‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தொகுத்து வழங்கும் ‘சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்த ‘சேப்பியன்ஸ்’ நூலின் படைப்பாசிரியர், இந்நூலில், தகவல் பரிமாற்ற அமைப்புமுறைகள் எவ்வாறு நம்முடைய உலகத்தைக் கட்டமைத்து, பிறகு அதைச் சீர்குலைத்தன என்பது பற்றிய புரட்சிகரமான கதையை விவரிக்கிறார். கதைகள் நம்மை ஒன்றிணைத்தன! புத்தகங்கள் நம்முடைய யோசனைகளைப் பரப்பின – நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட! இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது! படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, நமக்கிடையே பகைமையைத் தூண்டிவிட்டன! செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ! நாம் இந்தக் கணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது பற்றியும், நாம் பிழைத்திருக்கவும் தழைத்தோங்கவும் மேற்கொண்டாக வேண்டிய அவசரத் தேர்ந்தெடுப்புகள் பற்றியுமான விறுவிறுப்பூட்டும் விவரிப்பே இந்த ‘நெக்சஸ்’.
Author: யுவால் நோவா ஹராரி
Translator: நாகலட்சுமி சண்முகம்
Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
No. of pages: 548