இந்த நூலின் பெரும்கட்டுரைகள் ஐரோப்பிய காலனித்துவ காலகட்டத்தில் தமிழக வரலாற்று ஆய்வுகளின் விரிவுகளை வழங்குகின்றன. எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் ஆய்வுகள் குறித்த மதிப்புரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவரது நூல்களில் வரலாறு எழுதிய பல புதிய சான்றுகளை நமக்கு அளிக்கின்றன. இந்நூல் விவரிக்கும் செய்திகளின் அடிப்படையில் காணும்போது ‘தமிழ், தமிழர் தமிழக வரலாற்றுவரைவை’ அறிந்து கொள்ள இந்நூலொரு நல்வாய்ப்பு,
பா.இரவிக்குமார் புதுவைப் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில், இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். “தமிழில் நவீன நாடகங்கள்” என்பது இவருடைய முனைவர் பட்ட ஆய்வு. ‘கலையும் போராட்டமும்,’ ‘வாழ்விலிருந்து கண்விழிக்கும் சொற்கள்’ முதலிய கட்டுரை நூல்களின் ஆசிரியர். ‘கைரேகைக் கொடியில் களவுப் பூ” என்னும் கவிதைத் தொகுப்பு, கவிஞர் பச்சியப்பனுடன் இணைந்து பாரதி புத்திரனை நேர்காணல் செய்து ‘தம்பி, நான் ஏது செய்வேனடா’ என்னும் நூல் வெளி வந்துள்ளது. ‘எஸ்பொ.முன்னீடுகள்’ என்னும் நூலின் தொகுப்பாசிரியர் எஸ்.பொன்னுத்துரையின் சிறந்த சிறுகதைகளை ‘உறவுகள்’ என்னும் தலைப்பில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். நவீன இலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.