இம்மென் கீரனார் முதல் இன்குலாப் வரை ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியப் போக்கையும் புலமைப் பின்னணியோடும் பல்துறையறிவோடும் ஒப்பிலக்கிய ஒளியில் கண்டு, சான்றாதார வலிமையும் தருக்க நெறியும் நடைநயமும் கொண்டு, தீர்க்கமான முடிவுகளை முன்வைத்துத் தமிழாராய்ச்சியுலகில் தம் தனித்துவத்தை நிறுவிக்கொண்டவர் க. கைலாசபதி. கைலாசபதியின் அணுகுமுறையில் மார்க்சியம் துருத்தி நிற்காமல் இழையோடியது; கட்சி மார்க்சியரைக் கடந்தும் தமிழ் ஆய்வுலகில் தவிர்க்கவியலாச் செல்வாக்கு செலுத்தியது. அந்தச் செல்வாக்கைத் தொடங்கிவைத்த நூல் ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்.’ பா. மதிவாணன்