தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட போர்ச்சுக்கீசு தமிழ் அகராதி
இந்த நூல் 1731இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட முதல் போர்ச்சுக்கீசு – தமிழ் அகராதி. 21-ஆம் நூற்றாண்டில் வெளிவரும் இந்தப் பதிப்பு, அகராதி முழுமையாக மீட்டெடுக்கப்பட்டதும், மற்றும் இன்றைய தேவைகளைக் கொண்டதுமாய் அமைந்துள்ளது. தமிழ் ஆர்வலர்களின், அறிஞர்களின், பழைய தலைமுறையினரின், முயற்சிகளை வெளிக்கொணர்வதுமாய் உள்ளது. போர்ச்சுக்கீசிய மொழியையும், தமிழையும். நன்கு கற்கவும். தமிழை வளர்க்கவும், பரப்பவும் ஏதுவாக. எளியமுறையில் உருவாக்கப்பட்ட இவ்-அகராதி மீண்டும் இப்பொழுது வெளிவருகிறது. இது உலகெங்கும் உள்ள மாணவர்கள். ஆசிரியர்கள். தொழில்முனைவோர். மற்றும் பயணிகள் பயன்படுத்தும் மிக இன்றியமையாத நூலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை
முன் அட்டைப்படம்: 1731இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட முதல் போர்ச்சுக்கீசு-தமிழ் அகராதி, பக்கம் 6 (பிராங்கே நிறுவன நூலகம், ஆலே, ஜெர்மனி)