தென்குமரி கோவில்கள் – அ.கா. பெருமாள்

195

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

பொருளடக்கம்

முன்னுரை

நன்றியுரை

1. காலந்தோறும் கன்னியாகுமரி

2. தலங்களும் புராணங்களும்

3.மடங்கள்,தர்மங்கள், சித்தர்கள், அய்யா வைகுண்டர்

4. விழா,பூசை,பூசகர், நேர்ச்சை,நைவேத்யம்

5.கட்டிடம்,சிற்பம்,ஓவியம்

6. கோவில் நிர்வாகம், தேவனடியார்கள்

7. சிவன் கோவில்கள்

8. விஷ்ணு கோவில்கள்

9. அம்மன் கோவில்கள்

10. பிற கோவில்கள்

11. ஜனங்களின் சாமிகள்

பின்னிணைப்புகள்:

1. கன்னியாகுமரி பற்றி இலக்கியங்களிலும்

பழம் புராணங்களிலும் வரும் சான்றுகள்

2. சுசீந்திரம் கோவில் தொடர்பான கதைகள்

3. திருவட்டாறு தலம் குறித்த கதைகள்

4. திருப்பதிசாரம் தலபுராணம்

5. பறக்கை கோவில் கதைகள்

6. மடங்களும் தர்மங்களும்

7. திருத்தேர்கள் பற்றிய விபரம்

8. திருக்குளங்கள் பற்றிய விபரம்

9. அவ்வையார் குறித்த கதை

10. கல்வெட்டுகளில் விநாயகர் கோவில்கள்

தென்குமரிக் கோவில்கள் என்ற நூலுக்கான செய்திகளை 12 ஆண்டுகளாகச் சேகரித்து வருகிறேன். தென்குமரியின் கதை என்ற என் நூலை எழுத ஆரம்பித்தபோது தென்குமரிக் கோவில்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்ற திட்டத்துடன் செய்திகளைச் சேகரித்தேன். தென்குமரி தேவசம் நிர்வாகத்துக்கு உட்பட்ட மேஜர், மைனர், பெற்றி, வி.டி, சங்கேதம், ஸ்ரீபாதம் எனப் பகுக்கப்பட்டுள்ள 398 கோவில்களைப் பற்றியும் செய்திகள் சேகரித்தேன்.இவற்றின் வரலாற்றுப் பழமை, ஆகமச்சிறப்பு. மக்கள் ஊடாட்டம் பற்றிய செய்திகளைப் பெரும்பாலும் நேரடியாகவே சேகரித்தேன். பக்கவரையறை கருதி செய்திகளைத் தணிக்கை செய்ய வேண்டியதாயிற்று.

தென்குமரி எனப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு வட்டங்கள் அடங்கிய இடநாட்டுக் கோவில்களுக்கும், அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்கள் அடங்கிய நாஞ்சில் நாட்டுக் கோவில்களுக்கும் விழா, கோவில் அமைப்பு, ஆகமங்கள் போன்றவற்றில் வேறுபாடுண்டு. இதை இந்நூல் பல இடங்களில் பரவலாகச் சுட்டிச் செல்லுகிறது. கருவறைப் பகுதியை ஸ்ரீகோவில் எனக் கூறும் வழக்கு நாஞ்சில் நாட்டில் கிடையாது. வட்டமான கருவறை, உலோகத் தகடு அமைந்த மேற்கூரையுடைய கோவில்கள் நாஞ்சில் நாட்டில் இல்லை. ஒற்றைக்கல் மண்டபம், நாலம்பலம், நமஸ்கார மண்டபம் என்னும் மண்டபங்களும் இவை குறித்த நம்பிக்கை களும் நாஞ்சில்நாட்டில் இல்லை. விழாவில் யானைகள் இடம் பெறும் நிகழ்வு நாஞ்சில் நாட்டில் குறைவு. இவை இடநாட்டுக் கோவில்களுக்குரியவை.

திருவிழாக்களின் பிரமாண்டமும் தேர் தெப்ப விழாக்களும் நாஞ்சில் நாட்டில் இருப்பது போல் இடநாட்டில் இல்லை. இட நாட்டில் சண்டேஷ்வரருக்கு இடமில்லை. நாஞ்சில் நாட்டில் காவுகளும் சாஸ்தா கோவில்களும் குறைவு. இடநாட்டுக் கோவில் வளாகமும், இயற்கை எழிலும், நீராதாரங்களும்

தாஞ்சில் நாட்டுக் கோவில்களை வேறுபடுத்துவன. இடநாட்டை விட நாஞ்சில் நாட்டில் கல்வெட்டுகள் அடுகம் கிடைக்கின்றன. இதுபோன்ற நுட்பமான வேறுபாடுகள் இடநாட்டுக்கும் நாஞ்சில் நாட்டுக்கும் உள்ளன.

இந்த நூலின் நோக்கம் கோவில்களின் பூசை, விழா, சிறப்பு நிகழ்ச்சிகளை விவரிப்பது; இவற்றைத் தாண்டி கோவில்களுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு, ஊடாட்டம் ஆகியவற்றையும் சுட்டிக் காட்டுவது ஆகியன. தமிழகத்தின் கோவில்களின் பொதுவான பண்பாட்டிலிருந்து தென்குமரிக் கோவில்கள் நிர்வாகம், விழா, சடங்குகள் ஆகிய நிலைகளிலிருந்து வேறுபட்டது என்பதையும் இந்தநூல் கோடிட்டுக் காட்டுகிறது.

கோவில் கருவறை பூசகர்களாக இருந்தவர்களின் நிலை, ஆகமம், சடங்குகள் ஆகியன இங்கு அரசியல் காரணங்களால் மாற்றம் அடைந்திருக்கின்றன. நீண்ட காலமாக மலையாளிகளின் ஆட்சியில் இருந்தாலும் கலை, சடங்குகள் போன்றவற்றின் தமிழ் ஆளுமை மறுக்கப்படவில்லை. இன்றும் மலையாளம் பேசப்படும் இடநாட்டு ஊர்க் கோவில்களில் கம்பனின் பாடல் காட்சிகளும் பெரியபுராணக் கண்ணப்பரின் கதையும் சிற்பங் களாக இருப்பதைப் பார்க்க முடியும். (எ.கா. திருவட்டாறு, திருவிதாங்கோடு, நட்டாலம்.)

தமிழ் நாயன்மார்களில் சமயக்குரவர்களின் செப்புத்திரு மேனிகளுக்குப் பூசை செய்வதில் மலையாள பிராமணர்கள் தயக்கம் காட்டவில்லை. தமிழ் மரபு சார்ந்த சடங்குகள் (சம்பந்தர் ஞானப்பால் குடித்த கதை; சமணரைக் கழுவேற்றிய கதை) மலையாள பிராமணர்கள் பூசகராய் இருந்த கோவில்களில் நடத்திக் காட்டுவதில் தடை இருக்கவில்லை.

இப்படியான செய்திகள் பல ஆவணங்களில் காணப்

படாதவை. என்னுடைய சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில், பறக்கை மதுசூ தனர் கோவில், சிவாலய ஓட்டம் ஆகிய நூற்கள் தென் குமரிக் கோவில்களைப் பற்றியவை. இவற்றை எழுத செய்திகள் சேகரித்த போதே கோவில்களின் மக்களின் ஊடாட்டம் பற்றிய செய்திகளையும் சேகரித்தேன். இதனால் இந்த நூலில் நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. பெரும்பாலான கோவில்களின் தலபுராணச் செய்தி கள் வாய்மொழியாக உள்ளன.

மிக அண்மைக்காலமாக பாழடைந்து பராமரிக்கப்படாத கோவில்கள் வழிபாட்டுக்குரியதாகி வருகின்றன. 1980-2010

ஆகிய 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பக்தர் சங்கங்கள் கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்த பின்னரும் தொடர்ந்து செயல்படுகின்றன. குமரிக்கோவில் பக்தர் சங்கங்களில் சில கல்வி நிலையங்களையும் நடத்துகின்றன.

அ.கா. பெருமாள் (பி.1947)

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். புத்தகங்களுக்கு வெளியே சிதறிக்கிடக்கும் வழக்காறுகளைச் சேகரித்து, ஆராய்ந்து எழுதுவது இவர் பணி. இதுவரை 46 புத்தகங்கள் எழுதியுள்ளார். 18 நூல்களைப் பதிப்பித் துள்ளார். தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதை இருமுறை பெற்றிருக்கிறார்.

  1. ‘தென்னிந்தியத் தோல் பாவைக் கூத்து’ (2003),
  2. ‘தென்குமரியின் கதை’ (2004). அண்மையில் பிரசுரமான புத்தகங்கள்:
  3. ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ (பதிப்பு, 2008),
  4. ‘தாணுமாலயன் ஆலயம்’ (2009), ‘சடங்கில் கரைந்த கலைகள்’ (2009),
  5. ‘இராமன் எத்தனை இராமனடி!’ (2010),
  6. ‘அருச்சுனனின் தமிழ்க் காதலிகள் (2014).
Weight0.4 kg