Menu

Month May 2020

வழிபாடு சடங்கு முறைகளில் ஆரிய, சமண, பௌத்தக்கலப்பு

பழங்காலத் தமிழர்கள் இயற்கையை இறைவனாக் கருதினர். இயற்கையை வழிபட்டால், அவை தங்களைப் பாதுகாப்பவை, என்று எண்ணியே இயற்கையை வழிபட்டனர். அவ்வாறு வழிபட்ட தெய்வங்கள் பின்னாளில், ஆரியரின் வருகைக்குப் பின்னர்ப் பலப் பல கட்டுக் கதைகளுடன் தமிழ் மரபில் சேர்ந்து, தனித்தமிழ் மரபு எது என்று தெரியாத அளவிற்குக் கலந்து விட்டது என்பதே உண்மை. பொய்யை ஆவணப்படுத்தினால்…

தமிழகக் கோபுரக்கலை மரபு – முனைவர் குடவாயில் (புத்தக அறிமுகம் )

இந்த புத்தகம் கோபுர கலையின் தோற்றம், வடிவங்கள் மற்றும் அதன் தத்துவங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதிலும் “கோபுரம்” என்ற சொல்லின் ஆய்வு, இந்தியக் கலை மரபில் கோபுரங்களின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் கோபுரம் உணர்த்தும் தத்துவங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களை எவ்வாறு கட்டுகிறார்கள் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கோபுரங்களின் வளர்ச்சியைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், கட்டிடக்கலை பொருட்களின் வழியில் செங்கற் கோபுரங்களை பற்றியும், இதுவே அரண்மனைகளிலிருந்தால் அதன் வாயில்களைப் பற்றியும், இக்கோபுரங்கள் எவ்வாறு புணரமைக்கப்பட்டு உள்ளன என்பதைப் பற்றியும்…

குஞ்சாலி மரக்காயர் அருங்காட்சியகம் – விஜயகுமார்

குஞ்சாலி மரக்காயர் அருங்காட்சியகம், கோழிகோடு. “வணிகம்” ஒரு நாகரீகத்தின் செழிப்பை, மரபை  உலகின் மற்ற நாகரீகங்களுக்குக் கடத்தியது. ஆனால் அதே வணிக உறவினால் பிற்காலத்தில் காலனி ஆதிக்கம் உலகெங்கும் உருவாகியது.இந்தியாவின் முதல் காலனி ஆதிக்கம் அரபிக்கடற்கரையில் தலைதூக்கியது.கி.பி.1498 மே மாதம் 20 ஆம் தேதி அரபி வளைகுடா நாட்டின் வணிக கப்பலைக் கொள்ளையடித்ததில் மிளகு, ஏலக்காய்…

மாட்டுச் சாணமும், மனிதனின் முதல் வீடும் – வந்தேறி மனிதன் 6

எங்கள் வீட்டில் எருமைகள் இருந்தவரை சாணத்திற்குப் பஞ்சமில்லை, என் தம்பி பிறந்து சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டோம். எனவே மாட்டுச் சாணத்திற்காக எனது சிற்றப்பா இரவிச்சந்திரன் அவர்கள் வீட்டிற்குத் தான் செல்வோம். நிறைய மாடுகளை அவர்கள் வைத்திருந்தனர்.     சிறுவயதிலிருந்தே எனது தந்தைவழி பாட்டி அசலாம்பாளம்மா வீட்டில் வளர்ந்ததால்…

மணிமங்கலத்தின் தொண்டை மண்டல நவகண்டச் சிற்பங்கள் – வேலுதரன்

சமீப காலங்களில் ஒரு தலைவன் இறந்த பின்பு அவனுடைய அனுதாபிகள் தாங்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொல்வதை ஊடகங்களின் வழியாக கேள்விப்பட்டு இருக்கின்றோம்.. இப்படியும் இருக்க முடியுமா என்று எண்ணத் தோன்றும். அனால் இதுவே சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாக பரணி போன்ற இலக்கியங்களில் நவகண்டமாகவும் / அரிகண்டமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக ஒருவர் தன் தலையை…

வேலூரில் நாணயக் கண்காட்சி மகேஸ்வரி பாபு

நாணயங்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவருகின்றது. இந்த நாணயங்கள் அரசர்களின் காலங்கள் சங்ககால நாகரீகங்களை வெளிப்படுத்தும் காட்சியங்களாக அமைந்துள்ளன. நாணயங்கள் பல நூற்றாண்டு எனில் அஞ்சல் தலைகள் சில நூற்றாண்டுகளாக பல நாடுகளின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் சரித்திர சான்றுகளாகத் திகழ்கின்றன. தன்னார்வலர்கள் சரித்திர ஆர்வலர்கள் பொழுதுபோக்குக்கு என சிலர் நாணயங்கள் மற்றும் அஞ்சல்…

தமிழர் உணவு முனைவர். பிரின்ஸ் தாஸ்

மனிதன் உயிர் வாழ முக்கியமானது உணவாகும். ஆதி மனிதனின் முதல் தொழிலே உணவு தேடலாயிருந்தது ஆதிகால மனிதன் இயற்கையிலேயே கிடைத்த காய், கனி, கிழங்குகளை உண்டான். பின்னர் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் சதைப் பற்றுள்ள பகுதிகளைப் பச்சையாக உண்டான். தீயை உண்டாக்கக் கற்றுக் கொண்ட பின்னரே விலங்கு இறைச்சியைத் ‘தீ’ யில் வேகவைத்து பக்குவப்படுத்தி உண்ணத்…

சிதறிக் கிடக்கும் பாடல் பெற்ற ஸ்தலம் இராசு. சரவணன் ராஜா, வேலூர்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில், 20 கி.மீ ராணிப்பேட்டைக்கு அருகில் நீவா நதிக் கரையில் பாடல் பெற்ற திருத்தலம் திருவல்லம் அமைந்துள்ளது. பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள் எனப் பல அரசர்கள் நிவந்தனம் அளித்த மற்றும் பாடல் பெற்ற தலம் இது. திருவலம் கோயிலின் தெற்கே சுமார் 2 கி மீ. தொலைவில் கம்மராஜபுரம்…

தென்னிந்தியாவின் திபெத் – வேலுதரன்

கர்நாடக மாநிலத்தின் கொல்லேகாலம் அருகேயுள்ள திபெத் அகதிகளின் ஒரு குடியமர்வு (Dhondenling Tibetan Settlement) என் பார்வையில் இக்கட்டுரையில் காண்போம்.       சென்ற ஜனவரி மாதத்தில் இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்தில் மாண்டியா அருகே உள்ள சோழர்கள், கங்கர்கள் மற்றும் போசாளர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காணச் சென்று இருந்தோம். கல்வெட்டுக்கள், கட்டிடக்கலை…

வழுதி கண்ட தென்காசி பெருங்கோபுரமும் – பொன் கார்த்திக்கேயன்

வரலாறு குறித்து தேடத் தொடங்கிய போது எங்கெல்லாமோ தேடி அலைந்துவிட்டு சொந்த ஊரில் வாளாவிருக்கிறோமே என்ற குறை அடிக்கடி இருந்துவந்தது. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தூங்கி எழவே பொழுது சரியாயிருந்தது. இம்முறை எப்படியேனும் காசி கண்ட பெருமாள் பராக்கிரம பாண்டியனது சிற்பத்தையும் தென்காசிப் பாண்டிய இலச்சினை (இரட்டைக் கயல்) யையும் காண வேண்டுமென்ற…