கலை

பஞ்சரச் சிற்பங்கள்

பஞ்சரச் சிற்பங்கள் : இக்கோயில் விமானத்தின் நான்கு திசைகளிலும் முகமண்ட பத்தின் மூன்று திசைகளிலுமாய்த் திசைக்கு இரண்டென 14 தளப் பஞ்சரங்கள் உள்ளன. அவற்றின் கிரீவகோட்டங்களிலும் அவற்றின் தலைப்பாக விமான, முகமண்டபக் கபோதத்தில் காட்டப் பட்டுள்ள பெருவளைவுகளிலும் எழிலார்ந்த சிற்பச் செதுக்கள் உள்ளன. கிரீவகோட்டச் சிற்பங்கள் : பஞ்சரங்களின் 14 கிரீவகோட்டச் சிற்பங்களுள் ஐந்து சிவ பெருமான், உமை என அமைய, நான்கு வானவர்களாகவும் எஞ்சிய ஐந்து வானவமகளிராகவும் உள்ளன. மகளிரில் மூவர் சுவரிக்காரிகையர். இப்பதினான்கு சிற்பங்களுள்

பஞ்சரச் சிற்பங்கள் Read More »

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு : நாகரிகத்தின் வெளிப்பாடே கலையாகும். இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள் மற்றும் கலைஞர்கள் வாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலை,கூத்துக் கலைக்கும் சிறந்த சான்றாகும். கலைக்கூத்தில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மாதவியின் நாட்டியத்தில் அவிநயம், தலைக் கோல் பட்டம், நாட்டிய அரங்கம், திரைச்சீலைகள் குறித்துத் துல்லியமாக விளக்குகிறது சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு Read More »

வைணவமும் சைவமும்

சமணம் : இக்காலத்தே பாண்டிய நாட்டில் பௌத்த சமயத்தை விடச் சமண சமயமே செல்வாக்குடன் விளங்கியது. பௌத்த சமயத்தவரை விடச் சமண சமயத்தவரே சைவ, வைணவர்களின் பொது எதிரிகளாக விளங்கினர். இதற்குக் காரணம் சமணர்களின் செல்வாக்கு முழுமையாக அழியாது ஆங்காங்கே நிலைத்து நின்றமை காரணமாகும். பாண்டிய நாட்டில் யானைமலை போன்ற இடங்களிலும், நகரங்களிலும் ஏராளமான சமணர்கள் இருந்தனர் என்பதைச் சம்பந்தரின் மதுரைப் பதிகப் பாடல்கள் மூலம் உணர முடிகின்றது. நாவுக்கரசரே சமணராய் இருந்து பின்பு சைவராக மாறியவர்

வைணவமும் சைவமும் Read More »

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள்

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள் இசைக்கு மயங்காதோர் மண்ணுலகில் இல்லை. இசைக்கு அடிப்படையாக விளங்குவன இசைக்கருவிகளே. நாளும் இன்னிசையால் தமிழ்பாடிய ஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் வளர்ந்த பக்தி இயக்கத்தால் இசையும் பாடலும் தெய்வ மணங்கமழும் கவின் கலைகளாயின. சோழர் காலத்தில் இசையை வளர்ப்பதில் திருக்கோயில்கள் முதன்மையாக விளங்கின. இசைக் கலக்கு அடிப்படையாக விளங்கியவர்கள் பலவகையான இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதையும் அதன்வழி இசைக்கலை வளர்ந்ததையும் பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களின் வழி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். காளம் பிற்காலச் சோழர் காலத்தில்

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள் Read More »

கலாரசிகனின் கலைக்கோயில்

கலாரசிகனின் கலைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டுமானம் என்கிற அளவில் இருந்த கோயில் கட்டும் பணி, சோழர் காலத்தில் இயக்க மாக மாறியது. ஆகச் சிறந்த உதாரணம்,பெரிய கோயில். பக்தி என்பது அக்கால மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. கோயில்கள், புராணம் சார்ந்து இருந்தன. பக்தியைத் தங்கள் வாழ்வின் சித்தாந்தமாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தெய்வ உருவங்கள் வழியாக ஓர் அரசன் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினான். ராஜராஜ சோழன், தஞ்சையில் ‘ராஜராஜீஸ்வரம்‘ என்ற பெயரில் பெருங்கோயில் ஒன்றை எழுப்புவதற்கு அடிப்

கலாரசிகனின் கலைக்கோயில் Read More »

பறையும் நிலமும்

பறையும் நிலமும் : திருவான்மியூர் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும், அவருடைய கீழாள் பதினான்கு பேரும், தஞ்சை குத்தாலம் கல்வெட்டில், தலைப்பறை ஒருவரும் கீழாள்கள் பதினோருபேரும் அந்தந்த கோயில்களில் இசைக்கலைஞர்களாகப் பணியாற்றியதை அறிய முடிகிறது. இவர்கள், தோல், கஞ்சம், நரம்பு, காற்றிசையோடு சேர்த்து குரலிசை ஐந்துமாக தலைப்பறையின் தாளத்திற்கு ஏற்ப இசைத்து வைகறை ஆட்டம் நிகழ்த்தியதைத் திருவெண்காடு மற்றும் திருவிடைமருதூர் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலி பாளையங்கோட்டை கோபால சாமி கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜன்

பறையும் நிலமும் Read More »

சிலப்பதிகாரத்தில் நடனம்

சிலப்பதிகாரத்தில் நடனம் : சிலப்பதிகாரம் தமிழர்களின் கவின்கலைகள், குறிப்பாக நடனம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சுரங்கம் எனினும் மிகையாகா நடனம் தமிழர்களின் தனிப்பெரும் சொத்து என்பதற்கும், உலக அளவில் அது ஒரு தொன்மை வாய்ந்த ஓர் உன்னத கலை என்பதற்கும் சிலப்பதிகாரம் தகுந்த சான்றுகளைத் தருகின்றது. எனவேதான், உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற நடனம் பற்றிய ஆய்வறிஞர் பெரில் டி சோயட்டே (Beryl de Zoete) என்பவர், “சிலப்பதிகாரம், உலகிலுள்ள மிகச் சிறந்த இலக்கியப்படைப்பு மட்டு மல்ல,

சிலப்பதிகாரத்தில் நடனம் Read More »

சமணர்புடைப்புச் சிற்பங்களில்

உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு November 19முதல் 25வரை மரபுசார் நூல்கள் 1000 ரூபாய்க்கு மேலாக புத்தகம் வாங்கினால் நமது Heritager.in The Cultural Store 10% தள்ளுபடி விலையில் சமணர்புடைப்புச் சிற்பங்களில் : கழுகுமலையில், உயர்ந்த மலையின் வடபுறச் சரிவில் உள்ள சமணர்புடைப்புச் சிற்பங்களில், மூன்று வரிசைகளாக அமர்ந்தநிலையில் முக்குடைநாதர் சிற்பங்கள் மற்றும் ஆதிநாதர், நேமிநாதர். பார்சுவநாதர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள், அரைமலை ஆள்வார், திருமலைத்தேவர், திருமலைமேற்படாரர். நகரத்தான் செய்வித்த தேவர் போன்ற தலக்கடவுளர்

சமணர்புடைப்புச் சிற்பங்களில் Read More »

தமிழ்நாட்டுக் கோபுரங்கள்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் : தமிழ்நாட்டில் கோயில் என்றாலே கோபுரங்கள்தான் நம் கண் முன்னே நிற்கும். பெரும்பாலோர் கோயில் என்றாலே கோபுரத்தைத்தான் கொள்வர். அந்த அளவுக்குத் தமிழகமெங்கும் கோயில்கள் தோறும் வானளாவ ஓங்கி நிற்கும் வகையில் கோபுரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேறு எந்நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தமிழகம் எங்கும் தெய்வீகச் சூழ்நிலை நிரம்பியதாக்கி இக்கோபுரங்கள் விளங்குகின்றன. ‘கோபுரம்’ என்னும் சொல்லே தமிழகத்தின் தனிச்சொல் என்பர். கோபுரம் என்பது கோயிலின் வாயிலை அலங்கரித்து நிற்கும் கட்டட அமைப்பாகும். இது பண்டைய காலத்தில்

தமிழ்நாட்டுக் கோபுரங்கள் Read More »

Shopping Cart