Category வரலாறு

பாண்டியநாட்டு பெயர்கள்

பெயர்கள் : பாண்டியநாட்டில் இந்நாடுகளைக் குறிக்க நாடு என்ற பெயரோடு கூற்றம், வளநாடு. முட்டம், இருக்கை,ஊர்க்கீழ், குளக்கீழ், ஆற்றுப்போக்கு, ஆற்றுப்புறம் என்று பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை இடத்திற்கும், சூழ்நிலைக்கும், காலத்திற்கும் ஏற்ற முறையில் இடப்பெற்ற பெயர்கள் ஆகும். இவற்றில் முட்டம், இருக்கை என்ற பெயர்கள் பாண்டியநாட்டில் மட்டும் நாடுகளுக்கு வழங்கப்பட்ட பெயர்களாகும். தமிழ்நாட்டின் பிறபகுதிகளில்…

கழுகுமலை சமணப்பள்ளி

கழுகுமலையின் வடக்குப்பக்கத்தில் சற்று உயரமான இடத்தில் இயற்கையான இரண்டு பெரிய குகைத் தளங்களோடு சில சிறிய குகைத்தளங்களும் நிறைந்த பகுதி உள்ளது. இதன் மையப்பகுதி பிற்காலத்தில் அய்யனார் கோயிலாக மாற்றப்பட்டு இப்பகுதியின் கிராம மக்களால் வழிபாடு நடத்தி வரப்படுகின்றது. அய்யனார் கோயில் பகுதியின் முன்புறத்தில் கருங்கற்கள் கொண்டு செவ்வக வடிவத்தில் பெரியமேடை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில்…

சமணசமயம் (ஜைன சமயம்)

சமணசமயம் (ஜைன சமயம்] : இந்தியாவில் தோன்றிய தொன்மையான சமயங்களில் சமணசமயமும் ஒன்றாகும். வேதசமயத்திற்கு எதிராக சமணம், பௌத்தம், ஆசீவகம் முதலிய பல சமயங்கள் தோன்றின. வைதீகச் சமயப் புரோகிதர்களின் ஆதிக்கம், உயிர்க்கொலையுடன் கூடிய வேத வேள்விகள், நால்வருணப் பாகுபாடு, சமூக ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் இவை தோன்றின. இவற்றில் சமணசமயமும் பௌத்த சமயமும்…

திருநெல்வேலியின் தோற்றமும் அதன் பரிமாணமும்

“நெல்லை” என்று செல்லமாக அழைக்கப்படும் திருநெல்வேலி‌ மாவட்டம் இன்று தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நெல்லை மாவட்டம் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கொண்ட மிக அழகிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இந்த மாவட்டம் ஒரு காலத்தில் ‘திருநெல்வேலிச் சீமை’ என அழைக்கப்பட்டது.‌ பாண்டியர்கள் பிரதானமாய் வாழ்ந்த இரண்டாம் பெரும் தலைநகரமாக…

அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்)

அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்) : இந்தியாவின் தொன்மையான சமயங்களில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இருந்து வந்தது. இத்தெய்வங்களில் சில ஒரு காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. வேறு சில தெய்வங்கள் சிறப்புப்பெறத் தொடங்கியபோது முதலில் உச்சநிலையிலிருந்த தெய்வங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவ்வாறு காலந்தோறும் மாறுதல்கள் நடைபெற்றுக்கொண்டு வந்தன. ஒரு காலத்தில் உன்னத நிலையிலிருந்தவர்கள்…

பாடல்களும் மீனவர் பாடல்களும்

பாடல்களும் மீனவர் பாடல்களும் : நாட்டுப்புறவியல் என்பது மரபுகள், வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவை நாட்டுப்புற மக்களிடம் மட்டுமின்றி நகர்ப்புற மக்களிடமும் எப்படி உள்ளன என்பதைப் பற்றி ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்! நாகரிக சமுதாயம், நாகரிகமற்ற சமுதாயம், படித்த சமுதாயம், படிக்காத சமுதாயம் என்ற எந்தவிதமான வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வியல்…

எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள்

எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள் : பாண்டியரின் தலைநகரான மதுரை மாநகரும் அதனைச் சார்ந்த பகுதிகளும் சமணசமயத்தின் ஊற்றாய்த் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியமன்னரின் ஆதரவுடன் இப்பகுதியில் சமணம் நிலைபெற்றுவிட்டது. இதனை மதுரையைச் சுற்றியுள்ள சிறிய குன்றங்களிலுள்ள குகைத் தளத்துப் பள்ளிகளில் காணப்படும் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. தென்னிந்தியாவிலேயே சமணசமயத்…

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள்

தமிழ்பிராமிப் பானைப் பொறிப்புகள் பாண்டியநாட்டில் அழகன்குளம், கீழடி, மாங்குடி, கொற்கை அகழாய்வுகளில் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் நூற்றுக்கு மேற்பட்டுக் கிடைத்துள்ளன. தமிழ்பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானையோடுகளில் பல வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் வடமொழிப் (பிராக்கிருதம் -சமஸ்கிருதம்) பெயர்களும் தமிழ் மொழிப் பெயர்களும் காணப்படுகின்றன. மேலும் இவற்றில் தமிழ்ப்படுத்தப்பட்ட வடமொழிப் பெயர்களும் உள்ளன. கீழடியில் நடைபெற்ற…

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை

திராவிட வகைக் கோயிற் கட்டடக்கலை : தென்னிந்தியக் கோயில்கள் திராவிட வகைக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய கோயில்களை அமைப்பது எங்ஙனம் என்பதை மயன் என்பவரால் எழுதப்பட்ட மயமதம் எனும் நூல் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டே மண்ணினாலும் மரத்தாலும், செங்கற்களாலும் கோயில் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் அக்கோயில்கள் எத்தகைய…

வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி

வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி : உலகில் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் மரபு மிகத் தொன்மையான காலத்திலிருந்து பலநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெண்தெய்வத்தைப் பண்டைய மக்கள், நிலவுலகைக் காக்கும் பூமித் தெய்வமாக, உயிரினங்களையும் தாவரங்களையும் படைக்கும் படைப்புத் தெய்வமாக, அவற்றைக் காத்து நிற்கும் காவல் தெய்வமாகக் கருதினர். இந்தியாவில் ஒவ்வொரு தொன்மையான கிராமம், நகரம் ஆகியவற்றைக் காக்கும்…