இந்தியாவில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளின் வரலாறு குறித்த மிக அபூர்வமான தகவல்களை விரிவாகக் கூறும் நூல் இது!
நீர் மேலாண்மை குறித்த ஆய்வுப் பார்வைக்கு பரந்த அளவில் கல்வியாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், உயிரோட்டமான பல உயரிய தகவல்களை வாரி வழங்கும் தடாகமாக நூலாசிரியர் திரு. ஜெகாதா அவர்களின் இந்நூல் ஒரு ஆவண நூலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
வரலாறு, புவியியல், அரசியல், புராணம் என ஒரு அணைக்கட்டின் அனைத்து வலைத்தளங்களையும் ஆய்ந்து மிக நுட்பமான தகவல்களை இந்நூலில் வெளிக்கொணர்ந்துள்ளார் ஜெகாதா.
இந்திய நீராதாரங்களின் புள்ளி விபரங்களையும், அணைக்கட்டுகள் பற்றிய அரிய தகவல்களையும் சொல்லும்போதே, நதிநீர்ப் பிரச்சனைகளின் இன்றைய சமூக மோதல்களைச் சுட்டிக் காட்டி, அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் விளக்கியிருப்பது இந்நூலின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.