற்சி. சங்ககால வேந்தர்களின் சரியான காலத்தை நிர்ணயம் செய்துள்ள இப்பெருநூல் அளவில் மட்டுமல்ல பொருள்பொதிந்த வரலாற்றிலும் மிகப்பெரிய நூல்

– புலவர் செ. இராசு.

பண்டைய தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக இந்நூல் தரும் கால அட்டவணை நம்பகத்தன்மை மிக்கதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. சிந்தனை மரபு சார்ந்த வரலாறு. இனமரபு சார்ந்த வரலாறு. சங்கநூல்களின் காலவரையறை ஆகிய பல்வேறுபட்ட பதிவுகள், தமிழகத் தொல்வளங்கள் குறித்து அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகிறது. கணியன்பாலன் அவர்களின் தேடல், அதற்கான அவரது உழைப்பு ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டும்.

– வீ. அரசு, பேராசிரியர்.

கணியன் பாலனின் பங்களிப்பு வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. அறிவியல் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட சீரிய ஆய்வு. இந்த நூல் எழுதப்பட்ட போது பயன்பட்ட சான்றுகளைக் கடந்து கீழடி அகழாய்வு இந்த ஆய்வின் பாதை மிகச் சரியானது என்று மெய்ப்பித்து விட்டது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவெல் வெளியிட்ட போது எப்படித் தமிழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டதோ அதுபோல, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் வெளிவந்த போது எப்படிக் கவிதை இலக்கியத்தில் ஒரு புதிய களம் தோன்றியதோ அது போல தமிழர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கும் நூல் இந்நூல், இந்நூலை வரலாறு என்று சொல்வதைவிட வரலாறு படைத்த வரலாறு என்று சொல்வதுதான் பொருத்தம்… இதுவரை இவ்வளவு விரிவாகத் தமிழர் வரலாறு ஆராயப்படவும் இல்லை. அசைக்க முடியாத சான்றாதாரங்களோடு பழமை நிவைநாட்டப் படவும் இல்லை.

– சிற்பி பாலசுப்ரமணியம்.

Weight0.6 kg