சாலிவாகன சகாப்தம் (சகம்) 1673 (பொ.ஆ. 1751-52) கொல்லம் 927 (பொ.ஆ. 1752) பிரசோற்பதி வருடம் ஆவணி மாதம் 27-ஆம் நாள் புதன்கிழமை அசுவதி நட்சத்திரத்து அன்று இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது.
வாலுகான் சவான் சாயபு அவர்கள் நலனுக்காக திருநெல்வேலி குறவர் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நித்திய பூசை நடப்பதற்கு திருநெல்வேலி பேராயத்திற்குட்பட்ட 12 துறைகளில் ஒவ்வொரு துறையும் மாதம் ஒன்றிற்கு ஒரு பணம் வசூலித்து வழங்கிடுவது என்று துறை அதிகாரிகள் மகமைக்காரர், சில்லுனறி மகமைக்காரர், விடுப்பு மகமைக்காரர், காசுக்கப்பட்டடம், புகையிலைக் குத்தகை,பொன்னாயக்குடி, துறைவளிக்காரர் ஆகிய அதிகாரிகள் சம்மதித்து இப்பட்டயம் வழங்கியுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து பெறப்படும் உள்ளாயம் வரியிலிருந்து உள்ளாயக்காரர் தினம் அபிடேகம். நைவேத்தியம் செய்து வரவும் அறிவுறுத்தியுள்ளனர். துறை அதிகாரிகள் மாற்றமடைந்தாலும் இந்த அறம் தொடர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். அவ்வதிகாரிகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
இச்சாசனத்தினை பாளையம் அதிகாரம் சுப்பிரமணியம் என்பவர் எழுதியுள்ளார்.
இச்செப்பேட்டின் முதல் பக்கத்தின் மேல்பகுதியில் பிள்ளையார் தனது மூஞ்சுறு வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சியும், சுப்பிரமணியர் தனது தேவியர்களான வள்ளி தெய்வயானையுடன் நிற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. சுப்பிரமணியருக்கு பின்னால் அவரது வாகனமாக மயில் பாம்பினை வாயில் பிடித்து உள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் பின்பக்கம் மேல்பகுதியில் நடுவில் ஆறுமுகன் பத்மபீடத்தின் மீது நின்ற நிலையில் இருப்பது போல் வடிக்கப்பட்டுள்ளது. பன்னிரு கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் காணப்படுகின்றன. ஆறுமுகனுக்கு இருபுறமும் வாயிற்காவலர்கள் உருவங்கள் காணப்படுகின்றன.
செப்பேட்டு வாசகம் :
1. சாலிவாகன சகாத்தம் &களஎயகன் ஞில்செ-
2. ல்லாநின்ற கொல்லம் களஉயஎ ஞ’ பிரசொற்பதி ஸ
3. ஆவணி 2 உயஎ உ புதன் வாரமும் சதுர்த்தியும் அசுப-
4. தி நட்செத்திரமும் பெத்த சுபதினத்தில் சுவாமி குறவ-
5. தெரு சுப்பிரமணிய சுவாமி சன்னிதானத்துக்குத் திருகூ-
6. வெலி* பெராயத்துடனெ சொந்த பன்னிரண்டு துறை
7. அதிகாரியார் மகமைக்காறர் சில்லுனறி மகமை
8. க்காறர் விடுப்பு மகமைக்காறர் காசுக்கம் பட்டம்
9. புகையிலைக் குத்தகை பொன்னாயக்குடி துறை
10.வளிக்காறரொம் தாம்பிர சாதனப் பட்டையமாக எழு
11. திக் குடுத்த பரிசாவது சுவாமி சன்னிதானத்துக்கு
12. நித்தியலப் பூசைக்கு நடக்கும்படியாகத் துறை-
13. க்குத் துறை மீ கரு ஆயம் மீஉ க வீதமுமாகச் சம்மதித்து
14. வாலுகான் சவானவர்கள் சாயபுயவர்கள் புண்-
15. ணியமாக கொத்துவால் செகுதாவது சாயபு
16. அவர்கள் அதிகாரத்தில் தானத்தார் தலத்தார்
17. காசி அறிய நாங்கள் பட்டைய சாதனமெழுதி-
18. க் குடுத்தபடியினாலெ மாதாந்தம் துறைக்குத் து-
19. றை உள்ள பணம் திருட வெலி* உள்ளாயம்
20. செரப் பண்ணிவிச்சு உள்ளாயக்காறரெ –
21. வாமி சன்னிதானத்துக்கு நித்தியல அவிசெகம்
22. நெய்வெதனம் நடந்து வரும்படியாக நடத்தி
23. வருவாராகவும் இப்படி நடக்கிறதுக்கு இந்த-
24. த் தற்மத்துக்கு ஆராகிலும் வந்த பெர்களாகிலு
25. துறைக்குத் துறை வெறெ வந்தவர்களாகிலு-
26. ம் இந்தத் தர்மத்தைப் பரிபாலனமாக நட-
27. த்தி வருவார்களாகவும் இப்படி நடக்குமிடத்தில்
28. இந்தத் தற்மத்து ஆராகிலும் விக்கினம் பண்ணி-
29. னவர்கள் சுததத்துரொம் சிவத்துரொகம் குருத்-
30. துரொகம் விசுவாச பாதகம் இப்படிய்க்கொத்த பா-
31. வங்களிலெ பொவார்களாகவும் இப்படிக்கு சு-
32. ப்பிரமணிய சுவாமிக்கு நித்தியல் அவிசெக –
33.ட்டளை நெய்வெதனம் நடந்து வருவிறதுக்குச் ச
34. ம்மதித்துத் தாம்பிர சாதனப் பட்டையமெழு-
35.திக் குடுத்தொம் திருநெல்வேலி பெராயத்து-
36. டனெ செர்ந்த பன்னிரண்டு துறை அதிகாரீ-
37. யார் ம [க]மைக்காறர் சில்லுனறி மகமைக்காறர்
38. விடுப்பு மகமைக்காறர் காசுக்கம் பட்டம் புகையிலை –
பின் பக்கம் :
39. க் குத்தகை பொன்னாயக்குடி துறை வளிக்கா-
40. றரொம் யிப்படி யிவர்கள் சம்மதியில் இந்த-
41. த் தற்மத்துக்குப் பட்டைய சாதனமெழுதினெ –
42. ன் பாளைய * அதிகாரம் சுப்பிரமணியனெழுத்து
43. யிப்படிக்குத் துறை வளிக்காறாயின் வளி ஒப்-
44. பம் திருவழக்கு உச்சுமை மானுபச் சட்டை ஒன்று
45. 45.உள்ளாழி் நல்ல பெருமாள்
46. கருங்காடு சிவலிங்கம்
47. சுத்தவல்லி மூற்த்தியப்பன்
48. இடைகாய ஆண்டியப்பன்
49. வீரவநல்லூர் வீரளக்குட்டி
50. பத்தமடை கந்தசுவாமி
51. மகமை சங்கு
52. சிங்கிகுளம் நெல்லைனாயகம்
53. நாட்டுப் பரம தெய்வனாயகம்
54. மகமை சட்டையப்பன்
55.பாளைய சுப்பிரமணியன்
56. தூத்துக்குடி சுடலைமுத்து
57. ஆள்வார் திருநகரி
58. ஆல்கார்பட்டணத்துறை
59. மூன்றுக்கும் ஆறுமுகம்
60. தூத்துக்குடி
61. சடையப்பன்
62. சீவலப்பெரி பிச்சன்
63. மகமை சுந்தரலிங்கம்
64. கயத்தாறு தம்பான்
65.மகமை வைகுண்டம்
66. வடபடாகை
67. சுங்கத்துறை
68. வளி மகமை பண்டிதர்
69. பொன்னாயக்குடி
70. தெய்வனாயகம்
71. களக்காடு பெரியதம்பி
72. விசைய நாராயணம்
73. சிதம்பரம்
74. புகை இலை குத்தகை முத்து
75. விடுப்புமகமை ரெங்கம்
76. அன்னதான கத்தாக்கள்
77. கொரிகுறுக்குத்துறை
78. சொழவந்தான்
79. காசுக்கம் பட்டம்
80. நெல்லைனாயகம் செ-
81. ட்டியார் மாதம் கரு யஉ
82. இந்தச் சாதனம் நபாபு ஆலமுகாசிலெயு மானி
83. சாயபு யவர்கள் னாளையில் எளுதினது உ
84. இந்த தாம்பர சாதநப் பட்டையம் எழுதினென் சிற
85. ப்பம் அன்வர்த்தான் பெருமாள் உபகூஹவிையூ வ
86.உ சொக்கலிங்கம் உபையம் உ
87. பலபட்டடையில் பெரிய கடையில் கடை
88. கா மீ2 கரு தவசக்கடை கரு உ பம்
89. யிந்த படிக்கு சூரிய நாறாயணன் உள்ளூர்
90. ஆயம் நல்லபெருமாள் கடை கடூஆயம்
91. மாத கரு யஉ