வேளாண் தொழில்சார் சடங்குகள்
தமிழர் தொழில்சார் சடங்குகளில் வேளாண் தொழில்சார் சடங்குகள் மிகவும் இன்றியமையாதவை. உழுதலில் சடங்குகள், நாற்றுவிடுதலில் சடங்குகள், களையெடுத்தலில் சடங்குகள். அறுவடைச் சடங்குகள், களத்துமேட்டுச் சடங்குகள் போன்ற பல்வேறு சடங்குகளும் வழக்கங்களும் காணப்படுகின்றன.
வேளாண்மையோடு தொடர்புடைய பொங்கல் திருவிழாவிலும் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, வேளாண்மைக்கு உதவும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும், புழங்குபொருள்களுக்கும் சிறப்பு செய்யும் விதமாக இச்சடங்குகள் அமைகின்றன. பொன்னேர் பூட்டுதல் குறித்து சங்க இலக்கியம் முதலாகப் பல்வேறு இலக்கியப் பதிவுகள் உள்ளன. நொச்சிப் பூவினைத் தலையில் சூடி, உழவர்கள் பொன்னேர் பூட்டியது குறித்தும் அப்போது எழுத்த ஓசை குறித்தும் இலக்கியங்கள் பேசுகின்றன.