கல்வெட்டுகளில் தட்டாரும் தச்சரும் ஆசாரி, ஆசாரியன் என்ற பட்டங்களைப் பெற்றவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். கற்பணி செய்யும்தச்சர்கள் பலரைக்கல்வெட்டுகளில்காணமுடிகின்றது. இவர்கள் சிற்பாச்சாரியர்,தச்சாசாரியன்” என்று அழைக்கப்பட்டனர். எல்லா வகை ஊர்களுக்கென்றும் அவ்வூர்களில் இருந்த கோயில்களுக்கென்றும் தனித்தனியாகப் பல சிற்பாசிரியர்கள் இருந்திருக்கின்றனர்.ஊரார் செய்த முடிவுகளையும் அரச ஆணைகளையும் கோயில் சுவர்களில் கல்வெட்டாகப் பொறிக்கும் பணியினையும் கோயிலில் கட்டடப் பணிகளையும் 200 நாட்டில் பிற கட்டடப் பணிகளையும் ஊருக்கு வேண்டிய பொருள்களைச் செய்து தரும் பணிகளையும் இவர்கள் செய்து வந்தார்கள். நாடுகளுக்கென்று அமைந்த தச்சாசாரியர்களும் அக் காலத்தில் இருந்திருக்கின்றனர். 26
ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த சிவகங்கை மாவட்டத்துப் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டில் அங்குள்ள குடைவரையை உரு வாக்கிய எருக்காட்டூர்ப் பெருந்தச்சன் ஒருவன் குறிப்பிடப்படு கின்றான்.” நின்றசீர் நெடுமாற பாண்டியனின் ஏழாம் நூற்றாண்டு ஏனாதிக்கல்வெட்டைப் பொறித்தவன் முள்ளிநாட்டு அரிகேசரிநல்லூர்த் தச்சன் சடையன்பூதன் ஆவான்.296 பாண்டிய நாட்டில் இருந்த பண்டைய நீர்ப்பாசனக் குளங்களையும் அவற்றின் மடைகளையும் அமைக்கும் பணியினைத் தச்சர்களே செய்து வந்திருக்கின்றனர்.* இப்பணிக்காகக் குளத்தின் தலைநீர் (முதல்நீர்) பாயும் நிலத்தில் இவர்களுக்கு நில மளிக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டடங்களைக் கட்டும் பணியில் ஈடு பட்ட தச்சர்களுக்குத் ‘தச்சுக்கூறு’ என்ற பெயரில் ஊதியம் அளிக்கப் பட்டிருக்கின்றது. சேரன்மாதேவியில் அப்பன்கோயிலில் சிற்பப்பணி யினைச் செய்த சிற்பாச்சாரியர்க்கு நெல்லும் கோயிலில் படைக்கப் படும் திருவமுதும் ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடிக்கு அருகிலுள்ள திருமா லுகந்தான்கோட்டைப் பகுதியில் இருந்த சபையார், கல்வெட்டினைக் கோயில்களில் பொறித்தமைக்காக மனையும் நிலமும் அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் குளம் ஒன்றினைத் திருமஞ். சனம் செய்வதற்குரிய பட்டிக்கட்டுக்களுடன் எடுத்த தச்சன் ஒருவனுக்கு இறையிலியாக ஊரால் நிலம் அளிக்கப்பட்டுள்ளது. சோழன்தலைகொண்ட வீரபாண்டியன் காலத்தில் அம்பா சமுத்திரம் சிவன்கோயிலைக் கற்றளியாக்கிய தச்சனான ஆசாரியன் மானாபரணன் சேந்தனுக்கு நிலம் அளிக்கப்பட்டிருக்கின்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பொன்னமராவதி சிவன்கோயிலில் விமானத்தினை எடுப்பித்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்த தச்சாசாரியனுக்கு குளம் ஒன்றின் வரிகள் (குளப்பற்று) தானமாகத் தரப்பட்டன.30 கல்வெட்டுகளில் பல ஊர்களில் தானமாக அளிக்கப் பட்ட நிலங்களின் எல்லைகளைக் கூறும்போது தச்சர்களுக்கென்று அளிக்கப்பட்டிருந்த குளம், வயல் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களும் வருகின்றன.
தச்சர்கள் கனமான கற்களைத் தூக்கி அவற்றை அடுக்கிக் கோயில்கள் கட்டும்போது உயிர்துறந்த நிகழ்ச்சியும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. குலசேகர பாண்டியன் காலத்தில் திருமயம் வட்டத்திலுள்ள காரமங்கலம் அகத்தீசுவரர் கோயிலில் மண்டபம் கட்டும்பொழுது பாவுகல் (பாக்கல்) விழுந்து தச்சன் ஒருவன் இறந்து போனான். இறந்துபோன அத்தச்சனின் வழியினர்க்கு உதிரப்பட்டியாக ஒருமாவரை நிலம் இறையிலியாக அக்கோயில் நிர்வாகிகள் கூடி அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போன்ற இடங்களில் சமணர் சிற்பங்களைத் தச்சரில் சிலர் வழிபாட்டிற்காகத் தாமே உருவாக்கியிருக்கின்றனர். திருநெல்வேலிக் கோயிலில் பணிபுரிந்த தச்சர் களில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் ஒரு பிரிவினர் தங்களது தச்சுக்கூறில் பத்தில் ஒரு பங்கினையும் மற்றொரு பிரிவினர் எட்டில் ஒரு பங்கினையும் பிறிதொரு பிரிவினர் ஆறில் ஒரு பங்கினையும் அவ்வூரில் இருந்த மடம் ஒன்றிற்கு மடப்பணிப்புறமாக அளித்துள்ளனர். விருது நகருக்கு அருகிலுள்ள அபிமானமேருபுரம் என்ற நகரத்துச் (செங்குன் றாபுரம்) சிவன்கோயில் அர்த்தமண்டபத்தின் திருநிலைக்கால், படி, படியிடை ஆகியவற்றை அந்நகரத்துத் தச்சன் ஒருவன் செய்வித்துள்ளான்.
பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400) – முனைவர் வெ. வேதாசலம்
₹425
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. எங்கள் சமூக வலைத்தள பக்கங்களை Subscribe செய்யுங்கள்
3. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
4. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
5. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் எங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நூல்களை பரிசாக அனுப்புங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்