சுவையான சங்ககால தமிழர் சமையல் – பு. ப்ரியா பாஸ்கர்

220

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நாம் உண்ணும் உணவு நம் பண்டைத் தமிழர்களிடம் இருந்து கற்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. பண்டைத் தமிழர்கள் நல்ல முறையில் உணவைச் சமைத்து உண்டுள்ளனர் என்று சங்க இலக்கியப் பாடல்களில் காணமுடிகிறது.

பு. ப்ரியா பாஸ்கர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழ் மக்களை அவர்கள் வாழ்ந்த ஐவகை நிலங்களுக்கு ஏற்ப பிரித்து, அவர்கள் எந்தெந்த உணவைத் தேர்ந்தெடுத்து உண்டனர் என்பதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது ‘சங்க இலக்கியம்!

அடிப்படையாக உணவு செய்யும் முறை மற்றும் பக்குவத்தை நாம் சங்க தமிழர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளோம். அதுமட்டுமல்லாது உணவு பரிமாறும் முறையை நம் தமிழர்கள்தான் முதலில் கண்டறிந்துள்ளனர். இனிப்பை முதலிலும், பிறகு சாதம், குழம்பு, ரசம் இறுதியாக தயிரைப் பரிமாறுவதுதான் சரியான முறை என்பதைக் கண்டறிந்துள்ளனர். நாம் தற்பொழுது ‘பார்பிக் யூ’ ( Barbeque Nation) என்னும் முலையில், உணவை நெருப்பில் வாட்டி, சுட்டு உண்கிறோம். உணவை நம் சங்ககால மக்கள் அவர்களது சமையலில் உணவை நெருப்பில் சுட்டு உண்டனர் என்பதை புறநானுறு, அகநானுறு, பத்துப்பாட்டுப் பாடல்களில் காண முடிகிறது. நாம் இன்று அதிகமாகப் பழமையைத் தேடித் செல்கிறோம்.அதேநேரம் நம் முன்னோர்கள் போல் ஆரோக்கியமாக வாழ்ந்திட அவர்கள் செய்த உணவின் முறையைப் படித்து அதைப் பயன்படுத்தி உண்டு மகிழ்வோம். இந்தப் புத்தகத்தில் நம் பண்டைத் தமிழர்கள் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தி சமைத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளேன். சமைத்த உணவினைப் பக்குவப்படுத்துவதில் தமிழர்களை மிஞ்சியவர் எவருமில்லை எனக் கூறுவதில் தவறுமில்லை. இந்தப் புத்தகத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் நம் பண்டைத் தமிழர்கள் சமைத்துச் சுவைத்த சுமார் 100 சமையல் குறிப்புகள் உள்ளன

பொருளடக்கம்

1. உணவும் சங்ககாலமும்
2. சங்ககால உணவுப் பொருட்கள்
3.எட்டுத்தொகை பத்துப்பாட்டு விளக்கம்
4. சங்ககால அளவீடும் தற்கால அளவும்

I. எட்டுத்தொகை சைவ சமையல்

1. முக்கனிக் கலவை
2.கோடைக்கால பானம்
3. கம்பங்கூழ்
4. கொள்ளுக்கஞ்சி
5. சங்ககால அம்புளி
6. புற்கை கஞ்சி
7. கடலை வறுவல் சாதம்
8. பாலுடை அடிசில்
9. கட்டுச்சோறு
10. நெய்ச்சோறு
11. சிறுதானிய அவரைக் கலவை
12. புளி தயிர்க்குழம்பு
13. சங்ககாலத் துவையல்
14. எள் துவையல்
15. கருணைக்கிழங்கு வறுவல்
16. சங்ககால அவியல்
17. சுட்டப் பனங்கிழங்கு
18. குப்பைக்கீரைக் கடைசல்
19. ஆம்பல் கிழங்கு வறுவல்
20. காதல் மோர்
21. மாங்காய் ஊறுகாய்
22. சங்ககால வதக்கிய காய்கறிக் கலவை
23. தோல் உளுந்து பொங்கல்
24. பால் அவல்
25. பால் பணியாரம்
26. தேனும் வரகரிசியும்
27. அவல் – கரும்புச்சாறு பாகு கலவை
28. அவரை அரிசிப் பொங்கல்
29. திருவாதிரைக் களி
30. சங்ககாலப் பொங்கல்
31. தேன், பலா, கிழங்குக் கலவை
32. இனிப்பு தேமாங்கனி நெல்லி
33. பால் கலவை
34.பருத்திக்கொட்டைப் பால்
35.கரும்புச்சாறு
36. பாயசம்

ii. எட்டுத்தொகை அசைவச் சமையல்
37. ஆட்டிறைச்சிப் பிரியாணி
38. ருசியான சுட்ட மீன்
39. வாளைமீன் குழம்பு
40. முயல் கறியும் அவியலுணவும்
41. அயிலைமீன் புளிக்குழம்பு
42. கருவாட்டு நெய் வறுவல்
43. ஊன்துவை அடிசில்
44. பன்றிக்கறி வறுவல்
45. காடை நெய் வறுவல்
46. மீன் பிரியாணி
47. ஆட்டிறைச்சி வறுவல்
48. உடும்புக்கறி
49. வெள்ளெலி வறுவல்
50. காய்ந்த இறால் மீன் வறுவல்

i. பத்துப்பாட்டு சைவ சமையல்

1. பலாப்பழ வெண்கலவை
2. சோற்றுக் கஞ்சி
3. அரிசிக் களி
4. அரிசிக் குழாய்ப்புட்டு
5. அவரைப் பருப்பு வரகு சாதம்
6. சங்ககால புளிச்சோறு
7. முல்லைநில நெய்ச்சோறு
8. மூங்கிலரிசி அவரை புளிச்சோறு
9. தினை – அவரை சாதம்
10. வெள்ளரி வெண்பொங்கல்
11. சங்ககால பழையசோறு
12. சங்ககால காரப்பண்ணியம்
13. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
14. பலாக்கொட்டை மோர்க்குழம்பு
15. முசுண்டைத் துவையல்
16. கறுப்புஎள் துவையல்
17. மாதுளை ரசம்
18. வள்ளிக்கிழங்கு வறுவல்
19. சங்ககால மாவடு ஊறுகாய்
20. தேனும், கிழங்கும்
21. இனிப்புத் தினை
22. தினை – பால் சாதம்
23. மோதகம்
24. இனிப்புப் பண்ணியம்
25. இனிப்பு மெல்லடை
26. கரும்புடன் அவல்
27. சங்ககால இனிப்பு அப்பம்
28. இனிப்புக் காய்கனிக்கலவை
29. தேமா சேறு
30. தீம் பசும்பால்
31. செந்நெல் இனிப்பு அடிசில்
32. தேன் அடை
33. இனிப்புத் தயிர்

ii. பத்துப்பாட்டு அசைவச் சமையல்
34. பெட்டைக்கோழிப் பொரியல்
35. தினைச் சோறும் ஆட்டுக்கறி வறுவலும்
36. சங்ககால நண்டு பீர்க்கங்காய்க் கலவை
37.சுட்டக்கறி
38. ஆட்டுக்கறி வாடூன்
39. குழைந்த நெய்ச்சோறும் வெள்ளாட்டு வறுவலும் 19
40. தினை இரத்தப் பொரியல்
41. கறி – கிழங்குக் கலவை
42. பொரித்த நெய்க்கறி
43. கொழுப்பு நெய் அடிசில்
44. ஆட்டுத்தொடைக் கறி வறுவல்
45. சிகப்பு அரிசியும் உடும்புப் பொரியலும்
46. சுட்ட பன்றிக்கறி
47. சுட்ட இறால் வறுவல்
48. பொரித்த மீன்
49. கருவாட்டுச் சோறு
50. வாளை, வரால் மீன் கலவைக் குழம்பு

Weight0.4 kg