கோட்சே வெளிப்படையாக புகழப்பட்டு அவனுக்கு சிலையும் கோயிலும் இந்நாட்டில் அமைக்கப்படும் என்று இரண்டு தசாப்தங்களுக்கு முன் கூறியிருந்தால் யாரும் அதனை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று இவை அனைத்தும் நம் கண் முன் அரங்கேறி வருகின்றன.
காந்தியின் உண்மை வரலாறும் சிந்தனைகளும் அவரை நினைவு கூர்வதற்காக அமைக்கப்பட்ட மண்டபங்களிலும் அருங்காட்சியங்களிலும் மறைக்கப்பட்டும் சுருக்கப்பட்டும் வரும் நிலையில் காந்தியின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முக்கியமான பணியை இந்நூல் செய்கிறது.