நகரத்தார்
நகரத்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார். இரத்தின தனமகுட வைசியர், பூபாலதன வைசியர். பிரதான வைசியர். உபயகுல பூபால வைசியர், சந்திர கங்காகுல வைசியர், சிவகோத்திர வைசியர். இளையாற்றங்குடி நகர வைசியர். நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனப் பல பெயர்களால் அழைக்கப்பெற்றனர் ‘ இப்பொழுது நகரத்தார். நாட்டுக் கோட்டைச் செட்டியார் என்ற பெயரிலேயே பரவலாக வழங்கப்படுகின்றனர்.
நகரத்தார் கி.மு. 2898க்கு முன்பே நாக நாட்டில் சாந்தியாபுரி என்ற நகரில் வாழ்ந்து வந்தனர் எனப் பூங்கொன்றை வேலங்குடிக் கல்வெட்டு கூறுவதாகப் பல அறிஞர்கள் எழுதியுள்ளனர்.’ எனினும் அப்படி ஒரு கல்வெட்டு காணக் கிடைக்கவில்லை எனத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.
சாந்தியாபுரியிலிருந்து குடிபெயர்ந்த அவர்கள் கி.மு.2897 முதல் கி.மு.790 வரை காஞ்சிபாத்தில் வாழ்ந்தனர் பிறகு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு கி.மு. 789 முதல் கி.பி. 706 வரை காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறினர். பின்னர் கி.பி. 707ஆம் ஆண்டு பாண்டிய நாட்டிற்கு வந்தனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 18ஆம் நூற்றாண்டு வரை 96 கிராமங்களில் வசித்து வந்தனர்.