அன்பே இறைவழிபாடு கண்ணப்ப நாயனார் கதை – ரா. வித்யாலட்சுமி

நான் மிக அதிகமாய் நேசிக்கும், வியக்கும் நாயன்மார்களில் ஒருவர் கண்ணப்ப நாயனார். அவருக்குப் பரிட்சியம் இல்லாத ஒரு அன்பை, ஒரு இறையை மனம் முழுக்க நிறைத்துக்கொண்டு முழு மனத்துடன் அவரைச் சரணடைந்து அந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார். சரி அவர் எப்படி நாயன்மார்களில் ஒருவரானார்? பொத்தப்பி என்ற நாட்டில் வேடர்களின் தலைவன் நாகனும், அவன் மனைவி தத்தையும்…

சமணக் கல்வெட்டுக்களும், சங்ககால செஞ்சியும் – நிலவளம் கு.கதிரவன்.

மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”. ஆம். சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும். சங்க காலம் தொடர்பான கால வரையறையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கி.மு.5ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை…

மன்னர் மருதுபாண்டியர்களின் பக்தியும் தொண்டும் – திரு. த. விஜயகுமார்

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதல் முதலில் தொடங்கியவர்கள் மன்னர் மருது சகோதரர்கள் மட்டும் ஆங்கிலேயரை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1780 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.   இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற ஊரில் வாழ்ந்த மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி…

தமிழக நாணயங்களும் சாதனைகளும் – திரு. மன்னர் மன்னன்

தமிழ் இணைய கழகத்தின் மாதாந்திர சொற்பொழிவில், ’நாணயவியல் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் இரா.மன்னர் மன்னன் அவர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. குறுகிய நேரத்திற்குள் மிக அழகாக மிகப் பெரிய வரலாற்றைச் சொல்லிமுடித்துவிட்டார் நாணய ஆராச்சியாளர் திரு. மன்னர் மன்னன். எனக்கு நாணயவியல் பற்றிய ஆய்வுகள் புதிது, எனினும் அவரின் தெளிவான சொற்பொழிவின் மூலம் நிறைய தகவல்களை…

நீர்நிலை பராமரிப்பின் முக்கியத்தும் கூறும் கல்வெட்டு -கி. ஸ்ரீதரன்

நீர்நிலைகள் பராமரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கல்வெட்டு கி. ஸ்ரீதரன் (தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை)   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற ஊர் சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்கிறது. பல்லவ அரசர்கள் காலத்தில்அமைக்கப்பட்ட இந்த ஊர் சோழ மன்னர்கள் காலத்தில் மேலும் சிறந்து விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் காணப்படும் பராந்தக…

பட்டினப்பாலையில் வெளிநாட்டு வாணிகம் முனைவர் ஜோ. பிரின்ஸ்

கரிகால் பெருவளத்தானின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினம் துறைமுக நகரமாகவும் இருந்ததால் உள்நாட்டு வணிகம் போலப் பன்னாட்டு வணிகமும் சிறப்பாக நடைபெற்றது. சோழ நாட்டிற்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் உள்ள நாடுகளிலிருந்து பல பொருட்கள் வந்தன. கடல் தாண்டிய நாடுகளிலும் வணிகம் நடைபெற்றதால் துறைமுகத்தில் அரியவும், பெரியவுமான பொருள்கள் நிறைந்து காணப்பட்டன. மக்களின் வாழ்க்கை…

இடையாற்று சடைமுடி மாகாதேவர் கோவில் ரா. வித்யா லட்சுமி

அன்று எங்களின் முதல் பயண இடம், சடையார் கோவில், திருச்சென்னம்பூண்டி திருக்கோவில் ஆகும். முதலாம் பராந்தகன் காலக் கற்றளி என்பது எங்களை அதிகம் ஈர்த்தது. அடர்ந்த மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில் கோவிலின் பெயர்ப்பலகை இருந்தது, ஆனால் உயர்ந்த கோபுரமோ, மக்கள் நடமாட்டமோ காணப்படவில்லை. யாராவது வருகிறார்களா என்று பொறுத்துப் பார்த்துவிட்டுச் சற்று முன்னேறிச் சென்றோம்.…

அழகன் குளத்தின் சங்ககாலத் தமிழர் ரோமானிய வணிகம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் ஆர்ப்பரித்து வரும் வைகை ஆறு கடலைச் சேருமிடம் அது. அங்கு ஒரு அழகிய துறைமுகப் பட்டினம். உள்நாட்டிலிருந்து சரக்குகளைக் கொண்டுவர, வந்த சரக்குகளை எடுத்துச் செல்ல வசதியாக இருப்பதற்காக, துறைமுகங்களைத் தமிழர்கள் ஆறுகள் சங்கமமாகும் இடங்களிலேயே அமைத்திருந்தனர். கடலில் பல நாட்டுக் கலன்கள் வரிசையாக நிற்கின்றன. சற்றே வித்தியாசமான வடிவத்தில்…

அப்துல்லாபுரம் அரண்மனை – சரவணன் ராஜா

பல்வேறு அரசபரம்பரைகள் வேலூரில் ஆட்சி புரிந்திருந்தாலும், அவர்கள் வாழ்ந்த அரண்மனை என்று ஏதும் காணப்படவில்லை, அந்த வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் செல்லும் நிகழ்வில் சில விபரங்கள் வியப்பூட்டும். வேலூர் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து ஆம்பூர் செல்லும் வழியாக 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்துல்லாபுரம் கிராமம். நெடுஞ்சாலை ஓரத்தில் அழகிய வேலைப்பாடுள்ள இடிந்த…

பூக்“கல்” மீண்டும் மலருமா? க.கோமகள் அனுபமா

”என்னங்க, நம்ம வீட்ட செமையா கட்டிரனும். வீட்டுக்கு என்ன டைல்ஸ் போடுறது? எனக்கு ஒரு யோசனை, நம்ம வீட்டுக்கு எங்க ஊரு கல்லு போட்டா என்ன? பாரம்பரியமாகவும் இருக்கும், பாக்க அழகாகவும் இருக்கும், நலிந்துவரும் தொழிலுக்கு வேலைவாய்ப்பு குடுத்த மாதிரியும் இருக்கும். அது மட்டும் இல்லாம சுற்றுப்புறச் வழலுக்கு மாசு இல்லாமையும், நம்ம சந்ததிக்கும் ஆரோக்கியமாகவும்…