சிந்து இசைவகையும் வளர்ச்சியும் :
நாட்டுப்புற இசை வகைகளில் சிந்து இசையும் உள்ளடங்கும். நாட்டுப்புற மக்களால் ஆட்டங்களிலும், கூத்துக்களிலும். தொழிற்களங்களிலும் இசைக்கப்பட்டு வரும் சிந்து இசை செவ்வியல் கலை இலக்கிய வாதிகளாலும் இன்று கையாளப்பட்டு வருகிறது. சிந்து இசை வகையும் வளர்ச்சியும் பற்றி இங்குக் காணலாம்.
ஆய்வு எல்லை: சான்றாதாரங்கள்
இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம், மதுரை மாவட்டம். அண்ணா மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாழும் நாட்டுப்புற மக்களிடையே பெற்ற தகவல்கள் இந்த ஆய்வுக்கு முதன்மைச் சான்றாதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சிந்து பற்றி எழுதப்பட்டுள்ளவை இங்கு துணைமைச் சான்றாதாரங்களாக அமைகின்றன.
ஆய்வு முன்னோடிகள்: ஆய்வு முறைகள்
சிந்து இசை பற்றிய ஆராய்ச்சி இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளது. சிந்து என்னும் பெயரில் பாடல் நூல்கள் வெளிவந்துள்ள அளவுக்கு ஆய்வு நூல்கள் வெளிவரவில்லை. செல்வி நிர்மலா.’பழ முத்தப்பன்’ சு. சண்முகசுந்தரம்.’ ஆறு. இராமநாதன்.’ போன்ற மிகச் சிலரே சிந்து பற்றிய ஆய்வைச் செய்துள்ளனர். எழுதப்பட்டுள்ள சிந்து நூல்களைச் சான்றாதாரங்களாகக்கொண்டு இவ்வகை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு நாட்டுப்புற மக்களின் வாய்மொழிப்பாடல்களான சிந்து இசைப்பாடல்கள் வழிநின்று ஆய்வு செய்யப்படுகிறது. கலையியல், சமூகவியல் ஆகிய ஆய்வு நெறிமுறைகளில் விளக்கிக் காட்டப்படுகிறது.
ஆய்வின் கருதுகோள்கள்
1. வழி நடைப்பயணம் மேற்கொள்வோர் அல்லது சுமைதூக்கிய நிலையில் நடைப்பயணம் மேற்கொள்வோர் சிந்து இசையைப் பயன்படுத்தி வளர்ந்துள்ளனர்.
2. பாடு பொருள்களடிப்படையில் கால வளர்ச்சிக்கு ஏற்ப சிந்து வகைகள் உருவாகி வளர்ந்துள்ளன.
3. தன்னுணர்ச்சிப் பாடல்களாகச் சிந்தடிகள் அமைவது இயல்பாகிறது.
4. நாட்டுப்புறத் தொழிற்களங்கள், ஆட்டம், கூத்து ஆகிய களங்களில் ஆடவர்களால் பெரும்பாலும் சிந்து வகைகள் வளர்க்கப்பட்டுள்ளன.
சிந்து வகைகள் :
தன் உணர்ச்சியைச் சிந்தி வெளிப்படுத்துவது சிந்து இசைப்பாடலின் பொதுக்கூறாக அமைகிறது. சிந்து வகைகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. வழி நடைச்சிந்து
2 காவடிச்சிந்து
3. நொண்டிச்சிந்து
4. அணுக்குச் சிந்து அல்லது நெளிவுச் சிந்து (திருகுச் சிந்து)
5. வளையல் சிந்து
6. கும்மிச்சிந்து
7. கொலைச்சிந்து.
வழிநடைச்சிந்து, காவடிச்சிந்து ஆகிய இரண்டும் தொழில் அடிநிலையில் ஒருங்கிணைத்துக் காண உரியதாகிறது. நொண்டிச் சிந்து. கும்மிச்சிந்து ஆகிய இரண்டும் வைத்துக் காண இயலும். வளையல் சிந்து கொலைச்சிந்து ஆகிய இரண்டும் பாடு பொருள் அடிப்படையில் தனித்துக் காண வாய்ப்பாகிறது. அணுக்குச்சிந்து அல்லது நெளிவுச்சிந்து என்பது பாடும் முறையைக் குறித்து அமைகிறது. (நூலிலிருந்து)
நாட்டுப்புற மண்ணும் மக்களும் – பேரா.கரு.அழ. குணசேகரன்
விலை: 75/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/nattuppura-mannum-makkalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers