கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களும் பாளையக்காரர்களும் – புலவர் செ. இராசு

600

கொங்கு நாட்டை 17 – 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சிபுரிந்த 40 வட்டாரத் தலைவர்களைப் பற்றிய தொகுப்பே இந்த நூலாகும். இவ்வட்டாரத் தலைவர்களில் பாதி பேர் நாயக்கர் என்ற பட்டம் கொண்டவர். மற்றவர் கவுண்டர், மன்றாடி, வாணவராயர் என்ற பட்டங்களைப் பெற்றவர்.  அந்தந்த வட்டாரப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தத் தலைவர்கள் நீர் நிலைகள், அணைகள் அமைத்து பெரும் பங்காற்றியுள்ளதை இந்த ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.
Categories: , , , , Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களும் பாளையக்காரர்களும் அரசுக்கு உதவுபவர்களாக விளங்கினர், அரசுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாகவும் இவர்கள் விளங்கினர்.

அறிமுகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் கடந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து தம் ஆய்வுப் பணியைச் செய்து வரும் புலவர் முனைவர் செ. இராசு அவர்கள் கொடுத்துள்ள பல சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று.

கொங்கு நாட்டில் 17-19-ஆம் நூற்றாண்டுகளில் வட்டாரத் தலைவர்களாக ஆட்சி புரிந்த 40 குடும்பங்களைப் பற்றிய ஆவணங்கள் அடங்கிய தொகுப்பு இது. இவ்வாவணங்களில் பல 1800-ஐ ஒட்டி கர்னல் மெக்கன்சி என்ற ஆங்கில தலைமை நில அளவையாளர் முயற்சியில் தொகுக்கப்பட்டு, சென்னை கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் பேணிக் காக்கப்படடு வரும் மெக்கன்சி சுவடிகளில் உள்ளவை.

அவற்றில் பல தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் பாளையப்பட்டு வம்சாவளி என்ற தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவையல்லாமல் வேறு வெளியீடுகளில் உள்ளவற்றையும், இதுவரை வெளிவராத பல ஆவணங்களையும் திரட்டி இத்தொகுப்பை உருவாக்கியுள்ளார்.

இவ்வட்டாரத் தலைவர்களில் பாதி பேர் “நாயக்கர்” என்ற பட்டம் கொண்டவர். மற்றவர் கவுண்டர், மன்றாடி, வாணவராயர் என்ற பட்டங்களைப் பெற்றவர். நாயக்கர் என்ற பட்டம் விஜயநகர அரசு (1350-1650) காலத்தில் போர்த் தலைவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பட்டம். அப்பொழுது இது சாதிப்பட்டம் அல்ல.

இதில் பல சமூகத்தினரும் அடங்குவர். பிராமணர்,வேடர், யாதவர், பலிஜர், வேளாண்சாதியினர் எனப் பலரும் போர்த் தொழிலால் நாயக்கர் பட்டம் பெற்றனர். பிற்காலத்தில் இது சாதிப்பட்டமாக மாறியது. நாயக்கருள் பலர் கன்னடம், தெலுங்கு பேசுவோராக இருந்தவர். தமிழ் பேசும் நாயக்கரை, “நாயனார்” என்று கல்வெட்டுகள் குறிப்பிடும். போர்த் தலைவர்களாக இருந்து வட்டார ஆட்சியாளர்களாக உருமாறிய காலத்தில் நாயக்கத்தனம் அல்லது நாயங்கரம் என்று அழைக்கப்பெறும் நாயக்க ஆட்சிமுறை தோன்றியது.

இதற்கு முழு உருவம் கொடுத்தவர் கி.பி. 1509-29-இல் ஆண்ட கிருஷ்ணதேவராயர். அதன்பின் ஒரு 150 ஆண்டுகள் இது நீடித்தது. 1650-ஐ ஒட்டி விஜயநகரப் பேரரசு மறைந்த பிறகு, நாயக்கர் ஆங்காங்கு தன்னாட்சித் தலைவர்களாக மாறினர். அந்த நிலையில் சில பெரிய நாயக்கர் (தஞ்சாவூர், மதுரை, இக்கேரி நாயக்கர் முதலியோர்) அதே பெயரிலும் ஏறக்குறைய கி.பி. 1800 வரை ஆண்டு வந்தனர். 1790 – 1800-இல் பாளையப்பட்டுப் போரைத் தொடர்ந்து ஆங்கில ஆட்சி தொடங்கிய நேரத்தில் பல பாளையப்பட்டுக்கள் மறைந்து விட்டன. பல ஆங்கில ஆட்சிக்கு அடங்கியவையாக மாறின.

நாயக்கர் அல்லாது மன்றாடி, கவுண்டர் முதலிய பிற பட்டங்கள் கொண்டோர் கொங்குப் பகுதியிலேயே உள்ளூர்த் தலைவர்களாக இருந்து ஆண்டவர்கள். அவர்களிலும் பலர் வேறு வேறிடங்களிலிருந்து குடிபெயர்ந்து இறுதியில் ஒரு வட்டாரத்தில் நிலையாகத் தங்கினர் என்று சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

எல்லா ஆவணங்களிலும் அவ்வக் குடும்பங்களின் கொடி வழி அல்லது வம்சாவளி குறிக்கப்படுகின்றது. சில குடும்பங்களுக்கு இருபது தலைமுறைக்கு மேல் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவற்றுள் முதல் பகுதியை அப்படியே கொள்ள முடியாது. பின்பாதிப் பெயர்கள் உண்மையான பெயர்களாக இருக்க வாய்ப்புண்டு. அவற்றை மேலும் உறுதிப்படுத்தக் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளைப் பார்க்க வேண்டும். பொதுவாக, இவற்றுள் பல குடும்பங்கள் கி.பி. 1500-ஐ ஒட்டித் தொடங்குவதாகக் கொள்ள இடமுண்டு. ஒரு சிலர் (காலிங்கராயர் முதலியோர்) 13-ஆம் நூற்றாண்டு தொடங்கிக் காணப்படலாம்.

இவ்வாவணங்களில் அரசியல் செய்திகளினூடே ஆங்காங்கு சில சமூகச் செய்திகளும் அரிதாகக் காணப்படுகின்றன. அந்தந்த வட்டாரத்துப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல தலைவர்கள் நீர் நிலைகள், அணைகள் அமைப்பது முதலிய செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்கலாம்.

இச்செய்திகள் குறைவாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சமகால காலனி ஆதிக்கக் கால அரசு நிர்வாக ஆவணங்கள், பிற குறிப்புகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்த்தால், பல புதிய விளக்கங்கள் கிடைக்கும். காலனி ஆதிக்கக் கால நன்றாக மதிப்பிட இவை பெரிதும் உதவும். மேலாய்வுக்கு வழி வகுக்கும். இந்த நல்ல இலக்கியங்கள், தொகுப்பைச் செய்து தந்துள்ள புலவர் அய்யா அவர்களுக்குப் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். வரலாற்றை

கோவை. எ.சுப்பராயலு

உள்ளடக்கம்:

பட்டக்காரர்கள்
1. காக்காவாடி நல்லண்ண கவுண்டர்
2. காங்கயம் பல்லவராயர்
3. காடையூர் காங்கேய மன்றாடியார்
4. சங்கரண்டாம்பாளையம் வேணாடுடையார்
5. சேவூர் சோழியாண்டாக் கவுண்டர்
6. தலைய நாட்டு வள்ளல் கவுண்டர்
7.நிமிந்தப்பட்டி நீலியப்ப கவுண்டர்
8. பரமத்தி இளையா நாயக்கர்
9. பழையகோட்டை சர்க்கரை மன்றாடியார்
10.பொருளூர் பெரியாக்கவுண்டர்

11. மூலனூர் தொண்டைமான்

பாளையக்காரர்கள்

12. ஆண்டிப்பட்டி பொம்மய நாயக்கர்
13.ஆயக்குடி கொண்டம நாயக்கர்
14. ஆவலப்பன்பட்டி சோதெய நாயக்கர்
15.இடையகோட்டை நாயக்கர்
16. இரட்டயம்பாடி தொப்ப நாயக்கர்
17. இராமசாமித் தொப்ப நாயக்கர்

18. இராமபட்டணம் எர்ரப்ப கவுண்டர்
19. ஊத்துக்குளி காலிங்கராயர்
20.கவசை மசக்காளி மன்றாடியார்
21. சமத்தூர் வாணவராயர்
22. சல்லிப்பட்டி எரம நாயக்கர்
23. சிஞ்சுவாடி சம்பே நாயக்கர்
24. சேந்தமங்கலம் இராமச்சந்திர நாயக்கர்
25. சேலம் சின்னம நாயக்கர்
26.சோத்தம்பட்டி சோத்தம நாயக்கர்
27. தம்மம்பட்டி மாதா நாயக்கர்
28. தாரமங்கலம் கட்டி முதலிகள்
29. துங்காவி சீல நாயக்கர்
30. நெகமம் தேவ நாயக்கர்
31. பழனி சின்னோப நாயக்கர்
32. பாலசமுத்திரம் பாலராசா
33. புரவிபாளையம் கோப்பண மன்றாடியார்
34. மயிலாடி சின்னம நாயக்கர்
35. மாம்பரை தொப்புள் நாயக்கர்
36.மெட்டராத்தி நத்தம நாயக்கர்
37. மைவாடி நாயக்கர் பாளையம்
38. மோரூர்க் காங்கேயர்
39. விருப்பாச்சி (திருமலை) சின்னப்ப நாயக்கர்
40. வேடப்பட்டி திம்ம நாயக்கர்

அறிமுகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் கடந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து தம் ஆய்வுப் பணியைச் செய்து வரும் புலவர் முனைவர் செ. இராசு அவர்கள் கொடுத்துள்ள பல சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று.

கொங்கு நாட்டில் 17-19-ஆம் நூற்றாண்டுகளில் வட்டாரத் தலைவர்களாக ஆட்சி புரிந்த 40 குடும்பங்களைப் பற்றிய ஆவணங்கள் அடங்கிய தொகுப்பு இது. இவ்வாவணங்களில் பல 1800-ஐ ஒட்டி கர்னல் மெக்கன்சி என்ற ஆங்கில தலைமை நில அளவையாளர் முயற்சியில் தொகுக்கப்பட்டு, சென்னை கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் பேணிக் காக்கப்படடு வரும் மெக்கன்சி சுவடிகளில் உள்ளவை.

அவற்றில் பல தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் பாளையப்பட்டு வம்சாவளி என்ற தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவையல்லாமல் வேறு வெளியீடுகளில் உள்ளவற்றையும், இதுவரை வெளிவராத பல ஆவணங்களையும் திரட்டி இத்தொகுப்பை உருவாக்கியுள்ளார்.

இவ்வட்டாரத் தலைவர்களில் பேர் பாதியினர் “நாயக்கர்” என்ற பட்டம் கொண்டவர். மற்றவர் கவுண்டர், மன்றாடி, வாணவராயர் என்ற பட்டங்களைப் பெற்றவர். நாயக்கர் என்ற பட்டம் விஜயநகர அரசு (1350-1650) காலத்தில் போர்த் தலைவர்களுக்காகக் கொடுக்கப்பட்ட பட்டம். அப்பொழுது இது சாதிப்பட்டம் அல்ல.

இதில் பல சமூகத்தினரும் அடங்குவர். பிராமணர்,வேடர், யாதவர், பலிஜர், வேளாண்சாதியினர் எனப் பலரும் போர்த் தொழிலால் நாயக்கர் பட்டம் பெற்றனர். பிற்காலத்தில் இது சாதிப்பட்டமாக மாறியது. நாயக்கருள் பலர் கன்னடம், தெலுங்கு பேசுவோராக இருந்தவர். தமிழ் பேசும் நாயக்கரை, “நாயனார்” என்று கல்வெட்டுகள் குறிப்பிடும். போர்த் தலைவர்களாக இருந்து வட்டார ஆட்சியாளர்களாக உருமாறிய காலத்தில் நாயக்கத்தனம் அல்லது நாயங்கரம் என்று அழைக்கப்பெறும் நாயக்க ஆட்சிமுறை தோன்றியது.

இதற்கு முழு உருவம் கொடுத்தவர் கி.பி. 1509-29-இல் ஆண்ட கிருஷ்ணதேவராயர். அதன்பின் ஒரு 150 ஆண்டுகள் இது நீடித்தது. 1650-ஐ ஒட்டி விஜயநகரப் பேரரசு மறைந்த பிறகு, நாயக்கர் ஆங்காங்கு தன்னாட்சித் தலைவர்களாக மாறினர். அந்த நிலையில் சில பெரிய நாயக்கர் (தஞ்சாவூர், மதுரை, இக்கேரி நாயக்கர் முதலியோர்) அதே பெயரிலும் ஏறக்குறைய கி.பி. 1800 வரை ஆண்டு வந்தனர். 1790 – 1800-இல் பாளையப்பட்டுப் போரைத் தொடர்ந்து ஆங்கில ஆட்சி தொடங்கிய நேரத்தில் பல பாளையப்பட்டுக்கள் மறைந்து விட்டன. பல ஆங்கில ஆட்சிக்கு அடங்கியவையாக மாறின.

நாயக்கர் அல்லாது மன்றாடி, கவுண்டர் முதலிய பிற பட்டங்கள் கொண்டோர் கொங்குப் பகுதியிலேயே உள்ளூர்த் தலைவர்களாக இருந்து ஆண்டவர்கள். அவர்களிலும் பலர் வேறு வேறிடங்களிலிருந்து குடிபெயர்ந்து இறுதியில் ஒரு வட்டாரத்தில் நிலையாகத் தங்கினர் என்று சில ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

எல்லா ஆவணங்களிலும் அவ்வக் குடும்பங்களின் கொடி வழி அல்லது வம்சாவளி குறிக்கப்படுகின்றது. சில குடும்பங்களுக்கு இருபது தலைமுறைக்கு மேல் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவற்றுள் முதல் பகுதியை அப்படியே கொள்ள முடியாது. பின்பாதிப் பெயர்கள் உண்மையான பெயர்களாக இருக்க வாய்ப்புண்டு. அவற்றை மேலும் உறுதிப்படுத்தக் கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளைப் பார்க்க வேண்டும். பொதுவாக, இவற்றுள் பல குடும்பங்கள் கி.பி. 1500-ஐ ஒட்டித் தொடங்குவதாகக் கொள்ள இடமுண்டு. ஒரு சிலர் (காலிங்கராயர் முதலியோர்) 13-ஆம் நூற்றாண்டு தொடங்கிக் காணப்படலாம்.

இவ்வாவணங்களில் அரசியல் செய்திகளினூடே ஆங்காங்கு சில சமூகச் செய்திகளும் அரிதாகக் காணப்படுகின்றன. அந்தந்த வட்டாரத்துப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல தலைவர்கள் நீர் நிலைகள், அணைகள் அமைப்பது முதலிய செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்கலாம்.

இச்செய்திகள் குறைவாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சமகால காலனி ஆதிக்கக் கால அரசு நிர்வாக ஆவணங்கள், பிற குறிப்புகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்த்தால், பல புதிய விளக்கங்கள் கிடைக்கும். காலனி ஆதிக்கக் கால நன்றாக மதிப்பிட இவை பெரிதும் உதவும். மேலாய்வுக்கு வழி வகுக்கும். இந்த நல்ல இலக்கியங்கள், தொகுப்பைச் செய்து தந்துள்ள புலவர் அய்யா அவர்களுக்குப் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். வரலாற்றை

கோவை.

எ.சுப்பராயலு

முன்னுரை

“கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும்” எனும் இந்நூல் அவ்வக்காலத்தில் நாடாளும் அரச மரபினரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு தங்களுக்கு உரிமையாக அளிக்கப்பட்ட ஊர்ப்பகுதிகளில் நிர்வாகம் செய்தவர்களின் பரம்பரை பற்றிய சில செய்திகளைச் சுருக்கமாகக் கூறுவதாகும்.

செயற்கரிய செயல் செய்தவர்களோ, நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ பேருதவி செய்தவர்களோ, அரசுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்தவர்களோ ஒரு பகுதித் தலைவராக நியமிக்கப்பட்டு, அவர்கள் பரம்பரையினர் தொடர்ந்து தலைவர்களாக நிர்வாகம் செய்தால், அவர்கள் பட்டக்காரர், பாளையக்காரர், ஜமீன்தார் என்று அழைக்கப்பெறுவர். தேவைப்பட்டபோது அவர்கள் அரசுக்கு உதவுவர். அரசுக்கும், மக்களுக்கும் இடையில் தொடர்பாளர்களாக அவர்கள் விளங்குவர்.

ஒரு பகுதியை நிர்வாகம் செய்தவர் இறந்தால், அவரது வாரிசுதாரர் அடுத்த நிர்வாகியாக நியமனம் செய்வதைப் பட்டம் கட்டுதல், பட்டாபிஷேகம் செய்தல் என்பர். இவ்வாறு பட்டம் கட்டியவர் பட்டக்காரர் என்று அழைக்கப் பெறுவர். அல்லது அரசு சார்பில் ஒருவர் தலைவராக நியமனம் செய்து, அதற்குரிய ‘பட்டயம்’ வழங்குவர். அவ்வாறு பட்டயம் பெற்றவர் ‘பட்டயக்காரர்’ என்று அழைக்கப்படுவார். பட்டயக்காரர் என்ற சொல், பட்டக்காரர் என்று மருவியதாகவும் கொள்ளலாம். “சர்வமானியப் பட்டயமும் பாலித்தோமே” என்பது ஒரு பாடல் பகுதி.

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, பட்டக்காரர் என்பதற்கு, “தொட்டியர் கொங்கு வேளாளர் சாதித் தலைவர்” என்று கூறுகிறது.

  1. கொங்குச் சமுதாயத்தில்,
  2. காடையூர் காங்கேய மன்றாடியார்,
  3. பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்,
  4. காங்கேயம் பல்லவராயர்,
  5. சங்கராண்டாம்பாளையம் வேணாடுடையார்

ஆகிய நான்கு மரபினரையும் பட்டக்காரர்கள் என்று கூறும் மரபு உள்ளது. இவர்கள் கொங்கு மண்டல சமூகத் தலைவர்கள் ஆவர். சமூக நீதி காக்கும் கடமையில் தம் ஆட்சி எல்லை கடந்து கொங்கு மண்டலம் முழுவதும் இவர்கள் அதிகாரம் செலுத்துவர். கொங்கு வேளாளர் அன்றி, அனைத்து மக்களும் இவர்கள் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவர்.

அமரர் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களிடம் காட்டினார். அருட்செல்வர் அவர்கள், எல்லாப் பட்டக்காரர், பாளையக்காரர் பற்றி எழுதுங்கள், நான் வெளியிடுகிறேன் என்றார். அதன் காரணமாகவே இத்தொகுப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இது எல்லாப் பட்டக்காரர் – பாளையக்காரர் பற்றிய மிக விரிவான முழு நூல் அல்ல.

இது ஒரு தொடக்க முயற்சியே. தீவிரக் கள ஆய்வு செய்து ஆவணங்களுடன் விரிவான நூல் வெளிவர இந்நூல் ஒரு முன் முயற்சியே. எதிர்கால ஆய்வாளர்கள் இப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்வது அவசியம் ஆகும். வரலாற்று நூல்களில் இதுவரை இடம் பெறாத பற்பல அரிய செய்திகள்

  • பாளையக்காரர் வரலாறு மூலம் தெரிகின்றன.
  • பாளையக்காரர் – பட்டக்காரர் பதவி ஏற்கும் முறை.
  • கொடைக்கானல் பகுதியில் சமவெளி மக்கள் குடியேற்றம்.
  • பாளையக்காரர் இறந்தால் மனைவிமார் உடன்கட்டையேறிய விபரம். பாளையக்காரர்கள் ‘துபாஷி’ (மொழி பெயர்ப்பாளர்) மூலம் கம்பெனி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டது. *
  • மற்ற சாதிப் பெண்களை மணம் செய்தால் ‘பால் சாஸ்திரம்’ மூலம் தங்கள் சாதியில் சேர்த்தல்.
  • பலதார மணம் ஏற்றுக் கொள்ளல்.
  • மகன் இல்லாவிட்டால், தம்பி பட்டம் ஏற்பது.
  • சில தனிப்பட்டவரின் வீரச் செயல்கள்.
  • ஆற்றைத் திசை திருப்பியது.
  • கனவில் சில செய்திகள் வருவது உறுதிப்படுவது.

வரலாற்றுப் பணியில்

செ.இராசு

Weight1 kg