Category இந்து

யார் கைகளில் இந்து ஆலயங்கள்?

பல்வேறு மதங்களும் அதன் கோவில்களும் கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல்போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மிக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். ஆனால் மரங்களும், சாலையோரக் கற்களும்கூட கோயிலாகக் கருதப்படும் வழக்கமும் நமது சமூகத்தில் உண்டு. மனிதகுல வரலாற்றில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை நிகழ்வுகளை வணங்கவோ, பயம் கொள்ளவோ செய்த மனித…

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான மறைந்த தொ. பரமசிவன் எழுதிய 27 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகங்களுடன் அணிந்துரைகளும் மதிப்புரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரையில் மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றிய தரவும் பெண் தெய்வங்களின் பெயர் வழங்குவது பற்றிய தரவும் பலரும் அறியாதவை.…

ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம் நமது நாட்டில் சைவாகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம், தந்திரம் முதலியனவற்றை யொட்டியும் ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவாகமங்கள் இருபத்தெட்டோடு சைவ உபாகமங்கள் நூற்றுப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் அறுபத்துநான்காகும். பாஞ்சராத்ராகமங்கள் நூற்றெட் டென்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்ரமும், வைகானஸமுமாகும். குமாரதந்திரம் முதலிய தந்திர நூல்களை மேற்கொண்டு எழுந்த கோவில்களும் பல உள. இவை…

கலை வரலாற்றில் கணபதி

கலை வரலாற்றில் கணபதி : ‘ரிக் வேதத்தில் கணானாம்த்வகணபதிம்’ என்று சொல்லப்பட்டிருப்பினும் அது கணபதியைக் குறிக்கவில்லை. தைத்திரிய ஆரண்யகத்தில் ‘வளைந்த துதிக்கையை யுடைய தண்டின்’ என்ற கடவுள் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கைகளில் தானியச் செடிகளும் கரும்பும் கதையும் வைத்திருப்பார் என்று வருகிறது. ஏறத்தாழ இதே காலத் தினைச் (C. 1000 B.C.) சேர்ந்த கலைச்சின்னம் ஒன்று…

இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம்

மனிதன் நல்வழிப்படும் மார்க்க நெறியே சமய நெறியாகும். பிற சமயங்கள் ஒரே தலைவரை தங்களின் சமய முதல்வராக ஏற்றுக்கொள்ள, இந்து சமயமோ ஒரே நெறியை வலியுறுத்துகிறது. அந்த நெறி பரந்தது. அந்த நெறியில் சென்று வெற்றியடைந்த அனைவரையும் இந்து சமயம் தலைவராக ஏற்றுக் கொள்கிறது, வணங்குகிறது. இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து இந்திய மக்களிடையே தோன்றிய…