Category கட்டுரைகள்

ஆயர்களின் உட்பிரிவுகள்

ஆயர்களின் உட்பிரிவுகள் : தமிழக ஆயர்களிடையே பல்வேறு பிரிவுகள் காணப்படு கின்றன. ‘கல்கட்டி, பாசி பிரிவினர், பெண்டுக்குமெக்கி, சிவியன் அல்லது சிவாளன், சங்கு கட்டி, சாம்பன், புதுநாட்டார் அல்லது. புதுக்கநாட்டார், பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சரம் அல்லது பஞ்சாரங்கட்டி, மணியக்காரர், ஆனைக்கொம்பு, கள்ள, சோழியர். பெருமாள் மாட்டுக்காரர். பொதுநாட்டு இடையர், கருத்தக்காடு, போந்தன் அல்லது போகண்டன் போன்ற…

அங்கிலேயர் பார்வையில் இந்தியா – இந்திய நில அமைப்பு #1

ஆசியா ஒரு பெரிய கண்டம். இது இயற்கையாகவே நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதி பசிபிக் கடலில் கலக்கும் ஆறுகளைக் கொண்டது. இங்கு பௌத்த மதம் அதிகமாக உள்ளது. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் ஆர்க்டிக் கடலை நோக்கி உள்ளன. இவை கடந்த நூற்றாண்டில் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் இணைக்கப்பட்டன. தென்மேற்குப் பகுதி கீழ்…

பாண்டிய நாட்டில் போராடிய கண்ணகியை சேர குறவர்கள் வணங்கியது ஏன் ?

சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை காவியத்தின் நோக்கைக் குறிப்பிடுகின்றன. ‘அரைசியல் பிழைத் தோர்க்கு அறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உறுத்து வந்நூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’   என்ற பதிகச்…

தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம்

பண்டைத் தமிழ் நூல்களில் பல அரசர் சிற்றரசர்களைப் பற்றிப் படிக்கிறோம். சிறப்புப் பெற்ற அவர்களெல்லாம் ஆண்கள். அவர்கள் தாய்முறை ஆண் வழியாகவே காணப்படுகிறது. தெய்வங்களில் ஏற்றமுடைய அனைத்தும் ஆண் வழியாகவே காண்ப்படுகின்றன. குறிஞ்சித் தெய்வமான சேயோன் (முருகன்), முல்லைத் தெய்வமான மாயோன் (திருமால்), நெய்தல் தெய்வமான வருணன், மருதத் தெய்வமான இந்திரன், ஆகிய அனைவரும் ஆண்பால்…

மொழிப் பற்றும், மொழி வெறியும்

தமிழுணர்வும், தமிழ் நாட்டுப் பற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர் காலத்திலிருந்து இன்றுவரை ஆழ்ந்து பரந்து வளர்ச்சி பெற்றுள்ளன. இதன் அடிப்படை, வடமொழி ஆதிக்கம், வடமொழி தென்மொழிகளுக்கு உயர்ந்தது என்ற பிரசாரம் இவற்றின் எதிருணர்வேயாகும். இந்திய நாட்டுப் பற்றையும் ஒருமையுணர்வையும் தேசீய உணர்வு பரப்பியது. அதன் விளைவினால் தமிழ் நாட்டில் தமிழ் நாட்டுப் பற்றுக்கும். இந்திய நாட்டுப்…

பிரிந்திருந்த பண்டையத் தமிழகம் ஒன்றுபட பௌத்தம் எவ்வாறு உதவியது

(‘நாடும் நாயன்மாரும்’ என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க. கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ் நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித் தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில் ஆராய்கிறார். இத்தகைய முயற்சி நம் நாட்டுத் தத்துவங்களை, சமூக அடித்தளத்தோடு சேர்த்துக் கற்றுக்…

மாறவேண்டிய தமிழரின் வரலாற்றுக் கண்ணோட்டங்கள்

புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன. வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு. தமிழக…

புராதன ஆரியரும் திராவிடரும்

டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி, இங்கிலாந்தில் பூகர்ப்ப இயலில் டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே சிறந்த ஆராய்ச்சியாளருள் ஒருவராகத் திகழ்ந்தார். சுமார் 100…

சோழர் ஆட்சியில் அறப் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள…

பெண்களே முதல் உழவர் – பெண்கள் கொண்டாடும் பொங்கல் விழா

உலக வரலாற்று அறிஞர்கள் பெண்களே முதன் முதலில் விவசாயத்தைக் கண்டறிந்தனர் என்கிறனர். அதனை சங்க இலக்கியமும் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று…