செப்பேடு சொல்லும் சேதிகள் – புலவர் செ. இராசு

250

கல்வெட்டுகளைப் போலவே வரலாற்றை எழுத அடிப்படைச் சான்றாக விளங்குவன செப்பேடுகள். கல்வெட்டுகள் ஆய்வு தொடர்பாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. செப்பேடுகள் தொடர்பான ஆய்வு நூல்கள் எதுவும் வெளிவரவில்லை. மூல பாடம் அடங்கிய செப்பேட்டு நூல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இந்நூல் அக்குறையைப் போக்குகிறது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Categories: , , , Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தமிழ்க் கல்வெட்டுகள் சுமார் 20000 பதிப்பிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் சுமார் 600 பதிப்பிக்கப்பட்டுள்ளன. முதலில் செப்பேடுகள் பற்றிய விரிவான அறிமுகத்துடன் பல்வேறு வகைப்பட்ட செப்பேடுகளின் அரிய படங்கள் 30 இடம் பெற்றுள்ளன.

கல்வெட்டு செப்பேடுகளின் எழுத்து வளர்ச்சியைக் காட்டும் படம் உள்ளது.

பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவச் செப்பேடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாட்டிலும் உள்ள செப்பேடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. செப்பேடு தொடர்பான இந்திய மேனாட்டு முன்னோடிகள் யார் யார் என்று கூறப்பட்டதுடன் பதிப்பு முதல் முயற்சி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டுகளைப் போலவே வரலாற்றை எழுத அடிப்படைச் சான்றாக விளங்குவன செப்பேடுகள். கல்வெட்டுகள் ஆய்வு தொடர்பாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. செப்பேடுகள் தொடர்பான ஆய்வு நூல்கள் எதுவும் வெளிவரவில்லை. மூல பாடம் அடங்கிய செப்பேட்டு நூல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இந்நூல் அக்குறையைப் போக்குகிறது.

முன்னுரை

கல்வெட்டுகளைப் போலவே வரலாற்றை எழுத அடிப்படைச் சான்றாக விளங்குவன செப்பேடுகள். கல்வெட்டுகள் ஆய்வு தொடர்பாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. செப்பேடுகள் தொடர்பான ஆய்வு நூல்கள் எதுவும் வெளிவரவில்லை. மூல பாடம் அடங்கிய செப்பேட்டு நூல்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இந்நூல் அக்குறையைப் போக்குகிறது.

தமிழ்க் கல்வெட்டுகள் சுமார் 20000 பதிப்பிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் சுமார் 600 பதிப்பிக்கப்பட்டுள்ளன. செப்பேடுகள் பற்றிய விரிவான அறிமுகத்துடன் பல்வேறு முதலில் வகைப்பட்ட செப்பேடுகளின் அரிய படங்கள் 30 இடம் பெற்றுள்ளன. கல்வெட்டு செப்பேடுகளின் எழுத்து வளர்ச்சியைக் காட்டும் படம் உள்ளது.

அடுத்து பல்லவர்,சேரர்,சோழர்,பாண்டியர், விஜயநகரம், மதுரை-தஞ்சை நாயக்கர், சேதுபதிகள், புதுக்கோட்டை அறந்தாங்கித் தொண்டைமான்கள், மைசூர் உடையார் செப்பேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டின் மெய்க்கீர்த்திபோல் அரச மரபின் கீர்த்திப் புகழ்மொழிகள் கூறப்பட்டதுடன் பழனிச் செப்பேட்டில் கானும் முருகன் புகழ்மொழியும் உள்ளது.

பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவச் செப்பேடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாட்டிலும் உள்ள செப்பேடுகள் பற்றிய செய்திகள் உள்ளன. செப்பேடு தொடர்பான இந்திய மேனாட்டு முன்னோடிகள் யார் யார் என்று கூறப்பட்டதுடன் பதிப்பு முதல் முயற்சி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

செம்பில் எழுதப்பட்ட செப்பேடு போல பொன், வெள்ளிப்பட்டயங்கள் கூறப்பட்டுள்ளன. அரசியர் சிலரும் செப்பேடு அளித்துள்ள விபரம் சான்றுடன் உள்ளது. சில செப்பேடுகள் கல்வெட்டிலும் ஓலையிலும் எழுதப்பட்டுள்ளது காட்டப்பட்டுள்ளது. பல சமூகத்தார் செப்பேட்டில் தங்கள் குலப்பெருமைகள் கூறியமை தொகுக்கப்பட்டுள்ளது.

நடராசர் இல்லாத சிதம்பரம் 1746-ல் மக்கள் நீதிமன்றம் முடவர் காப்பு நிலையம்

ஆலந்து நாட்டவர் திருப்பணி தற்கொலை,

நரபலி மனிதர்கள் விற்பனை

பெண்கள் சிறையெடுப்பு

உடன்கட்டை ஏறல்

சாதி மாறும் சடங்கு திருடன் பெற்ற செப்பேடு

பூலித்தேவன் அல்ல புலித்தேவனே

வேலை நிறுத்தம் தமிழ்ச்சங்கம்

தேவார, திருமுறைச் செப்பேடு

பானர்மென் ஆணை

நீதியும் நிர்வாகமும்

மரங்கள் வளர்ப்பு

சமூக நல்லிணக்கம்

மேற்பட்ட அரிய போன்று 60க்கும் காட்டப்பட்டுள்ளன. செப்பேடுகளைப் பாதுகாத்த முன்னோரும் பாதுகாத்த முறையும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகச்சிறிய செப்பேடு, மிகப்பெரிய செப்பேடு எது என்று கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுப் படி எடுத்தல், செப்பேடு படி எடுத்தல் செய்திகள் இடையே உள்ள வேறுபாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. புலவர்கட்கு மரியாதை செய்த செப்பேடுகளும் உள்ளன. பொட்டுக் கட்டுதல், தேவரடியார் (தேவதாசி) செப்பேடுகள் உள்ளன. சில பழஞ்செப்பேடுகளில் திராவிடம் என்ற சொல் வழக்கம் உள்ளது. இதுவரை வெளிவந்த செப்பேட்டு நூல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. யானை குதிரைக்கு பெயர் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஓலைச் சுவடி போல செப்பேட்டிற்கும் சிதைவு ஏற்பட்டுள்ளது. செப்பேடு உருவாகும் முறை காட்டப்பட்டுள்ளது. பொதுவாக இந்நூல் செப்பேடுகளின் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறது எனலாம்.

இறுதியில் செப்பேடுகளில் காணப்படும் 27 பாடல்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்நூலை வெளியிடும் ஆதிவனம் பதிப்பகத்திற்கு மெய்ப்பு திருத்தத்திற்கு உதவிய திரு.எம்.பாபு அவர்களுக்கும் நன்றி..

பொருளடக்கம்
  1. செப்பேடு -ஓர் அறிமுகம்
  2. செப்பேடுகளை முதலில் படி எடுத்தவர்
  3. கர்னல் காலின் மெக்கன்சி (1754-1821)
  4. செப்பேடு சிறியதும் பெரியதும்
  5. இந்தியாவின் தொன்மையான சிறிய செப்பேடு 6. வளையம், முத்திரையுடன் செப்பேடு
  6. செப்பேட்டு முத்திரை 8. முதல் தமிழ்ச் செப்பேடு
  7. வளையம் உடைந்த செப்பேடு
  8. கோடு போட்டு எழுதிய செப்பேடு (நாராணாபுரம் செப்பேடு) II. செப்பேட்டில் புடைப்புச் சிற்பம் பழனிச்செப்பேடு
  9. நிலக்கொடைச் செப்பேட்டில் வாமனர் உருவம் 
  10. ஓலைப் பட்டயத்தின் செப்பேடு நகல்
  11. ஓலைப்பட்டயம்
  12. ஓலைச்சுவடி வடிவில் செப்பேடு
  13. புத்தக வடிவச் செப்பேடு
  14. கலப்பை வடிவம் செப்பேடு 18. செப்பேடும் உடையும்
  15. சோழரின் முதல், கடைசிச் செப்பேடுகள்
  16. கிரந்தச் செப்பேடு
  17. தெலுங்குச் செப்பேடு
  18. வட்டெழுத்துச் செப்பேடு
  19. நாகரிச் செப்பேடு
  20. பல்லவ கிரந்தச் செப்பேடுகள்
  21. மராத்திச் செப்பேடு
  22. ஹிப்ரு, பஹலவி, குபிக் செப்பேடு
  23. தமிழ் எண்கள்
  24. மெய் எழுத்து தமிழ் பிராமி
  25. உயிர் எழுத்து
  26. தமிழ்ச் செப்பேடு
  27. படி எடுத்த தலைகீழ் செப்பேடு
  28. பல்லவர் செப்பேடுகள்
  29. சேரநாட்டுச் செப்பேடுகள்
  30. செப்பேட்டில் சோர் மெய்க்கீர்த்தி
  31. சோழர் செப்பேடுகள்
  32. லெய்டனா? ஆனைமங்கலமா? 
  33. செப்பேடு உருவாக்கல் (சோழர்)
  34. சோழர் செப்பேட்டில் வரிகள்
  35. சோழர் செப்பேடு உருவாக்கலில் பங்காற்றும் அலுவலர்கள்
  36. சோழர் செப்பேடுகளிலிருந்து
  37. அரசர்கள் பெயர் பெற்ற அதிகாரிகள்
  38. சதுர்வேத மங்கலப் பணியாளர்கள்
  39. சோழர் செப்பேட்டில் ஊர்ப்பகுதிகள் 44. பாண்டியர் செப்பேடுகள்
  40. முற்காலப் பாண்டியர் செப்பேடுகள் உருவாக்கல்
  41. பாண்டியர் செப்பேடுகளில் அகத்தியர்
  42. பாண்டியர் பற்றிய புராணக் கதைகள்
  43. பாண்டியர் செப்பேடுகளிலிருந்து
  44. பாண்டிய நாட்டில் பார்ப்பனர் கொடைகட்கு எதிர்ப்பு
  45. பிற்காலத் தமிழ்ச் செப்பேடுகள் உருவாக்கம்
  46. சிவகங்கைச் செப்பேடுகள் 
  47. சேதுபதி செப்பேடுகள்
  48. வரிகள் வளைதடி
  49. சேதுபதிகள் கீர்த்திகளில் சில
  50. புதுக்கோட்டைத் தொண்டைமான செப்பேடுகள்
  51. அறந்தாங்கித் தொண்டைமான் செப்பேடுகள்
  52. அறந்தாங்கித் தொண்டைமானார் கீர்த்திகள்
  53. விஜயநகரச் செப்பேடுகள்
  54. மதுரை நாயக்கர் செப்பேடுகள் சில
  55. அரித்துவார மங்கலம் செப்பேட்டில் தஞ்சை நாயக்கரின் நல்லாட்சி
  56. திருமலை நாயக்கர் செப்பேடுகள் (1623-1659)
  57. தஞ்சை நாயக்கர் செப்பேடுகள்
  58. மைசூர் உடையார் செப்பேடுகள்
  59. பழனிச் செப்பேட்டில் முருகன் புகழ்
  60. செப்பேடு சொல்லும் சேதிகள்
  61. எம்மதமும் சம்மதம்
  62. இந்தியாவில் உள்ள செப்பேடுகள் 67.செப்பேடு நினைவில் நிற்கும் மேனாட்டவர்
  63. செப்பேடு தமிழக முன்னோடிகள்
  64. செப்பேடு கவனம் செலுத்திய இதழ்கள்
  65. தமிழகத்திற்கு வெளியே இந்தியாவில் தமிழகச் செப்பேடுகள்
  66. கடல் கடந்த செப்பேடுகள்
  67. செப்பேடு பட்டியல் தயாரிப்பு
  68. செப்பேடு பதிப்பில் முதல் முயற்சி
  69. பொன், வெள்ளிப் பட்டயங்கள்
  70. விக்டோரியா மகாராணி பொன் விழாவிற்கு வெள்ளிப்பட்டயம்
  71. ஒரே இதழில் இரு செப்பேடுகள் 
  72. அணிகலன்கள் கூறும் செப்பேடு
  73. தனிச் செப்பேட்டு நூல்கள்
  74. செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர
  75. செப்பேட்டைப் பாதுகாத்த முறை
  76. முதல் செப்பேடு
  77. செப்பேடுகளில் புது அரசர்கள்
  78. செப்பேட்டில் பள்ளிப்படை
  79. செப்பேடு படியெடுத்தல்
  80. செப்பேடுகளின் சிறப்பு
  81. ஓலை – கல்வெட்டு செப்பேடு
  82. செப்பேட்டுக் கடலில் சில முத்துக்கள்
  83. செப்பேட்டில் தேவாரமும் திருமுறையும்
  84. அரசியர் அளித்த அருங்கொடைகள்
  85. 1746 -ல் ஒரு மக்கள் நீதிமன்றம்
  86. சிதம்பரத்திற்கு ஹாலந்து நாட்டவர் கொடை
  87. முடவர் காப்பு நிலையம்
  88. நாவிதனும் அம்பட்டனும்
  89. உடன்கட்டை ஏறியதாசி
  90. மரங்களை நேசித்தலும் வளர்த்த மரங்களும்
  91. விலைக்கு வாங்கப்பட்ட இருப்புலிக் குமரன்
  92. அரசருக்காக அயலார் வழிபட வேண்டாம்
  93. செப்பேட்டில் குலப்பெருமை
  94. திப்பு சுல்தான் கால கிராம நிர்வாகம் 100). திருடன் பெற்ற பாராட்டும் பரிசும்
  95. சசீர தண்டனை
  96. அரசர்க்கே நாட்டு நிலம்
  97. குழந்தைக்குப் பாலும், தலைக்கு எண்ணெயும் இலவசம்
  98. வாரிசு ஆக ஒரு சடங்கு
  99. சாதி மாற ஒரு சடங்கு 106. தலைவர்க்கு உருவகமான உத்தமர்கள் 107. பழனிக் கோயிலில் பார்ப்பனர் பூசை
  100. பூலித்தேவனா? புலித் தேவனா?
  101. விடை கூறும் செப்பேடு
  102. இஸ்லாமியச் செப்பேடுகளில் புதிய முறைக் காப்புத் தொடர்கள்
  103. பொட்டுக் கட்டுதல் மாணிக்கி நியமனம்
  104. விண்ணில் பறந்த வித்தை
  105. செப்பேட்டில் இறையனார் களவியல்
  106. பஞ்ச கம்மாளர் வேலை நிறுத்தம்
  107. “தடுத்து மறிச்சு” மகமை கொள்ளல்
  108. மழை தந்த மானியம்
  109. செப்பேட்டில் திராவிடம், திராவிட அட்சரம்
  110. தற்பலி – நவகண்டம் கொடுத்தல்
  111. செப்பேட்டில் நரபலி
  112. இராமேசுவரம் கோயில் நீதியும் நிர்வாகமும்
  113. சேதுபதி பெற்ற செங்கோல்
  114. சேதுபதிகளின் சிறையெடுப்பு
  115. பண்டாரம் சமூகத்தார் செய்த சாதிக் கட்டுப்பாடு
  116. 123.மேஜர் பானர்மென் ஆணை
  117. இராமாயணச் சொற்பொழிவிற்குக் கொண்டை
  118. பெருமை பாடிய புலவர் பெற்ற பெருமை
  119. சேர்வைகாரர் பெண்ணுக்கு வலையர் மரியாதை
  120. திங்களூரில் தமிழ்ச்சங்கம்
  121. செப்பேட்டுப் பாடல்கள்
  122. சோழர் செப்பேட்டுப் பாடல்
  123. நடராசர் இல்லாத சிதம்பரம்
Weight0.4 kg