ஆதி காவியம்’ என்று புகழப்பட்டு, இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக உள்ள ராமாயணம் தொடர்பான தமிழ் மரபுகளை வரலாற்று ரீதியாக, விரிவாக ஆராயும் நூல் இது. வட தேச தசரத ராமனின் அயோத்தியுடன் தென்னாட்டு ராமன் திருக்கோயில்களின் தொடர்பை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது. ராமன், ராகவன் உள்ளிட்ட பெயர்களில் நெடுங்காலம் தமிழகத்தில் வழிபடப்பட்டு வந்துள்ள பல ராமர் கோயில்களை ‘திரு அயோத்தி’ என்று அழைத்து வந்தமையை சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் இராம கதை மரபுகள், வழிபாடு குறித்த ஆய்வு நூலாக அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் வீரனாக கூறப்பட்ட இராமன், பின்னர் எழுந்த காப்பியங்களில் திருமாலின் அவதாரமாக குறிப்பிடப்படுவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் பண்பாட்டு மரபில் ராம சரிதத்தின் நீட்சியை பல இலக்கிய, கல்வெட்டு, திருக்கோயில் அமைப்பு சான்றுகளுடன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பராந்தக சோழன் குறித்த முனைவர் பட்டப்படிப்புக்காக தொடங்கிய ஆராய்ச்சி, தசரதராமனின் தமிழக பண்பாட்டு மரபு குறித்த நூலாக நிறைவடைந்து இருக்கிறது. மிகவும் நிறைவான மரபு ஆய்வு நூல். வரலாற்று ஆய்வை விரும்புபவரை மட்டுமல்லாமல் பொது வாசகரையும் வசீகரிக்கும் நூலாக அமைந்துள்ளது. ஆன்மிகம், வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாகத் திகழும் இராமகதை குறித்த தமிழ் மரபுகளையும் தொன்மங் களையும் வரலாற்று நோக்கில் விரிவாக ஆராயும் ஆய்வு நூல் இது.
சங்க காலம் துவங்கிச் சோழர் காலம் வரையிலான இலக்கியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட பல்வகைச் சான்றுகளை முன்வைத்துப் பேசும் இந்நூலில், பண்டைத் தமிழகத்தின் இராமன் வழிபாடு குறித்த பல வியத்தகு உண்மைகள் பதிவாகியுள்ளன.
பொதுக்காலத்திற்கு முன்பு தொடங்கி 13ம் நூற்றா ண்டு வரையிலான தமிழகத்தின் இராமகதை மரபுகள் மற்றும் இராமன் வழிபாடு குறித்த ப ன்னோ க்கு ஆய்வை இந்நூல் முன்னெடுக்கிறது. நூலின் ஆய்வுப் பரப்பு பண்டைத் தமிழகம் மட்டுமே; என்றாலும் இதன் கூறு களை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் அவதானிப்ப தற்கும் பாரத அளவில் நிகழ்ந்துள்ள இராமகதை மரபின் வளர்ச்சி நிலைகள் மற்றும் போக்குகள் குறித்த அடிப்படைப் புரிதல் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே நூலின் அத்தியாங்கள் எழுதப் பட்டுள்ளன.
இந்நூலில் உள்ள ஆய்வுச் செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்ள இராமகதை பற்றிய மேலோட்டமான அறிதலும் இந்திய மற்றும் தமிழக வரலாறுகள் குறித்த அடிப்படைப் புரிதலும் இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் தேவைப்படும் அனைத்து பின்னணித் தகவல்களும் ஆய்வின் பகுதியாகவே தரப்பட்டுள்ளன. ஆராயப்படும் கருத்துக்கள் கனமாக இருப்பினும் அவற்றை விளக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் வாக்கியங்களும் முடிந்த வரையில் எளிமைப்படுத்திப் பட்டுள்ளன. சில சொற்களுக்கு உரிய ஆங்கிலச் சொற்களும் பயன்பாடு கருதித் தரப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பல்வேறு தமிழிலக்கியச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இவையனைத்திற்கும் முந்தைய உரையாசிரியர்களின் விரிவான பொழிப்புரைகளும் விளக்கவுரைகளும் உடன் அளிக்கப்பட்டுள்ளன. சில செய்யுள்களுக்கு எளிய பொழிப்புரைகள் இல்லாத சூழலில் நூலாசிரியரே அத்தகைய உரைகளை எழுதியுள்ளார்.
பொருளடக்கம்:
- நூல்முகம்
- ஆய்வுப் பரப்பு
- நூல் அமைப்பு
- சொற்களும் பயன்பாடும்
- சுருக்கங்கள்
- கால வரையறை
- கதையின் தோற்றுவாய்
- பாணன் பாடிய இராமன்
- இரு பேரிலக்கியங்கள்
- துவக்ககால இராமகதை
- ஆதி கவியின் காவிய நாயகன்
- போதிசத்வ இராமன்
- சாலக புருஷ இராமன்
- இதர இராமகதை இலக்கியங்கள்
- தமிழில் இராமகதைகள்
- துவக்ககால இராமகதை மரபுகள்
- மேற்கோள் நூல்கள்
- சங்க இலக்கியங்களில் இராமகதை
- அருமறைக்கு அவித்த ஆலம்
- வலியரக்கன் வெளவிய சீதை
- ஐயிரு தலையின் அரக்கர்
- கோமான் கல்லுருக் கொண்ட கௌதமன்
- கிழத்தி பொலந்தார் இராமன்
- அரண் அழித்த மகன்
- தமிழ்ப் பட்ட பாரதம்
- சங்க இலக்கிய இராமகதை மரபுகள்
- மேற்கோள் நூல்கள்
- காப்பியங்களில் இராமகதை
- சிலப்பதிகாரம்
- அருந்திறல் பிரிந்த அயோத்தி
- கடுந்துயர் உழந்த காதலன்
- இலங்கை கட்டழித்த சேவகன்
- பேய்கள் பாடிய பெரும் போர்கள்
- பதினெண் மதிப் பெரும்போர்
- மணிமேகலை புகார் உறைந்த
- புள்ளினங்கள் குரங்குகள் செய்த குமரித்துறை
- நிலமிசை தோன்றிய நெடியோன்
- மீட்சியளவையில் இராமன் காப்பியங்களில் இராமகதை மரபுகள்
- மேற்கோள் நூல்கள்
- நாலாயிரத்தில் இராமகதை
- ஆழ்வார்களின் காலம் நூல் அமைப்பு ஆய்வு அணுகுமுறை
- மூவுருவில் வந்த இராமன்
- திருச்சக்கரம் ஏந்தும்
- இராமன் வாளரக்கனும்
- அவுணர் குலமும் வானரக்கோன்
- வாலி கூன் தொழுத்தை மந்தரை
- அடையாளம் உரைத்த அனுமன்
- இதர கதாபாத்திரங்கள்
- இராமசரிதப் பத்துகள்
- தோழியர் பாடும் இராமசரிதம்
- அனுமன் பாடும் இராமசரிதம்
- பெருமாள் பாடும் இராமசரிதம்
- இராமசரிதங்கள் : ஒப்பீடு பிரத்யேக வழக்குகள்
- ஆழ்வார்கள் பார்வையில் அயோத்தி
- நாலாயிரத்தில் இராமகதை மரபுகள்
- மேற்கோள் நூல்கள்
- திருமுறைகளில் இராமகதை
- நால்வர் காலம் நூல் அமைப்பு ஆய்வு அணுகுமுறை
- வரையெடுத்த வலியரக்கன்
- தேவியை வௌவிய தென்னிலங்கைக் கோன்
- கோயில் செய்த செங்கண்மால்
- வாலினாற் கட்டிய வாலியார்
- இராவணனைப் புறங்கண்ட ஜடாயு
- உசாத்தனம் தொழுத சேனை
- திருமுறைத் தலங்களும் இராமகதையும்
- திருமுறைகளில் இராமகதை மரபுகள்
- மேற்கோள் நூல்கள்
- சிற்பங்களில் இராமகதை
- சுடுமண் சிற்பங்கள்
- பெண்ணைக் கவரும் அரக்கன்
- கதை சொல்லும் பலகைச் சிற்பங்கள்
- மாயமான் வருகை
- பெயர்ப் பொறிப்புடன் இராமன்
- தசாவதாரத் திருக்கோயில்
- தென்னிந்தியக் கோயில்களில் இராமகதை
- பல்லவர் கோயில்களில் சி்த்தரிப்புக்கள்
- பாண்டியர் கோயில்களில் சித்தரிப்புக்கள்
- பாணர் கோயில் சித்தரிப்புக்கள்
- சோழர் கோயில்களில் சித்தரிப்புக்கள்
- தர்மபுரி இராமகதை சிற்பத் தொடர்
- தர்மபுரி இராமகதையின் சிறப்புக் கூறுகள்
- முற்சோழ இராமகதை சிற்பத் தொடர்கள்
- கும்பகோணம் இராமகதை
- புள்ளமங்கை இராமகதை
- திருச்சென்னம்பூண்டி இராமகதை
- திருமங்கலம் இராமகதை
- முற்சோழ இராமகதையின் சிறப்புக் கூறுகள்
- இந்தியாவின் முதல் இராம பரிவாரம்
- சோழர்கால ஐம்பொன் மூர்த்தங்கள்
- சிற்பங்களில் இராமகதை மரபுகள்
- மேற்கோள் நூல்கள்
8.கல்வெட்டுகள், செப்பேடுகளில் இராமகதை சான்று வகைகள்
- காவியத் தாக்கம்
- ஆதர்ச நாயகன்
- பாரத விருத்தி
- இராமன் திருக்கோயில்களும் வழிபாடும்
- தேவி பிரபாவதியின் செப்பேடுகள்
- தமிழக இராமன் கோயில் கல்வெட்டுகள்
- அரச மரபும் மன்னர்களும்
- மண்டலங்கள் ஊர்ப்பகுதிகள்
- திருக்கோயில்கள்
- சிறப்புச் செய்திகள்
- இந்தியாவின் முதல் இராமன் கோயில் கல்வெட்டு
- இந்தியாவின் முதல் அனுமன் வழிபாட்டுக் கல்வெட்டு
- திருவயோத்திப் பெருமாள்
- கல்வெட்டுகள், செப்பேடுகளில் இராமகதை மரபுகள்
- மேற்கோள் நூல்கள்
- முடிவுரை
- ஈராயிரமாண்டு தொடர்ச்சி
- வாய்மொழி மரபு
- பிராந்தியக் கூறுகள்
- சோவரண்
- கதை நிகழ்விடங்கள்
- அரச மரபினரின் அணுகுமுறை
- இராவணன் பற்றிய தொன்மங்கள்
- இராமனின் பரிமாணங்கள்
- இராமாவதாரம் பாடிய கம்பரின் காலம்
- ஆய்வு நிறைவு
- மேற்கோள் நூல்கள்