தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும்

பழந்தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் குறித்தும் தொழிற்குடியினர் குறித்தும் சங்க இலக்கியங்கள் முதலான செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தொன்மையும் தனித்தன்மையும் கொண்டுள்ள தமிழ்ச் சமூகத்தில் தொழிற் குடிகளின் சமூகப் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததென்பதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.

உழவுக் குடி, நெசவுக் குடி, தச்சர் குடி, கொல்லர் குடி, குயவர் குடி எனத் தொழில்முறையால் அடையாளப்படும் இவர்களின் வாழ்வியல், சமூக ஓட்டத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. இவர்களின் வாழ்வியலும் தொழிலும் தமிழ்ச் சமூக மரபின் தொடர்ச்சியாகவும் அதேவேளையில், புதுமைகளின் புகலிடமாகவும் திகழ்கின்றன. இக்குடிகளின் பண்டைக் காலப் புழங்குபொருள்களே தமிழர்களின் தொன்மை நாகரிகத்தையும் பண்பாட்டையும் இன்றும் அடையாளப்படுத்துவனவாக உள்ளன. ஆயினும், இன்றையச் சூழலில், இவர்களின் தொழில்களில் புகுத்தப் பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களால் தொழில்சார் புழங்கு பொருள்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றன.

தொழிற்குடிகள், நவீனத்தின் தாக்குதலால் தங்களின் பல்வேறு அடையாளங்களை இழந்து காணப்பட்டாலும், தொழில்முறைச் சடங்குகளை நம்பிக்கையின் அடிப்படையில் இன்றும் மேற்கொண்டு வருவதைக் காணமுடிகிறது. நாளுக்குநாள் அழிந்தும் மாற்றம்கண்டும் வரும் தமிழக மரபுத் தொழில்களின் எச்சங்களாகவே தொழில்சார் புழங்குபொருள்களும் அவைசார்ந்த சடங்குகளும் இன்று காணப்படுகின்றன. ‘இன்று காணப்படுபவை நாளை இல்லை’ என்ற சூழலில் தொழிற்குடிகளின் தொழிற்சார் புழங்குபொருள்களையும் சடங்குகளையும் உரிய முறையில் அடையாளம் காண்பதும் ஆவணப்படுத்துவதும் தேவையாகிறது.

அவ்வகையில், ‘தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடும் தொழில்களாக அடையாளப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மேற்கொள்ளப்படும் தொழில்களிறு தொன்மைச் சிறப்புகள், தொழில்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிவது, தொழில்சார் புழங்குபொருள்களை ஆவணப்படுத்துவது. தொழில்சார் சடங்கியல்களையும் ஆவபாடுகளையும் வெளிக்கொணர்வது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது.

அந்த வகையில், பழங்காலந்தொட்டு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் தொழில்களான வேளாண்மை, நெசவு மீன்பிடி, தச்சு, கொல்லு, குயவு, சுடுமண் அட்டிகை (செங்கற் சூளை), உப்பளத் தொழில் ஆகிய தொழில்களும் தொழில்நிலைகளும் இந்நூலிற்குக் களங்களாக அமைகின்றன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புறக் கட்டமைப்பைச் சிறந்த முறையில் மேம்படுத்தியதோடு, ஆய்வுப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள வழிவகை செய்துகொடுத்த நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்களுக்கு நன்றி.

களப்பணியில் இராமேசுவரம் கடற்பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தொழிற்குடியினர் அதிகம் வாழும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உடன் பயணித்து, குறிப்புகள் எடுக்கவும், நிழற்படங்கள் எடுக்கவும் உதவிய நண்பர்களுக்கும், உடன் பயணித்து ஆய்வில் பெரும்பங்காற்றிய நிறுவன ஆய்வு மாணவர் திரு.சுசில்குமார் அவர்களுக்கும் நன்றி. நூலினைச் செப்பம்செய்ய உதவிய முனைவர் க.ஜெயந்தி, நூல் வடிவமைப்பு செய்து உதவிய திரு. இராசேந்திரன், அட்டை வடிவமைப்பு செய்து உதவிய நண்பர் ஜெபா ஆகியோருக்கும் நன்றி.

பொருளடக்கம்

1.வேளாண்மைத் தொழில் (தொன்மை -நுட்பங்கள் – சடங்குகள் – புழங்குபொருள்கள்)

2.மீன்பிடித் தொழில் தொழில்நிலை – சடங்குகள் புழங்குபொருள்கள்)

3.மட்பாண்டத் தொழில் (தொன்மை – தொழில்நிலை – புழங்குபொருள்கள்)

4.நெசவுத் தொழில் (தொன்மை – தொழில்நுட்பம் – புழங்குபொருள்கள்)

5.கொல்லுத் தொழில் (தொன்மை – தொழில்நிலை – புழங்குபொருள்கள்)

6.தச்சுத் தொழில் (தொன்மை – தொழில்நிலை – புழங்குபொருள்கள்)

7.சுடுமண் அட்டிகைத் தொழில் (செங்கற்சூளை)(தொன்மை – தொழில்நுட்பம் – சடங்குகள் – புழங்குபொருள்கள்)

8.உப்பளத் தொழில் (தொன்மை – தொழில்நிலை – புழங்குபொருள்கள்). (நூலிலிருந்து)

தொழிற்குடிகளின் தொழில்சார் பண்பாடு புழங்கு பொருள்களும் – முனைவர் ஆ. மணவழகன்
விலை: 190/-
Buy this book online: https://heritager.in/product/tholirkukalin-tholilsaar-panpadum-pulanku-porulkalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers