தமிழுக்குத் தொண்டு செய்வதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதைய்யர் 1930 களில் பல்வேறு இதழ்களில் எழுதிய 12 சிறு சிறு கட்டுரைகளைச் சேர்த்து “நான் கண்டதும் கேட்டதும்’ என்ற பெயரிலும், அதே காலகட்டத்தில் எழுதிய 20 கட்டுரைகளை (இவற்றில் ஐந்து கட்டுரைகள் உ.வே.சா. எழுதிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் உள்ளன) சேர்த்து “புதியதும் பழையதும்’ என்ற பெயரிலும் 1936 ஆம் ஆண்டில் தனித்தனி நூலாக வெளியிட்டார். பின்னர் இரண்டையும் ஒரே பதிப்பாக உ.வே.சா. நூல் நிலையம் வெளியிட, அப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போது இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.