தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று… சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை… கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது… கடலாகத் தெரியும்!



சமயங்களின் அரசியல் – தொ.பரமசிவன்
₹199
- Book will be shipped in 3 - 7 working days.
- UPI / Razorpay Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 0.25 kg |
---|
Related products
-
வ.உ.சி எனும் அரசியல் போராளி – பேரா.வீ.அரசு (ஆசிரியர்)
Add to WishlistAdd to Wishlist -
பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள் – சுகுணா திவாகர்
Add to WishlistAdd to Wishlist -
தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் – தொ. பரமசிவன்
Add to WishlistAdd to Wishlist -
பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும் – செ.மா.கணபதி
Add to WishlistAdd to Wishlist -
அறியப்பட வேண்டிய தமிழகம் – தொ. பரமசிவன்
Add to WishlistAdd to Wishlist -
தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் -தொ. பரமசிவம்
Add to WishlistAdd to Wishlist -
பாலியல் அரசியல் – கேற் மில்லற்
Add to WishlistAdd to Wishlist -
தமிழ் நாடக அரங்கியல் கட்டுரைகள் – கா. சிவத்தம்பி
Add to WishlistAdd to Wishlist -
மஞ்சள் பிசாசு : தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு
Add to WishlistAdd to Wishlist -
பக்தி – அனுபவம் – அரசியல் – பதிப்பாசிரியர்: அழகரசன்
Add to WishlistAdd to Wishlist -
தெய்வங்களும் சமூக மரபுகளும் – தொ. பரமசிவன்
Add to WishlistAdd to Wishlist -
கள்ளத்தோணி – மலையகம் குறித்த சமூக, அரசியல், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்
Add to WishlistAdd to Wishlist -
பண்டைத் தமிழகத்தில் சட்டமும் நீதியும்
Add to WishlistAdd to Wishlist -
வலி -இலக்கியம் அரசியல் – ரேவதி
Add to WishlistAdd to Wishlist -
அரசியல் அரிஸ்டாட்டில் – அரிஸ்டாடில் (ஆசிரியர்), சி.எஸ்.சுப்பிரமணியம் (தமிழில்)
Add to WishlistAdd to Wishlist -
முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி | ஜே.பி.பி மோரே
Add to WishlistAdd to Wishlist