அறியப்படாத தமிழ்மொழி – முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்

300

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Premium Quality
  • Secure Payments
  • Satisfaction Guarantee
  • Worldwide Shipping
  • Money Back Guarantee

அறியப்படாத தமிழ்! மறுக்கப்பட்ட தமிழ்! மறைக்கப்பட்ட தமிழ்! இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்! அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள்.

அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்! தொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை…ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை… அறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே,

இந் நூலின் ‘நோக்கம்’. கால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம் குட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது!

Weight 0.4 kg