கொங்கு நாடு ஒரு தனி நாடு

கொங்கு நாடு பன்னெடுங் காலமாகவே ஒரு தனி நாடாகவே வழங்கப்பெற்று வந்திருக்கிறது. தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர் ஆண்டனர் என்றாலும் கொங்கு நாடு ஒரு தனி நாடாகவே இருந்து வந்திருக்கிறது. மூவேந்தர்கள் அவ்வப்போது கொங்கு நாட்டைக் கைப்பற்றினாலும், இதனை ஒரு தனி நாடாகக் கொண்டு, தனிப் பிரதிநிதிகளை நியமித்து ஆட்சி செலுத்தி வந்தனர். சங்க இலக்கியங்களும்…