தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை பாகம் – 1 மற்றும் பாகம் – 2
மொத்தம் 803 பக்கங்கள் படங்களுடன்
ஆசிரியர்: நுண்கலைச் செல்வர் சர்த்தன்குளம் அ. இராகவன்
வெளியீடு: அபீசன்
1. கோயிற் பிரிவுகள்
2. கோயில் வகைகள்
3. திருமதில்கள்
4. ஆயுதங்களும் அணிகலன்களும் ஆடைகளும் ஆயுதங்கள்
5. கோயில் வளர்த்த கலைகள்
6. ஆலயத்தின் தத்துவ விளக்கம்
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு என்னும் சான்றோர் சொல்லை பண்டைய காலந்தொட்டு இன்றுவரை தமிழர்கள் தங்கள் வாழ்வியல் முறையில் மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். உலக நாகரீகத்திற்கும், பண்பாட்டிற்கும் முன்னோடியாகத் தமிழர் நாகரீகமும் அதன் பண்பாடும் விளங்கி வருகின்றது. தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றும் அவர்களின் செறிந்த அறிவுத் திறனுக்குச் சான்றாக விளங்கி வருகின்றன. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து அவற்றின் சிறப்பை உலகத்தார் பார்வைக்கு கொண்டு வந்த சான்றோர் பெருமக்கள் எண்ணற்றோர் ஆவர் அவர்களுள், தமிழர் பண்பாட்டுக் கூறுகளை தனக்கே உரிய பாணியில் மிக நுணுக்கமாக ஆராய்ந்தவர் நுண்கலைச்செல்வர் அ. இராகவன் அவர்கள் ஆவார்.
இவர் தனது ஆராய்ச்சிகளின் மூலமாக பெற்ற தகவல்களை பல புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். இவரது புத்தகங்கள் ஒவ்வொன்றும் தமிழ் மண்ணின் பெருமையைக் கூறும் அறிவுப் பெட்டகமாகப் போற்றப்படுகின்றன.
தமிழ்பற்றுள்ளோர்களும், தமிழ்ஆய்வாளர்களும் போற்றக்கூடிய அரிய அறிவுக் களஞ்சியமான இவரது புத்தகங்களை புதிய மெருகோடு மறுபதிப்பு செய்து உலகத்தார் பார்வைக்கு கொண்டு வருவதை எங்கள் பதிப்பகம் பெரும் பேறாகக் கருதுகின்றது.