உலகில் எத்தனை இராமாயணங்கள் உண்டோ அத்தனை இராமர்களும் உண்டு. உலக இலக்கியங்களில் இவ்வளவு அதிகம் மாற்றுப் பிரதிகள் கொண்ட காவியம் வேறு இல்லை. இராமனைப் போல இடம். இனம், மொழி கடந்து இவ்வளவு அவதாரங்கள் எடுத்த வேறொரு காவிய நாயகனும் இல்லை. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்கள் தவிர சீன, மலேசிய, கம்போடிய ராமர்களும் புகழ்பெற்றவர்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும் கூடப் போற்றப்படுகிறான். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் பண்பாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இராமனின் பன்முகத் தோற்றங்களையும் அதையொட்டிய கதைகளையும் சடங்குகளையும் இந்நூலில் அ. கா. பெருமாள் சுவைபடக் கூறுகிறார்.
Year: 2010
ISBN: 9789380240350
Page: 232
Format: Paper Back
Language: Tamil
Publisher:
காலச்சுவடு பதிப்பகம்