அகலிகை – தொன்மமும் புனைவும் மு.சீமானம்பலம்

160

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

வேதங்களில் குறிப்பாக ரிக்வேதத்தில் நான்கில் ஒருபகுதிப் பாடல்கள் இந்திரனைப் புகழ்ந்துரைக்கின்றன. இந்திரன் தவிர்த்து ஜனகள். ராம்,சீதை போன்ற இராமாயணப் பாத்திரங்கள் பெயரளவிலேயே குறிப்பிடப்படுகின்றன. ஜனகன் – சீதைக்கிடையிலான தந்தை – மகள் உறவு சுட்டப்படவில்லை. புத்த ஜாதகக் கதைகள் இராமனையும் சீதையையும் உடன்பிறப்புகள் என்கின்றன.

பௌத்த – ஜைன இராமாயணங்களும் இவற்றின் அடிப்படையில் எழுந்த தென்கிழக்காசிய இராமாயணங்களும் சீதையை மானுடக் குழந்தையாகவும் இராவணனுக்கு மண்டோதரியிடத்துப் பிறந்த குழந்தையாகவும் குறிப்பிடுகின்றன.

ஆக இராமனோ, சீதையோ, இராவணனோ,இந்திரனோ. அகலிகையோ வான்மீகி கூறும் உறவு நிலைகளில்தான் இருந்தார்கள் என்பதனை உறுதியாகச் சொல்வதற்கில்லை என்றாலும் கூட அகலிகை கதைக்கு வேதங்களில் சான்று உண்டு என்றும் அது ‘இந்திரா கச்சேத கௌரா வஸ்கந்தின் அஹல்யாயை ஜார’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இத்தொடரில் உள்ள ‘ஜார’ என்பதற்கு குறைப்பது அல்லது நாசம் செய்வது எனும் பொருளோடு ‘கள்ளப் புருஷன்’ எனும் பொருளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

‘அகலிகையும் கற்பு நெறியும்’ எனும் தனது நீண்ட கட்டுரையில் க. கைலாசபதி “வேதங்களிலே இயற்கைப் பாடல்களுக்கியைந்த கதைத் துளிகளாயிருந்த அகலிகை – இந்திரன் உறவு காலப்போக்கில் சுவையான கதையாய்ப் பரிணமித்தது. வேத கீதங்களிலும் பிராஹ்மணங்களிலும் அகலிகையைப் பற்றிய இடைவரவான குறிப்புகள் உண்டு. உதாரணமாக ஸதபத பிராஹ்மணம் இந்திரனைப் பாடுகையில் ‘அகலிகை காதலன்’ என்கிறது. இத்தகைய குறிப்பு களையும் கதைக்கூறுகளையும் ஒன்றுதிரட்டி வடமொழியில் முதற்காவியம் செய்த வான்மீகியார் அகலிகை கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தார் என்பர்” என்கிறார்.

அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி ஐவரும் பஞ்சகன்னியர்கள் என்றும் இவர்களை நினைத்தால் பாவம் நீங்கும் என்பது கூறப்படுகிறது.

பொருளடக்கம்

முன்னுரை

1.தொன்மம் சில குறிப்புகள்

2. வேதங்களில் அகலிகை

காவியங்களில் அகலிகை

1.வால்மீகி இராமாயணத்தில்
2. வியாசபாரதத்தில்
3. கம்பராமாயணத்தில்

கவிதைகளில் அகலிகை

1. அகலிகை வெண்பா – வெ.ப. சுப்பிரமணிய முதலியார்
2. அகல்யா – ச.து. சுப்பிரமணிய யோகி
3. உயிர்மகள் – ந.பிச்சமூர்த்தி
4. அகல்யா – T.D. மீனாட்சிசுந்தரம்
5. கற்கனி – கம்பதாசன்
6. அகலிகை – மஹாகவி
7. கல் சொன்ன கதை – தமிழ்ஒளி
8. அகலிகை இன்னும் காத்திருக்கிறாள் – சிற்பி
9. இராமன் பார்வையில் அகலிகை…- சிற்பி
10. அது ஒரு கல்வெட்டு – வைரமுத்து
11. கல்லிகை -ஞானி
12. அகலிகை – வாலி
13. வெள்ளை யானை முருகுசுந்தரம்

Order on WhatsApp: wa.me/919786068908
Order on online:

Weight0.4 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.