தமிழர் சமயம்

உலகத்தில் மதங்களுக்குப் பெயர் வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் பெயரைத் தழுவியாவது, பிரமாண நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடுங்கடவுளின் பெயர் சிவமாயின் அம்மதம் சைவமெனப்படும், தெய்வத்தின் பெயர் விஷ்ணுவாயின் மதம் வைணவம் எனப்படும். கிறிஸ்து மதமும் மகம்மதிய மதமும் புத்தமதமும் சைனமதமும் சமயத்தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. செராஸ்டிரிய மதமும் கன்பூசிய மதமும் அத்தகையனவே. வைதிகம் சுமார்த்தம், என்னும் மதங்கள், வேதம் ஸ்மிருதி முதலிய பிரமாண நூல்களின் பெயர் பெற்றன. இந்து மதம் என்ற சொல் கடவுள், ஆசிரியன், பிரமாண நூல் என்பவற்றுள் எதன் பெயரையுஞ் சார்ந்ததாகத் தெரியவில்லை, சிந்து நதிக்கரையில் இருந்தவர்களை ஹிந்துக்கள் என்று பாரசீகர் அழைத்தனர். அவர்களை இந்துக்கள் என்று கிரேக்கர்கள் கூறினர். இந்துக்கள் என்ற பெயரிலிருந்தே இந்தியா என்ற பெயர் ஏற்பட்டது.இந்திய நாட்டில் உள்ள பூர்வீகமக்கள் ஐரோப்பாக்கண்டத்தாரால் இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்துக்களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலைநாட்டினர் இந்துக்கள் எல்லாருக்கும் ஒருமதம் இருப்பதாக எண்ணி இந்துமதம் என்றபெயரைத் தோற்றுவித்தனர்.

இந்துமதம் என்றபெயர் தமிழிலாவது வடமொழியிலாவது உள்ள பண்டைநூல்களிற்கிடையாது. தற்காலத்தில் வடமொழிவேதத்தைப் பிரமாணமாகக்கொண்ட வைதிகர்கள் தங்கள்மதமே இந்துமதம் என்று பேசுபவராய் அம்மதமே இந்திய நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் உரியமதம்என்று நிலைநாட்ட முன்வந்துள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானியமதம்,அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்துமதம் என்ற ஒரு மதமும் உண்டென்னலாம். அவை இலவாதல்போல இந்துமதம் என்ற ஒரு மதமும் கிடையாது. வேதத்தையும் ஸ்மிருதியையும் பிரமாணமாகக் கொண்டே மதமே இந்துமதம் என்றால் அது இந்தியாவிலுள்ள பலமதங்களில் ஒருமதமாகுமேயன்றி, அது இந்தியர் எல்லார்க்கும் உரிய பொதுமதமாகாது. தற்காலத்தில் இந்தியாவில் தோன்றிய இந்துக்கள், மகம்மதியர் முதலிய எல்லாரையும் இந்தியர்கள் என்பது பொருந்தும். ஆனால் இந்தியாவில் தோன்றிய புத்தம், சைனம், வைதிகம், சுமார்த்தம், சைவம், வைணவம் முதலிய எல்லாமதங்களையும் இந்துமதம் என்று கூறுதல் பொருந்துமாறில்லை. ஆதலால் வடமொழி வேதத்தின் வேறான சிறந்த பிரமாணங்களையுடைய தமிழ்ச் சைவவைணவர்கள் தங்கள் சமயங்களை இந்துமதம் என்று கூறுதல் அறிவுக்குப் பொருந்துவதில்லை. இந்திய அல்லது இந்துமதங்கள்பல. அவற்றுள் சைவம் வைணவம் இருமதங்கள் என்றால் பொருந்துவதே.

வேதவாக்கியங்களுக்குச் சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஏற்றமுறையில் பொருள் கொள்ளுதல்பைபிளுக்கும் குரானுக்கும் சைவ வைணவப்பொருள் கொள்ளுதல் போலாகும். வேதத்திலும் உபநிடதங்களிலும் சிற்சில இடங்களில் சைவவைணவக் கருத்துக்கள் காணப்படுதல் பற்றி அவற்றைப் பிரமாணமாகச் சைவர்களும் வைணவர்களும் கொள்ளுதல் பொருத்தமின்றம். சைவச் சிறப்புப் பிரமாண நூல்களாகிய பன்னிரு திருமுறைகளுக்கும் பதினான்கு சாத்திரங்களுக்கும் மாறுபாடில்லாத வடநூற் பகுதிகளே தழுவத் தக்கன என்று சில ஆண்டுகளுக்கு முன் கூடிய சைவ மகாநாடு தீர்மானித்ததுகாண்க.

தமிழ்ச் சைவ வைணவ சமயங்கள் அடிப்படையில் ஒத்த கருத்துடையன. அது தொல்காப்பியம், திருவள்ளுவநூல், பரிபாடல் முதலிய சங்கநூலாராய்ச்சியாலும் தேவார திருவாசக திருவாய் மொழி திருமொழி ஆராய்ச்சியாலும் நன்குபுலனாகும். சைவம் வைணவம் என இரு பிரிவடங்கிய ஒரு சமயத்தைத் தமிழர் சமயமென்றுகருதி அதனைத் தமிழ் மக்கள் போற்றுவாராக. (நூலிலிருந்து)

தமிழர் சமயம் – கா. சுப்பிரமணியனார்
விலை:170/-
வெளியீடு: இந்து சமய அறநிலையத்துறை
Buy this book online: https://heritager.in/product/tamilar-samayam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers