இன்று தலித் போராட்டங்கள் எழுச்சி பெற்றுத் தலித் கருத்துகள் பல வண்ணங்களில் பரவிவருகின்றன. அதிகாரத்தால் அடிப்பட்டவர்கள் இன்று அதிகாரத்தை ருசித்திடத் துடிக்கின்றனர். சூழலும் வாய்ப்பாக இருக்கிறது, ஆனால் தலித் விடுதலை என்பது அடிப்படையில் அதிகாரத்தை நொறுக்குவதாகும். எனவே தலித்துகள் அதிகாரத்துக்கு ஏங்கி அதைப் பிடித்தாலும், அந்த அதிகாரத்தையும் நொறுக்குவதாகவே தலித்திய அரசியல் இருக்கும். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் இத்தகைய பரந்துபட்ட நோக்கத்தைக் கொன்டெழுதப்பட்டவை.
அமைப்பியல் மற்றும் அமைப்பியலுக்கு அடுத்து எழுந்த சிந்தனைகள். குறிப்பாக பின்-நவீனத்துவ சிந்தனைகள், ஒரு பிரதி. மொழியாலும், கருத்தியலாலும், தன்னிலையாலும் (Subject) தீர்மானிக்கப்படுவதாக அறுதியிட்டுச் சொன்ன விசயங்கள், தலித்துகளுக்குச் சாதகமாக இருப்பதை இக்கட்டுரைகள் புலப்படுத்தக்கூடும்.