இரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏண்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க. ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ. அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு, பழமொழிகள், சொலவடைகள், proverbs, phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க. எல்லோரும் சொல்வாங்க நிறைய பழமொழி சொல்லிட்டே இருப்பாங்க. பார்ப்பானுக்கு மூப்பு பறையன் அதே எங்கம்மா சொன்னதுதான். அப்புறம் யாரும் சொல்ல நான் பார்க்கல. கடைசியா முப்பது , முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து எங்க மாமனார் சொல்லி நான் கேட்டேன்.
இத்தனைக்கும் எங்கம்மா பள்ளிக்கூடத்திற்கு போகாத ஆளு. மூணு நாள் தான் பள்ளிக்கூடத்திற்குப் போனேன்னு சொல்லி, கடைசி வரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா. மனித உறவுகள பத்தி நிறைய பேசுவாங்க. இந்த ஊர்ல வெள்ளைக்காரன் கண்ணுவச்சா ஒரு பொருள் விளங்காது அப்படிண்ணுவா. எங்க வீட்டுல இருந்த ஆட ஒரு வெள்ளைகாரன் விலைக்கு கேட்டானாம். எங்கப்பா கொடுக்க மாட்டேண்டாராம். அந்த ஆடு செத்துப் போச்சாம். அதான் சொல்லுவா.
Edition: 1
Year: 2022
ISBN: 9788193269121
Page: 120
Format: Paper Back
Language: Tamil
Publisher:
தடாகம் வெளியீடு