மரபுக் கட்டடக்கலை Marabu Kattadakkalai – கலைச்செம்மல் கோ.திருஞானம்

Original price was: ₹600.Current price is: ₹590.

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

மரபுக் கட்டடக்கலை – கலைச்செம்மல் கோ.திருஞானம் ஓவியர் – சிற்பி மாமல்லபுரம்

புத்தக உள்ளடக்கம்

திருக்கோயில் பொது அமைப்பு
அளவு முறைகள்
திசை அறிதல்
ஆயாதி கணிதம்
வாஸ்து
பதவின்யாச விதிகள்
மனையைத் தேர்ந்தெடுத்தல் பிரதமேஷ்டிகா விதி
கருவறை பதவின்யாசம்
பதவின்யாச அடிப்படையில் பிராகார இலக்கணம்
திருச்சுற்றுக் கோயில் இலக்கணம்
உப பீடம்
கோமுகை இலக்கணம்
பலகை மற்றும் பாத அணி இலக்கணம்
பலகணி இலக்கணம்
அதிட்டானம்
வேதிகை இலக்கணம்
சுவர்த்தூண் இலக்கணம்
போதிகை இலக்கணம்
பிரத்தர இலக்கணம்
விருத்தஸ்புடித இலக்கணம்
கும்பலதா – தோரண இலக்கணம்
வாயில் இலக்கணம்
கோட்டப் பஞ்சர இலக்கணம்
ஒரு நிலை விமானம் (ஏகதலம்)
துரி இலக்கணம் (ஸ்தூபி)
கால்புறவாய் அளவுகள் (பிராசாத பிரமாணங்கள்)
விமான அமைப்பு
சேத்திர – கிராம கட்டட அமைப்பு இலக்கணம்

ஓவியக் கலை சிற்பக் கலை, கட்ட்டக் கலை பழங்கற்கால மனிதர்கள் தம் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த கோட்டோவியங்களைப் பாறைகளில் வரைந்தனர். அதன் பின் தன் தேவைக்கு வேண்டிய உணவு, உடை இவற்றிற்கெளப் பல பொருட்களைச் செய்ய முயற்சி செய்யும்போது, கலைநயம் உண்டாயிற்று. அது ஒவியம், சிற்பக்கலையாக மலர்ந்தது தனக்குத் தேவையான பாதுகாப்பான உறையுள் தேடும்போது குன்றுகளையும், குகைகளையும் தேர்ந்தெடுத்தனர். அதன்பிள, இலை, தழைகளால் ஆன குடில்களும், பின் மண், மரம், செங்கல், கண்ணாம்பு. பின்னாளில் கருங்கல் என வளர்ந்தது, மனிதர்கள் ஒன்றுகூடி வாழத்தொடங்கும் போது பொது இடங்கள் அமைத்தனர். அது தெருக்கள் கூடுமிடங்கள், ஊரின் நடு, ஆற்றங்கரை, ஏரிக்கரை எனப் பல இடங்களைத் தேர்ந்தெடுத்துப் பொது இல்லங்களை அமைத்தனர். அதன் பின் அவை கோயிலாக ஆக்கப்பட்டதை நம் தொன்மை இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.

இவ்வாறு காலங்கள் மற்றும் கிடைக்கும் பொருடகளுக்கேற்பப் படிப்படியாக மாறி வந்த நம் பழங் கட்டடக்கலை. பல்லவர் காலம், சோழர்காலம், விஜயகநர அரசர்கள் காலம் வரை மிக உன்னத நிலையை அடைந்திருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அப்படிப்பட்ட கட்டடக்கலை, சிற்ப ஓவியக்கலைகளுக்கெனப் பல நூல்கள் இருந்தன. அவற்றில் சில தற்காலத்தில் கிடைக்கப்பெறுகிறது, அவை,

1. மயமதம்
2. விஸ்வகர்மீயம்
3. மானசாரம்
4. ஐந்திர மதம்
5. மனுசாரம்
6. காஸ்யபம்
7. சாரஸ்வதீயம்
8. பிராம்மீயம்
9, சகளாதிகாரம்

இவை அனைத்தும் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைப் பற்றி கூறும் சிறந்த நூல்களாகும்.

இந்நூல்களை வழிநூல்களாகக் கொண்டும், தங்களது மூதாதையர் விட்டுச் சென்ற கையேட்டுச் செய்திகளையும், தாங்களும், தங்கள் முன்னோர்கள் செய்த கலைப் படைப்புக்களின் பட்டறிவைக் கொண்டு மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் ஆசிரியர் பெருமக்கள் (அன்று பயிற்சிக் கூடம்) அளித்த குறிப்புகளின் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டவையே இம்மரபுக் கட்டடக்கலை நூலாகும்.

என் ஆசிரியரும், இன்று சிற்பக் கட்டடக் கலைவுலகில் சிறந்த பேரறிஞரும், குமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலை சமைத்தவருமான முனைவர் வை.கணபதி ஸ்தபதி அவர்கள் எனக்கு அளித்த ஊக்கமும் ஆக்கமுமே இந்நூல் உருவாகத் துணைபுரிந்தன.

அக்காலத்தில் மேலும் எனக்கு இவ்வோவிய, சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவையும், நுட்பத்தையும் தெளிவுபடுத்திய நினைவில் வாழும். பெருமைமிகு தி.குமரேச ஸ்தபதி, பெருமைமிகு நீலமேக ஸ்தபதி மற்றும் பெருமதிப்புக்குரிய ஓவியக் கலைஞர் தொ.சின்னையா அவர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டவனாவேன்.

இந்நூல், முதல் தொகுப்பாகும். இரண்டாம் தொகுப்பில் மரபுக் கட்டடக்கலையின் முதல் தொகுதியில் இடம் பெற்றவை அல்லாமல் மற்ற அமைப்புகள் அனைத்தும் வரைபடங்களுடன் வெளியிடப்படும்.

ஓவியக்கோடுகள், உருவக்கோடுகள், படிமக் கோடுகள் ஆகியவை நூலாக ஆக்கவும், வெளியிடவும் எனது வாழ்வுக் கோடுகள் இன்றும், என்றும் நிலையாக இருக்க மூலமாயிருந்த எனதரும் நண்பர் பாவலர் பல்லவன் அவர்கள் இந்நூலையும் செம்மைப்படுத்திக் கொடுத்துதவியுள்ளார். அவருக்கு நானும் எனது இல்லத்தினரும் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவனர், தந்தை பெரியார் தமிழிசை மன்றத் தலைவர். தந்தன் ஆசிரியர், அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் என் இணைய மாமனார் தமிழ்த்திரு நா.அருணாசலம் மற்றும் அவர் மகனார் என் மைத்துளர் இன்தாம் தமிழ் இணையத்தின் இயக்குநா சா.அ.சவுரிராசன் ஆகியோரது விடா முயற்சியின் காரணமாக, இந்நூலும் இதற்கு முன் வெளிவந்த ஓவியக் கோடுகள், உருவக் கோடுகள், படிமக் கோடுகள் வெளிவந்தன. அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்,

ஓவியக் கோடுகள், உருவக் கோடுகள், படிமக் கோடுகள் மற்றும் மரபுக் கட்டடக்கலை (முதல் தொகுதி) ஆகியவை சிறப்பாக நூல் வடிவம் பெற உறுதுணையாக இருந்த மாணவர் மறுதோன்றி அச்சகப் பொறுப்பாளர் மைத்துளர் திரு.செ.நாகராசனுக்கும் (நாகு). கணிப்பொறி தட்டசத்தில் உதவிய திரு.கு.நாகராசனுக்கும் மற்றும் தட்டச்சு, அச்சக ஊழிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியினைக் கூறிக் கொள்கிறேன்.

கலையுலகம் இதுவரை எனது படைப்புகளை வரவேற்றதுபோல இந்நூலையும் வரவேற்கும் என்று நம்புகிறேன். மேலும் கலைக்கடலின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் செல்வங்களை அள்ளி எடுத்துவர என்போன்ற கலைப்படைப்பாளிகளுக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் ஆக்கமும், ஊக்கமும், ஆதரவும் தரும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆய கலைகள் அறுபத்து நான்கும் இன்று ஆதரிப்பார் இன்மையால் அழிவை நோக்கிச் செல்லுகின்றனர். இந்த அபாயத்திலிருந்து தமிழ்க்கலைகளைக் காத்து, வளர்த்து உலகம் வியப்புறச் செய்ய வேண்டியது தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்களின் தலையாய கடமையாகும்.

கணிகளால் மரத்தை அறியலாம். கலைகளால் தமிழரை அறியலாம்.

இலண்

தே→ கோ.திருஞானம்)

புத்தக உள்ளடக்கம்

திருக்கோயில் பொது அமைப்பு
அளவு முறைகள்
திசை அறிதல்
ஆயாதி கணிதம்
வாஸ்து
பதவின்யாச விதிகள்
மனையைத் தேர்ந்தெடுத்தல் பிரதமேஷ்டிகா விதி
கருவறை பதவின்யாசம்
பதவின்யாச அடிப்படையில் பிராகார இலக்கணம்
திருச்சுற்றுக் கோயில் இலக்கணம்
உப பீடம்
கோமுகை இலக்கணம்
பலகை மற்றும் பாத அணி இலக்கணம்
பலகணி இலக்கணம்
அதிட்டானம்
வேதிகை இலக்கணம்
சுவர்த்தூண் இலக்கணம்
போதிகை இலக்கணம்
பிரத்தர இலக்கணம்
விருத்தஸ்புடித இலக்கணம்
கும்பலதா – தோரண இலக்கணம்
வாயில் இலக்கணம்
கோட்டப் பஞ்சர இலக்கணம்
ஒரு நிலை விமானம் (ஏகதலம்)
துரி இலக்கணம் (ஸ்தூபி) கால்புறவாய் அளவுகள் (பிராசாத பிரமாணங்கள்) 27.
விமான அமைப்பு
சேத்திர – கிராம கட்டட அமைப்பு இலக்கணம்

எடுத்தாண்ட நூல்கள்
சிற்பச் செந்நூல் வை. கணபதி ஸ்தபதி கையேடு – ஆசிரியர் குழு
தமிழ் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி.வேங்கடசாமி உருவக் கோடுகள் – கோ. திருஞானம்
பழந்தமிழ்க் கட்டடக்லையும் நகரமைப்பும் – நா.பார்த்தசாரதி
கோயிற்கலை – தா.மெ.வெள்ளை வாரணம் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் – மலர் குழுவினர்

Weight1 kg