சுற்றுலா :
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகச் சுற்றுலா மாறிவிட்டது. மனித சமூகம் மனதிற்கு இதமளிப்பவை,ஆர்வமூட்டுபவை, மனதைக் கவர்பவை,இயற்கைக் காட்சிகள், அதிசயமானவை, அற்புதமானவை ஆகியவற்றைக் காண விரும்புவர். தாங்கள் வாழ்கின்ற இடத்திலிருந்து பிற இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்பும் ஆர்வமே சுற்றுலா தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாகும். இந்தச் சுற்றுலா மனிதர்களின் பொழுது போக்கு அம்சமாகவும், சிந்தனையைச் செழுமைப்படுத்தவும், அறிவை விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்கள் மன மகிழ்ச்சிக்காகவும், கிடைக்கும் ஓய்வு நேரத்தை இன்பகரமாகச் செலவிடவும் சுற்றுலாவை விரும்புகின்றனர்.
சுற்றுலாவின் பிற வகைகள் :
பயணங்கள் மேற்கொள்வது மனிதர்களின் இயல்பாகும். அப்பயணம் மனம் மகிழ்ச்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், அமையுமானால் அது சுற்றுலா ஆகும். இந்தச் சுற்றுலா,
1)ஓய்வுச் சுற்றுலா
2) கலாச்சார சுற்றுலா
3) சமூகச் சுற்றுலா
4) வியாபாரச் சுற்றுலா
5) விளையாட்டுச் சுற்றுலா
6) கல்விச் சுற்றுலா
7) மருத்துவச் சுற்றுலா
8) ஆன்மிகச் சுற்றுலா
9) அரசியல் சுற்றுலா
10) விடுமுறை சுற்றுலா
II) சுற்றுச்சூழல் சுற்றுலா
ஓய்வுச் சுற்றுலா:
தொடர் பணிகளால் மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ள மனிதர்கள் ஓய்விற்காகவும், மன அமைதிக்காகவும் ஓய்வுதேடி வேறு இடங்களுக்குச் செல்வது ஓய்வுச் சுற்றுலா ஆகும். தினசரி வாழ்வில் இருந்து விடுபட்டு, மனிதன் ஓய்விற்காக அமைதியான இடம் தேடிச் செல்கிறான். புதிய நகர்மயமாக்கப்பட்ட வாழ்க்கைச் சூழலில் இருந்து விடுபட்டு, மீண்டும் புத்துணர்ச்சி பெறவும் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குப் பயணிப்பதே ஓய்வுச் சுற்றுலாவாகும். இதன் காரணமாக மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும்.
கலாச்சார சுற்றுலா:-
ஒருவர் பிற நாடு, பிற மாநில வாழ்க்கை முறை அவர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றி அறிந்துகொள்வதற்காகப் பயணம் மேற்கொள்வது கலாச்சார சுற்றுலா ஆகும். தொழிற் புரட்சியில் காரணமாக ஏற்பட்ட நகர்மயமாக்கல் போக்குவரத்து பெருக்கத்தின் காரணமாக மனித சமூகத்தின் வாழ்வியல் முறைகளையே மாற்றி அமைத்துள்ளது. இந்தச் சூழலில் கிராமிய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நேரில் கண்டு மகிழ மேற்கொள்ளும் பயணமே கலாச்சார சுற்றுலா ஆகும். மேற்கத்திய நாகரிகத்தைக் கண்டு ரசிக்க பலர் சுற்றுலா செல்கின்றனர்.
சமூகச் சுற்றுலா:-
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அரசின் நிதி உதவியையும் தனியார் நிறுவனங்களின் உதவிகளையும் சிறப்புச் சலுகைகளையும் பெற்று மேற்கொள்ளும் சுற்றுலாவே சமுதாயச் சுற்றுலா ஆகும். உடல் உழைப்பை மட்டும் மூலதனமாக்கி உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வும், மாற்றுச் சூழ்நிலையும் அவசியம் அறிந்துகொள்வதற்காகத் தொழிற்சங்கங்களும், தனியார் நிறுவனங்களும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் அவர்கள் சுற்றுலா செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறது.
வியாபாரச் சுற்றுலா:-
தொழிலதிபர்கள், வணிகரீதியாக நடைபெறும் பொருட்காட்சிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், மாநாடுகள், தொழிற்துறைக் கூட்டங்களில் பங்கு கொள்வதற்காகச் செல்வது வியாபாரச் சுற்றுலா ஆகும். பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கவும், புதிய தொழிலைத் தொடங்கவும் இத்தகைய சிறப்புச் சுற்றுலாவை மேற்கொள்ளுவது வழக்கமாகும். இதனால் உற்பத்தி பெருகும் நாடுகள் பொருளாதார பலம் பெறும்.
விளையாட்டுச் சுற்றுலா:-
விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதற்காகவும், விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளிக்கவும் பிற ஊர்களுக்கோ,மாவட்டங்களுக்கோ, பிற மாநிலங்களுக்கோ, நாட்டிற்கோ செல்வது விளையாட்டுச் சுற்றுலா ஆகும். விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்கிறது. உலகக் கோப்பை கால்பந்து, கிரிகெட். ஒலிம்பிக் போட்டிகள், மாநிலம் தழுவிய போட்டி களைக் காண ஏராளமான பேர் செல்வது இன்று வழக்கமாகிவிட்டது. அரசும், தனியார் நிறுவனங்களும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு அதிக ஆதரவும், ஊக்கமும் அளிப்பதால் விளையாட்டுச் சுற்றுலா இன்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்விச் சுற்றுலா:-
உலகளாவிய கல்விப் புரட்சியும், அறிவுப் பெருக்கவும், புதியவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கல்வியாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கல்வி கற்கின்றனர். இத்தகைய சுற்றுலா இன்று அதிகரித்துவருகின்றது. மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி கற்பது தனி ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கல்வி கற்கும் மாணவர் களை ஆண்டுக்கு ஒரு முறை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்வது வழக்கமாகும். பாட நூற்களில் கற்றவற்றையும் வரலாறுகளைக் தெரிந்துகொள்ளவும் இத்தகைய சுற்றுலா அவசியமான ஒன்றாகிறது.
மருத்துவச் சுற்றுலா:-
இன்றைய நகரமயமாக்கலும், வணிக தொழிற்சாலைகளின் பெருக்கமும் சுத்தமான காற்றை அசுத்தமாக்குகிறது. நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. மக்கள்தொகைப் பெருக்கமும், போக்குவரத்து நெரிசல்களும் இயந்திரமாக்கலும் சுற்றுப்புறத்தையும், வாழிடத்தையும் மாசுபடுத்துகிறது. கழிவுப் பொருட்களைப் பொதுமக்களும் நீர் நிலைகளிலும், பொது வெளியிலும் கொட்டுவதால் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக மனிதர்கள் இயற்கை வாழிடங்கள், மலைப் பகுதிகள், கடற்கரைகள், அருவிகள் இருக்கும் இடங்களைத் தேடிச் செல்கின்றனர். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மேற்கொள்ளும் பயணமே மருத்துவச் சுற்றுலா ஆகும். இயற்கை சார்ந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும் சிலர் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஆன்மிகச் சுற்றுலா:-
மன அமைதிக்காக, இறைக் கடமையைப் பூர்த்திசெய்ய, நேர்த்திக் கடனை நிறைவேற்ற புனித இடங்களுக்கு மேற்கொள்ளும் பயணமேஆன்மிகச் சுற்றுலா ஆகும். சமய நம்பிக்கையையும், கடவுள் நம்பிக்கையை அதிகரிக்கவும் ஆன்மிகச் சுற்றுலா வழி வகுக்கிறது. இந்துக்கள் காசி, இராமேஸ்வரத்துக்கும், இஸ்லாமியர்கள் புனித மெக்காவிற்கும் கிறித்தவர்கள் ஜெருசலேமிற்கும் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழர்கள் அறுபடை வீடுகளுக்கும் விரதமிருந்து புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.
அரசியல் சுற்றுலா:-
நாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் பதவி ஏற்பு விழாக்கள், தேசிய விழாக்கள், அரசியல் மாநாடுகள், கட்சிக் கூட்டங்களில் பங்குபெறுவதற்காக மேற்கொள்ளப்படும் பயணமே அரசியல் சுற்றுலா ஆகும். அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்கள், அரசியல் கொள்கை விளக்கக் கூட்டங்களில் பங்கேற்கப் பயணிப்பதும் அரசியல் சுற்றுலா ஆகும்.
விடுமுறைச் சுற்றுலா:-
வார விடுமுறை, மாத விடுமுறை,ஆண்டு விடுமுறை நாட்களில் மன அமைதிக்காகவும், உடல் ஓய்விற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் மேற்கொள்ளும் பயணம் விடுமுறைச் சுற்றுலா ஆகும். அரசும், தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன்கூடிய விடுமுறையை தொழிலாளர்களுக்கு அளித்த பிறகு இத்தகைய சுற்றுலா செல்வது அதிகரித்துக் காணப்படுகிறது.
சுற்றுச்சூழல் சுற்றுலா:-
இருபதாம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் அழியாதவாறு இச்சுற்றுலா நடைபெறுகிறது. இங்கு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இயற்கையின் அழகுத் தன்மை கெடாமல், வன உயிர்களுக்கும், செடி, கொடி, மரங்களுக்கும் பாதிப்பின்றி இத்தகைய சுற்றுலா மேற்கொள்ளப் படுகிறது. மன அமைதிக்காகவும், இயற்கையைக் கண்டு ரசிக்கவும் இத்தகைய சுற்றுலா நடைபெறுகிறது.
இன்றைய காலத்தில் சுற்றுலா பெரு வளர்ச்சி பெற்றுள்ளது. சுற்றுலாவின் வகைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொடர் பயணங்களை மக்கள் பெரிதும் விரும்புவதால், தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குத் தொடர்ந்து செல்கின்றனர்.(நூலிலிருந்து)
விலை:100/-
வெளியீடு:நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/sutrulaaviyal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers