பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பன் கலங்கரை விளக்கம் : சோழ மண்டலக்கரையெனப் பன்னெடுங்காலமாக வழங்கப்பெற்றுவரும் கிழக்கு கடற்கரை, இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா’ எனவும் ‘பாக் ஜலசந்தி’ எனவும் புவியியலார் குறிப்பிடுகின்ற இந்தக் கடற்பகுதி கடந்த காலங்களில், பாண்டிய நாட்டின் நுழைபெரும் வாயிலாக அமைந்து வெளிநாட்டு உள்நாட்டு வாணிப பெருக்கிற்கு உதவியது. இந்தக் கடற்கரையில் எழுந்து…

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர்

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர் நமது முன்னோர்கள் செப்பேடுகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர் என்பது பலவற்றால் தெரிகிறது. திருச்செங்கோட்டில் கி.பி 962, 967 ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. ஆனைமங்கலம் (லெய்டன்) செப்பேடுகள் கி.பி 1006, 1090-ல் எழுதப்பட்டவை ஒன்றாகக் கிடைத்தன. திருபுவனத்தில் கி.பி 1204, 1214-ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக்…

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தம்முள் கதைத் தொடர்பு கொண்டுள்ளன. சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் பெயர் பெற்றது. மணிமேகலை, கோவலன் மாதவியின் மகள் மணிமேகலையின் பெயரால் அமைந்தது. சிலப்பதிகாரம் சமணக் காப்பியம்; மணிமேகலை பௌத்த காப்பியம். சிலம்பை இயற்றியவர் சேர அரசன் செங்குட்டுவனின் இளவல்…

தென் இந்தியாவில் கிடைத்த சப்தமாதர் வழிபாடு பற்றிய முதல் கல்வெட்டு

சப்த மாதர் என்போர் இந்து மதத்தில் வணங்கப்படும் ஏழு பெண் தெய்வங்களின் குழுவாகும். இந்தத் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற முக்கியக் கடவுள்களின் சக்திகளையும், அம்சங்களையும் வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த அரிய கல்வெட்டு சமஸ்கிருத மொழியிலும், பிராமி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 207 ஆம் ஆண்டில் சாதவாகன மன்னர் விஜயாவின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…

திருமலையின் கலையார்வம்

திருமலையின் கலையார்வம் : இப்புது மண்டபத்தைக் கட்டியவர் சிற்பி சுமந்திர மூர்த்தி ஆசாரி ஆவார். இந்த கட்டிடத்தைக் கட்டும்போதுநடந்த சுவையான சம்பவம் ஒன்று. ஒரு நாள் சுமந்திரமூர்த்தி ஆசாரி, ஓர் உருவத்தைச் செதுக்குவதில் ஓய்வு ஒழிவு இன்றி வேலை பார்த்து வந்தார். அதே நேரத்தில் வெற்றிலை பாக்குப் போடுவதிலும் ஓய்வு ஒழிவு இன்றி கருத்தூன்றி வந்தார்.…

மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் திருமலைநாயக்கர் கடவுள் பக்தி மிகுந்தவராக இருந்தார். அதனால் மதுரைக் கோயில்களில் மட்டுமின்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்து வந்தார். மீனாட்சி அம்மன் சந்நிதி இடத்துக்குத் தெற்கு வடக்காக இருக்கும் மண்டபம் சங்கிலிமண்டபம் எனப்படும். இந்த மண்டபத்துக்கு முன்பு கரிய மாணிக்கப்பெருமாள் கோயில் இருந்தது. இம்மண்டபத்தை ‘மாலிக்கபூர்’ என்பவன் படையெடுத்து வந்து கி.பி. 1311ஆம்…

அரசனை இறைவனாக வழிபடும் தமிழர்களும் ரோமானியர்களும்

தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர் போன்ற மன்னர்கள் தங்கள் பெயரிலேயே கோவில்களைக் கட்டியதை நாம் அறிவோம். ஆனால், இந்தக் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சங்க காலத்தில், தமிழகத்தில் கிரேக்கர்கள்தங்கள் அரசனின் பெயரில் கோவில் அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது தமிழகத்தில் காணப்படும் பள்ளிப்படை கோவில், சோழீஸ்வரர் கோவில் கட்டுமான மரபுடன் தொடர்புப்படுத்திக் காண…

பாண்டுரங்கனும் பால் நிற வண்ணனும் – தமிழகத்தில் பலராமர் வழிபாடு

என் தந்தை, என் தாத்தா பாட்டிக்கு ஐந்தாவது குழந்தை. அவருக்கு முன்பு பிறந்த நான்கு குழந்தைகளும் பிறந்தவுடனேயே இறந்துவிட்டதால், ஐந்தாவதாகப் பிறக்கும் குழந்தை நலமாக வாழ வேண்டும் என்று வேண்டி, “பாண்டுரங்கன்” என்று பெயரிட யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே பாண்டுரங்கன் என்று பெயரிடப்பட்டது. “பாண்டு” பெயரின் தொன்மம் “பாண்டு” என்று ஐந்தாவதாகப் பிறக்கும் குழந்தைக்குப் பெயரிடும்…

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும்

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும் : கரிக்குருவி : தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுகளில் ஒன்று (S.I. III .44) ‘இவள்தானும்… இவன் அடைகுடி ஆனைச்சாத்தானும்’ என்று கூறுவதைக் காணலாம். அடைகுடி ஆனைச்சாத்தன் என்ற பெயர் ஒருவனின் பெயராகக் கூறப்பட்டுள்ளது. சாத்தன் என்ற பெயரைப் பிற்கால இலக்கண உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டாக உரையில் பயின்றுள்ளனர்.…