முனைவர் ஆ.ராஜா

முனைவர் ஆ.ராஜா அவர்கள் பள்ளிப் படிப்பை, காயாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வடவாளம் அரசு உயர்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயின்றார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி வரலாற்றுத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும், தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல் வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய ஆய்வுப் பட்டங்களையும் பெற்றார். மைசூரிலுள்ள இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தில் கன்னட மொழிக்கான பட்டயத்தையும் பெற்றுள்ளார்.

ஆய்வில் பதினாறு ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், தமிழ்ப் பல் கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பல ஆய்வுத் திட்டங்களில் பணியாற்றியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் பழமையான திருக்கோயில்களைக் கண்டறிதல் திட்டத்திலும் ஒருங்கிணைப் பாளராகவும் பணியாற்றியவர். தற்பொழுது தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் துறைத் தலைவாராகப் பணியாற்றி வருகின்றார்.

தொல்லியல், வரலாற்றாய்வு சார்ந்த பல அமைப்புகளுடன் தொடர்புடைய இவர் மாநில, தேசிய, பன்னாட்டு அளவில் தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு சார்ந்த பல கருத்தரங்குகளிலும், பயிலரங்குகளிலும் பங்கேற்றுள் ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பங்குப் பெற்று பணியாற்றிய பெருமைக்குரியவர். 2021ஆம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதினையும் பெற்றுள்ளார். தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, கோயில்கள் குறித்து ஆய்வில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், தொடர்ந்து பல்வேறு தொல்லியல் இடங்களைக் கண்டறிந்து ஆராய்ந்து வருகிறார்.

Showing the single result