தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அதே போல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பல்வேறு வகையான பழங்கடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் காடும்.மலையும் சார்ந்த அருவிகளிலும் இயற்கை எழிலை கொஞ்சம் சூழலிலும் பழங்குடி மக்கள் தங்களுக்கே உரிய பழமையான பண்பாட்டோடு இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒரு சில பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்து வருகின்றனர். சில பழங்குடி மக்கள் வேளாண் தொழிலை முறையை அறியாத தொல் பழங்குடியினராக உள்ளனர். தாங்கள் வாழும் இடத்தின் குடியிருப்புகளை பலவிதமான பெயர்களில் ஒவ்வொரு பழங்குடி மக்களும் அழைக்கின்றனர். அதே போல் இம்மக்களிடம் வெவ்வேறு மொழியினைக் கொண்டு பேசிவருவதையும் காணமுடிகிறது. மலைப் பகுதிகளில் வாழும் இப்பழங்குடியினர் பேசும் மொழிகளில் பெரும்பாலும் மூக்கொலியே அதிகம் காணப்படுகிறது.
இத்தகைய பழங்குடி மக்களின் பண்பாடும் கலாச்சாரமும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதைப் போல இவர்களின் மொழியும் பாதுகாக்கப்படவேண்டும். காரணம் மொழி என்பது மனிதனிடைய தகவல்களைப் பரிமாரிக்கொள்ள உதவும் ஒரு கருவியாகும். ஒரு மொழி பேசும் மக்களை வைத்தே நாம் அவர்களின் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை அறியலாம் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும்.
மொழி மற்றும் அல்லாமல் உணவு, உடை போன்றவற்றாலும் வேறுபட்ட கலாச்சாரம் உடையவர்களாகவும் இப்பழங்குடி மக்கள் திகழ்கின்றனர். தமிழகத்தில் வாழும் அனைத்த பழங்குடி மக்களும் தனித்துவமான வேறுபட்ட மொழிகளைப் பேசிவருகின்றனர். இவர்களின் பேச்சு. மொழி என்பது வழக்காறுகளாகத்தான் உள்ளது. அதற்கு என்று எழுத்து வடிவம் என்பது கிடையாது. ஆகையால் பேசுகின்ற மொழியின் ஒரு சில வார்த்தைகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை எழுத்து வடிவம் செய்யபட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடிகள். இருளர்கள், பனியர், காடர், தோடர். முதுவன் பனியர், மலசர், கோத்தர், காட்டு நாயக்கர், கணிகர். மலையாளி பழங்குடிகள் என்று பதினோறு வகையான பழங்குடி மக்களின் வாய்மொழி வழக்குச்சொல் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்கள் வாழும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நேர்க்காணல் ஆய்வின் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் உறவுமுறை சொற்கள், அவைகள் செயல்கள், சார்ந்த வார்த்தைகள், பொதுவான வார்த்தைகள் நாட்கள். வாழ்விடங்கள். சுவைகள், பூக்கள், பழங்கள், காய்கறிகள். நீர்விலங்குகள், உள்நாட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பறவைகள். பூச்சிகள் என்று மேற்கண்ட பொருண்மையில் அமைந்த தலைப்புகளில் இம்மக்களின் வாய்மொழி வழக்குச்சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ன.
ஒரு சில சொற்களை அவர்கள் மொழியிலும் சில சொற்களை தமிழில் சொல்வதைப்போன்றும் உச்சரிக்கின்றனர். இம்மக்கள் பேசும்மொழி என்பது இன்றைய சமூகச்சூழலுக்கு ஏற்ப பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். மேலும் ஒவ்வொரு பழங்குடி மக்களின் பேசும் மொழியினை வாய்மொழி வழக்குச் சொற்களை முழுமையாக பதிவு செய்தோம் என்றால் சிறப்பாக இருக்கும் சிலருக்கும் அதிகப்படியான பேசும் வழக்குச் சொற்களையும் நாம் முழுமையாக எழுத்தாக்கம் செய்தால் பயனுள்ளதாக சிலருக்கும் இப்படிச் செய்வதன் மூலம் இவர்களின் மொழி என்பது அழியாமல் பாதுகாக்கவும் முடியும். காரணம் இன்று உலகில் 7000க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசப்படுவதாகவும் அதில் 1652 மொழிகள் மட்டும் தான் பேச்சு மற்றும் எழுத்து மொழியியல் பயன்பாட்டில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ஒரு இனம் அழிந்து விட்டால் அவர்கள் பேசும் மொழியும் அழிந்து விடும் ஆகையால் எழுத்து வடிவம் அல்லாமல் பேச்சு மொழியாக மட்டும் உள்ள இந்த பழங்குடி மக்களின் மொழி என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் இங்கு ஒரு சில பழங்குடி மக்களின் பேச்சுமொழிகள் மட்டும் பதிவு செய்யப்பட்டு எழுத்து வடிவமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.தொடக்க காலங்களில் மனித இனம் என்பது தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக் குறியீடுகளை உருவாக்கி அதன்வழி தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்பு அது பல்வேறு படி நிலைகளில் வளர்ச்சி பெற்று பேச்சு மொழியாக உருவானது. பேச்சு மொழிக்கம் எழுந்து மொழிக்கும் இடையே அதிக அளவில் வேறுபாடு இருப்பதால் அது இரட்டை வழக்கு மொழி அதாவது (Diglossic language) என்று சொல்லப்படுகின்றது. தமிழ் சமூகத்தில் பல நூற்றாண்டுகுளுக்கு முன்பே பேச்சுமொழிக்கும் எழுந்த்து மொழிக்கும் வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதைத் தொல்காப்பியர் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்றும் குறிப்பிடுகிறார். மேலும் மொழியியல் அறிஞர்கள் வட்டார வழக்கு மொழிதான் எழுத்து வடிவம் உள்ள மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றனர். அதனால் தான் பேசுவதும், கேட்பதும் உண்மையான மொழி என்றும் எழுதப்படுவதும், படிக்கக்கூடியதும் அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும் என்று சொல்லப்படுகிறது.மேச்சுமொழியல் ஒரு பொருள் கொண்ட சொல் வெவ்வேறு மொழிகளில் பல்வறுே பெயர்களுடன் ஒரே அர்த்தத்தை கொடுக்கின்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் ஒரு சொல்லுக்கு ஒவ்வொரு வகையான பொருளைச் சொல்வார்கள் அச்சொல் என்பது வட்டாரத்திற்கு வட்டாரம் பேறுபடுகின்றது. இதனைத்தான் வட்டார வழக்குகள் என்று சொல்லுகின்றனர். தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் வட்டார வழக்குகள் போலவே பழங்குடி மக்களிடமும் வட்டார வழக்குகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் வாழ்ந்து வரும் 36 வகையான பழங்குடி மக்களிடமும் வெவ்வேறு வகையான வாய்மொழி வழக்குச் சொற்கள் காணப்படுகின்றன. இதுப்போன்று பழங்குடி மக்களிடம் காணப்படும் வழக்குச்சொற்களை முழுமையாக ஆய்வுச்செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு இதுஒரு முன்னோடி நூலாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.