மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் வீட்டுக்குரிய பொருள்கள் மொஹெஞ்சொ-தரோ மக்கள் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர் என்பது அங்குக் கிடைத்துள்ள பொருள்களிலிருந்து நன்கறியலாம். அப்பொருள்கள் களிமண்ணாலும் மரத்தாலும் செம்பாலும் வெண்கலத்தாலும் சங்கு, வெண்கல் முதலியவற்றாலும் செய்யப்பட்டவை. வீட்டுக்குரிய பெரும்பாலான பொருள்கள் களிமண்ணாற் செய்யப்பட்டனவே ஆகும். சிறப்புடை நாட்களில் சங்காலும் வெண்கல்லாலும் செய்யப்பட்ட பொருள்கள்…