தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும் – முனைவர் பெ. சுபாசுசந்திரபோசு

220

பழந் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களில் வாழ்ந்த மக்கள் தம் நிலத்தில் விளைந்த பொருள்களைப் பிற திணை மக்களிடம் கொடுத்துத் தமக்குத் தேவையான பொருள்களைப் பிற திணை மக்களிடம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர். இப்பொருள்களின் பரிமாற்றங்கள் பண்டமாற்று முறையாக மாறியது. இதுவே வணிகத்தின் தொடக்கமாக அமைகிறது. இப்பண்டமாற்று முறையின் வளர்ச்சியால் நெய்தல் நிலப்பகுதிகளில் கடல் வணிகம் தொடங்குகிறது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும்

ஆசிரியர்: முனைவர் பெ. சுபாசுசந்திரபோசு

பக்கங்கள்: 235 | விலை: ரூ. 200

Call: 044 3500 7152
Order: wa.me/919786068908
Our Website: www.heritager.in

புத்தகப் பொருளடக்கம்

1. முன்னுரை

2. உலக வரலாற்றில் கடல் வணிகம்

3. தமிழக நில அமைப்பும் வணிக வாயில்களும்

4. சங்க இலக்கியத்தில் கடல் வணிகம்

5. மரக்கலங்களும் தொழில்நுட்பமும்

6. கடல் வணிக வளர்ச்சியில் துறைமுகங்கள்

7. கடல் வணிகமும் புலம் பெயர்வும்

8. கடல் வணிகமும் பண்பாட்டுப் பரிமாற்றங்களும் – 203

9. முடிவுரை

10. பின்னிணைப்புகள்

முன்னுரை

பழந் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களில் வாழ்ந்த மக்கள் தம் நிலத்தில் விளைந்த பொருள்களைப் பிற திணை மக்களிடம் கொடுத்துத் தமக்குத் தேவையான பொருள்களைப் பிற திணை மக்களிடம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர். இப்பொருள்களின் பரிமாற்றங்கள் பண்டமாற்று முறையாக மாறியது. இதுவே வணிகத்தின் தொடக்கமாக அமைகிறது. இப்பண்டமாற்று முறையின் வளர்ச்சியால் நெய்தல் நிலப்பகுதிகளில் கடல் வணிகம் தொடங்குகிறது.

இத்தொடக்கம் உள் நாட்டுக்கடல் வணிகமாகவும், பன்னாட்டு உலகக் கடல் வணிகமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வணிகச் செயலுக்காகத் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்துள்ளனர். அதேபோல் யவனர் என்று அழைக்கப்படும் கிரேக்க, ரோமானியர்கள் கடல் கடந்து தமிழகத்திற்கு வருகை தந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கடல் வணிகம் உள் நாட்டவரும், அயல் நாட்டவரும் புலம் பெயரக் காரணமாக இருந்துள்ளது. கடல் வணிகமும்,புலம் பெயர்வும் பன்னாட்டு அளவில் வணிக வளர்ச்சியையும், பண்பாட்டுப் பரிமாற்றத்தை யும் உருவாக்கியுள்ளன.

பழந்தமிழர்களின் கடல் வணிக வரலாற்றுத் தரவுகளும், வாழ்வு முறைகளும் சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும். காசுகளிலும், அகழாய்வுகளிலும், செப்பேடுகளிலும், வெளிநாட்டார்களின் பயண நூல்களிலும் காணப்படுகின்றன. இத்தரவுகளின் அடிப்படையில் பழங்காலத் தமிழர்களின் கடல் வணிகச் செயல்கள், மரக்கலக் கட்டுமானத் தொழில் நுட்பங்கள், துறைமுகங்கள், (பெருந்துறை, முன்துறை), புலம்பெயர்வு, பண்பாட்டுப் பரிமாற்றங்கள், பற்றி ஆய்வதே இந்நூலின் நோக்கமாகும். இந்நூலுக்கு எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் ஆகியன முதன்மை நூல்களாகவும், கடல் வணிகம், பண்பாடு பற்றிய துணைமை நூல்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சங்க காலத் தமிழர்கள் மேற்கொண்ட கடல் வணிகம் குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கடல் வணிகம் குறித்த தரவுகள், கடல் வணிகம் மேற்கொள்ள அக்கால வணிகர்கள் மேற்கொண்ட செயல்கள், பண்பாட்டு மாற்றங்கள் பற்றிய தரவுகளின் அடிப்படையில் தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும் (Sea Trade and Culture of Tamils) என்னும் தலைப்பில் நூல் எழுதப்பட்டுள்ளது.

Weight 0.4 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.