கேரள-தமிழ்நாட்டுப் பாணர் வழக்காறுகளில் சங்க இலக்கியம்

500

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தமிழகத்தில் மட்டுமின்றி உலகின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு மொழியின் ஆரம்பப் பாடகர்களாகப் பாணர்களே அறிமுகம் ஆகின்றனர். தங்களை அறியாமலேயே இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களாக உள்ளனர். தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் பிதாமகர்கள். நாட்டின் ஓரிடத்தில் நடக்கும் நிகழ்வுகளை மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்றவர்கள். மன்னரின் புகழ் பாடியவர்கள். இன்றைய ஊடகங்கள் செய்யும் தகவல் தொடர்புகளை அன்றே செய்தவர்கள். கலைத் தொழிலையே தாங்கள் குலத் தொழிலாக, குடும்பத்தொழிலாகக் கொண்டு நாடுகள் தோறும், சுற்றம் சூழ அலைந்து திரிந்தவர்கள். மக்கள் (ஊர்) மன்றங்களைப் பாட்டு மன்றங்களாக்கியவர்கள். பெரும்பாணர், சிறுபாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பலப் பிரிவுகளிருப்பினும் பாட்டே அவர்களது உயிர் மூச்சு ஆகும். இசைக்கருவிகளைச் சுமக்கும் இளம்பாணர்கள் முதல், குடும்பத்திலுள்ள அனைவரும் இசையோடு தொடர்புடையவர்கள். பாடுநர்குழாமில் பல்வேறு பிரிவினர்கள் இடம்பெற்றிருந்தாலும் பாணர்களே முதன்மையானவர்களாகவும், போர்ச் சமுதாயத்திற்குத் தேவையானவர்களாகவும் இருப்பதனை அறிய முடிகிறது.

கேரளத்தில் இன்று நிலைத்த குடிகளாகப் பாணர்கள் வாழ்ந்தாலும் அவர்களது சில சடங்குகளும், பழக்கவழக்கங்களும் சங்கப் பாணரின் நீட்சியாகவே விளங்குகின்றன. கேரளச் சமூகத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருத மேற்கட்டுமானத்தை நீக்கிப் பார்த்தால் ஆதித்தமிழரின் பண்பாட்டு மணம் வீசுவதை உணரமுடியும். தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியப் பகுப்பான அகப்புறக் கோட்பாடுகள் கேரள நாடோடி நாடகத்தில் சிறந்த பங்களிப்பினைக் கொண்டிருப்பதாகக் கேரள நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Publisher: Chennai: Central Institute of Classical Tamil

Weight2 kg