திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் சிறுதெய்வ வழிபாட்டு விழாக்கள் கொடை விழா என அழைக்கப்படுகின்றன. இந்தக் கொடை விழா பெரும்பான்மையாக தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறுகின்றன. எனவே இது முன்பு கோடை விழா என்றழைக்கப்பட்டு, பின்னர் கொடை விழா என்று மருவி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பாண்டிய நாட்டுக் கொடை விழா என்பது பாண்டிய மன்னர்கள் காலத்தில், பொதுமக்களுக்கு தானியங்கள், ஆடைகள், அணிகலன்கள், பொன், பொருள் போன்றவற்றை வழங்கி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த ஒரு நிகழ்வு எனக் கருதப்படுகிறது.
நூல்: பாண்டிய நாட்டுக் கொடை விழாக்கள்
ஆசிரியர்: செய்தலை மணியன்