பழங்காசுகள் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. 1980ஆம் ஆண்டிலிருந்து காசுகளைச் சேகரிக்கத் தொட்ஙகினார் இந்நூலாசிரியர். வரலாற்றின் முக்கியமான காசுகள் தமிழ்நாட்டில் ஆற்றுப்படுகைகளி லேயே பெரும்பாலும் கிடைக்கின்றன. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆற்றுப்படுகைகளில் கிடைத்த காசுகள் மூலம் தமிழ்நாட்டு வரலாறு எழுத வரலாற்று அறிஞர்களுக்குப் பயன்படும் வகையில் இந்த நூல் வெளிவருகிறது. தமிழகக் காசுகளின் சிறப்பைப் பாமர மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழில் கூற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
தமிழரின் காசுகள் கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே தோற்றம் பெற்றன என்ற கருத்து அறிஞர்கள் பலரிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நூலில் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரிவினர், பல்வேறு காலகட்டங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தை ஆட்சிசெய்த எல்லாவம்ச மன்னர்களுடைய காசுகளையும் இந் நூலில் குறிப்பிட்டுள்ளேன். ஆசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், வரலாற்றாய்வாளர்கள், நாணய சேகரிப்பாளர்கள் ஆகியோருக்குப் பயன்படும் வகையில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.
தமிழகத்தில் கிடைத்த பண்டைய காசுகளை எவ்வாறு இனம் காண்பது, எழுத்துகள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் காசுகளின் ஒளிப் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆட்சிசெய்த ஒரே மன்னர் பல வகைக் காசுகளை வெளியிட்டுள்ளார்கள். இதுவரை கிடைக்கப்பெற்ற எல்லா காசு களையும் தேர்ந்தெடுத்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக் காசுகளில் தமிழ் – பிராமி, பல்லவ கிரந்தம், பல்லவர் காலத் தமிழ். சோழர்கால கிரந்தம், நாகரி, பாண்டியர் காலத் தமிழ், நாயக்கர் காலத்தில் உள்ள தெலுங்கு, கன்னடம், தமிழ், நாகரி எழுத்துகள், ஆர்க்காடு நவாபு, ஆங்கிலேயர் காலத் தில் உள்ள எழுத்து வரி வடிவங்கள் காசுகளில் எவ்வாறு அச்சடிக்கப்பட்டுள்ளன என்பதை இந்நூலில் காணலாம்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள காசுகள்:
- சங்க கால முத்திரைக் காசுகள்
- சங்ககாலச் சேரர் காசுகள்
- சங்க காலச் சோழர் காசுகள்
- சங்க காலப் பாண்டியர் காசுகள்
- சங்ககாலக் குறுநில மன்னர் காசுகள்
- களப்பிரர் காசுகள்
- பல்லவர் காசுகள்
- முத்தரையர் காசுகள்
- பாண்டியர் காசுகள்
- சேரர் காசுகள்
- சோழர் காசுகள்
- அ. வேணாடு சேரர் காசுகள்
- ஆ. கொங்கு சேரர் காசுகள்
- – தமிழகத்தில் ஹொய்சளர் வெளியிட்ட காசுகள்
- மதுரை சுல்தானியர்காசுகள்
- தமிழகத்தில் கிடைத்த விஜயநகரக் காசுகள்
- சம்புவராயர் காசுகள்
- திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன் காசுகள்
- சாளுவ திருமலைராஜன் காசுகள்
- கோனேரிராயன் காசுகள்
- மதுரை நாயக்கர் காசுகள்
- செஞ்சி நாயக்கர் காசுகள்
- தஞ்சைநாயக்கர் காசுகள்
- இராமநாதபுரம் சேதுபதி காசுகள்
- தஞ்சைமராட்டியர் காசுகள்
- ஆர்க்காடு நவாபு காசுகள்
- தமிழகத்தில் கிடைத்த அயல்நாட்டுக் காசுகள்
- சாதவாகனர்காசுகள்
- முற்கால வாணாதிராயர் காசு
- விஷ்ணுகுண்டியர்காசுகள்
- தர்மபுரி ராமண்ண நாயக்கர் காசுகள்
- சமயக்காசுகள்
- வீரராயன் பணம்
- பழனிகாசுகள் பீஜப்பூர்சுல்தான் அதில்ஷாதமிழகத்தில் வெளியிட்ட காசுகள்
- தமிழகத்தில் கிடைத்த கண்டீரவ நரசராஜ உடையார் காசுகள் திப்பு சுல்தான் தமிழகத்தில் வெளியிட்ட காசுகள்
- புதுக்கோட்டை தொண்டைமான் காசுகள்
- இந்தோ-ஐரோப்பிய காசுகள்
Buy: https://www.heritager.in/product/thamizhaga-kaasugal/
WhatsApp: wa.me/919786068908
Price: 1200 + shipping
நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு.
நாணயவியல் சார்ந்த நூல்கள்
- தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 1 (1994) – Rs. 40
- தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 3 (2004) – Rs. 60
- தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 4 (2008) – Rs. 75
- பல்லவர் காசுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) (2004) – Rs.100
- காசு இயல் கட்டுரைகள் (2005) – Rs. 60
- சேதுபதி காசுகள் (2005) – Rs. 40
- தஞ்சை மராட்டியர் காசுகள் (2005) – Rs.60
- ஆர்க்காடு நவாபுகளின் தமிழ்க்காசுகள் (2005) – Rs. 60
- செஞ்சி நாயக்கர் காசுகள் (2005) – Rs.60
- பாண்டியர் காசுகள் (2006) – Rs.60
- சேரர் காசுகள் (வேணாடு, கொங்கு நாடு) (2006) – Rs. 60
- சங்க காலக் காசுகள் (2006) – Rs.150
- சங்க கால முத்திரைகள் (2008) – Rs.75
- சங்க கால மோதிரங்கள் (2008) – Rs. 100
- தமிழகக் காசுகள் (2014) (தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்ற நூல்) – Rs.1200
- தமிழக முத்திரைகள் மோதிரங்கள் (2016) – Rs. 600
- சம்புவராயர் காசுகள் (2017) – Rs. 120
- மதுரை சுல்தானியர் காசுகள் (2018) – Rs.150
- வரலாறு கூறும் சோழர் காசுகள் (2018) – Rs. 400
- தமிழக முத்திரைக் காசுகள் (2018) – 120
- தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் (தஞ்சை, மதுரை, செஞ்சி) (2019) – Rs. 800
- தமிழகப் பாளையக்காரர், ஜமீன்தார் காசுகள் (2019) – Rs. 175
- ஆய்வு நோக்கில் பல்லவர் காசுகள் (2019) – Rs. 600
- தமிழகக் காசுகளில் எழுத்துகள் (2019) – Rs. 50
- மறவர் நாட்டுக் காசுகள் (2020) – Rs. 200
- ஆர்க்காடு நவாபு காசுகள் (2020) – Rs. 700
- சங்கத் தமிழர் காசுகள் (2021) – Rs. 600
- சங்க கால மலையமான் காசுகள் (2021) – Rs. 100
- சங்ககாலச் சேரர் காசுகள் (2021) – Rs. 200
- சங்ககாலச் சோழர் காசுகள் (2021) – Rs. 175
- சங்க காலப் பாண்டியர் காசுகள் (2021) – Rs. 200
- செஞ்சி நாயக்க மன்னர்கள் காசுகள் (2021) – Rs. 350
- மதுரை நாயக்க மன்னர்கள் காசுகள் (2021) – Rs.300
- தஞ்சை நாயக்க மன்னர்கள் காசுகள் (2021) – Rs. 400
- தஞ்சாவூர் மராட்டிய மன்னர் காசுகள் (2021) – Rs. 200
- பிற்காலப் பாண்டியர்காசுகள் (2021) – Rs. 400
- வேணாடு சேரர் காசுகள் (2021) – Rs. 200
- பிற்காலக் கொங்குச் சேரர் காசுகள் (2021) – Rs. 200
நூல் கிடைக்குமிடம்:
Heritager.in
9786068908
This Book May Include Handling and Shipping Charges