நெசவாளர்களும் துணிவணிகர்களும்
நெசவாளர்கள் மற்றும் துணி வணிகர்கள் மூலம் தமிழகத்தில் பொருளாதார மேம்பாடு எவ்வாறு நடைபெற்றது என்பதையும், ஐரோப்பியர்கள் வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் இந்த நூல் தெளிவாக எடுத்து இயம்புகிறது. நூல் உற்பத்தி, தறி கொண்டு துணி நெய்தல், சாயமேற்றுதல், துணியில் ஓவியம் வரைதல், பூ வேலைப்பாடு செய்தல், உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு துணி வணிகர்களின் வியாபாரம் அனைத்தையும் சிறப்பாய் விவரிக்கிறது. 81 வகைப்பட்ட துணிகள், ஆடைகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட விவரங்களையும், கடல்சார் வாணிபம் தமிழகத் துறைமுகங்களில் எப்படி செழிப்புறலாயிற்று என்பதையும் மூல ஆதாரங்கள் அடிப்படையில் நாம் அறிய முடிகிறது.
முன்அட்டைப் படம்:
தரங்கம்பாடியில் ஒரு பட்டு நெசவாளரும் அவரது மனைவியும் தேசிய அருங்காட்சியகம், கோபன்கோன்)
பின்அட்டைப் படம்:
தமிழகத் துணி வணிகரின் கடை (பிரிட்டிஷ் நூலகம், லண்டன்)