Category வரலாறு

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள்

இந்தியக் கோயில் கட்டடக்கலை வகைகள் : உலகெங்கும் கட்டடக்கலையானது அந்தந்த நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருள்கள், தட்பவெட்பநிலை, வாழ்வியல் முறைகள், தொழில்நுட்பம் போன்ற பலவிதமான பொருண்மைகளின் இணைவினால் முகிழ்க்கிறது. மனிதன் தான் வாழ்வதற்கு கட்டிக்கொண்ட வாழ்விடங்களைப் போலவே தான் வணங்கும் இறைவனுக்கும் கட்டடங்களைக் கட்ட வேண்டும் என்றும் அந்த இறையுருவங்களை மழை வெயிலிலிருந்து பாதுகாக்க வேண்டும்…

பாறை ஓவியங்கள்

பாறை ஓவியங்கள் : ‘இந்நூல், விழுப்புரத்திற்கு அருகில் உள்ள கீழ்வாலை என்ற ஊரிலே கண்டுபிடிக்கப் பெற்ற பாறை ஓவியங்களைப் பற்றியதாகும். வரலாற்றுக்கு முற்பட்ட இந்த ஓவியங்களுக் கிடையே முதன் முதலாகச் சிந்துவெளி நாகரிகக் குறியீட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என் தலைமையில் இயங்கி வருகின்ற புதுவை வரலாற்றுக் கழகத்தைச் சார்ந்த பாகூர் புலவர் சு. குப்புசாமியும்,வில்லியனூர் புலவர்…

கன்னட இலக்கிய காலம்

கன்னட இலக்கிய காலம்: கேசவ அல்லது கேசிராஜா இயற்றிய மிகப் பழமையான, உயர்வாகப் பாராட்டப்படுகிற இலக்கியக் கன்னடத்திற்கான இலக்கணம் ஆகிய ஸ்ப்த மணித பூர்பணம் (‘சொற்களின் அணியாகிய கண்ணாடி) வெளியான பின் கன்னட இலக்கியத்தின் பழமை குறித்துப் பல புதிய விளக்கங்கள் கிடைத்திருக்கின்றன. இதன் பதிப்பாசிரியரான திரு கிட்டல் தனது முன்னுரையில் நூலின் ஆசிரியர் காலம்…

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் : தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழகம் எங்கும் தெய்வீகச் சூழ்நிலை நிரம்பியதாக்கி இக்கோபுரங்கள் விளங்குகின்றன. ‘கோபுரம்’ என்னும்…

சங்ககால அரசர்

சங்ககால அரசர் : சங்க காலக் கலைஞர்கள் அரசரைக் கண்டு ஆதரவு பெற்றனர். அவ்வரசர்களை மூவகையாகப் பாகுபடுத்துகிறது. சங்க இலக்கியம். அவர்கள் சீறூர் மன்னன், குறுநில மன்னன், வேந்தன் எனப்பட்டனர். சீறூர் மன்னரில் சிலர் நாடகற்றிக் குறுநில மன்னராயினர். ஆகவே சீறூர் மன்னரையும். வேந்தரையும் பற்றி விரிவாகக் கூறுவோம். சீறூர் மன்னன் (புறம் 197, 299,…

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள்

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் : இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சாதி முறை ஏற்பட்டது. இந்துக்களிடம் மட்டுமல்ல, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள். சீக்கியர்கள் ஆகியோரிடமும் சாதிப் பிரிவினை உள்ளது. சாதி முறைக்குப் பல அம்சங்கள் இருந்தாலும், உயர் சாதியினர் கீழ்ச் சாதியினரைச் சுரண்டுவதையும், நாட்டு வளங்களைக் கீழ்ச் சாதியினர் அனுபவிக்க விடாமல் உயர்…

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம் : மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது. அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர்…

குரங்கின் பெயர்கள்

குரங்கின் பெயர்கள் : சங்க இலக்கியத்தில் குரங்கும், அதன் வகைகளான கடுவன், மந்தி, கலை, முசு,ஊகம் என்பனவும் சுட்டப்பட்டுள்ளன. குரங்கு : குரங்கு, குரங்கினங்களின் பொதுப் பெயராகும். குரங்கு என்ற பெயர் “குர்…உர்+கு என அதன் சத்தத்தின் அடிப்படையில் அமைந்ததென்பர்”(39) தி. முருகரத்தினம். இச்சொல் நான்கிடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. கடுவன் : கடுவன்- மந்திக் குரங்கின் ஆண்.…

தேவதாசி முறையின் வீழ்ச்சி

தேவதாசி முறையின் வீழ்ச்சி (கி.பி.1310-1378) தேவதாசி முறையின் உள்ளுறைந்து வளர்ந்து வந்த பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக முஸ்லிம் இடையீடு அமைந்தது. முந்தைய காலத்தில் அது அரச ஆதரவைப் பெற்று ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கிளைத்துத் தழைத்து வளர்ந்தோங்கியிருந்தது. ஆனால், இப்போது அது அந்த ஆதரவை இழந்ததோடு, சரிவையும் சந்திக்க நேர்ந்தது. கி.பி.1310 முதல் 1378…

கம்பர் தந்த தமிழ்

கம்பர் தந்த தமிழ் அ. கம்பர் வாழி ‘கம்பர் வாழி’ என்னும் நூல் 16 பாடல்களையுடையது. இந்நூலுக்குக் ‘கம்பர் வாழி பதினாறு’ என்றும் பெயர் உண்டு. தனி ஏடாகக் கிடைத்த இந்நூலை திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் முதலில் பதிப்பித்தார். கொங்கு வேளாளர் திருமணங்களில் குடிமகன் என்னும் மங்கலன் (நாவிதர்) ‘மங்கல வாழ்த்து’ இசைப்பதற்கு முன் காணிப் புலவரால்…