Menu

Month April 2025

அழிந்து போன இராஜராஜ சோழனின் நாடகம்

அழிந்து போன இராஜராஜ சோழனின் நாடகம் : கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கின்றது என்று கூறியுள்ளது காணத்தகும் : “இளைமையங் கழனிச் சாயம் ஏறுழு தெரிபொன் வேலி வளைமுயங் குருவ மென்றோள் வரம்புபோய் – வனப்பு வித்திக் கிளைநரம் (பு) இசையும் கூத்தும் கேழ்த்தெழுந் தீன்றகாம விளைபயன் இனிதின்…

இந்தியாவில் சாதி நிலம் மற்றும் நில உடமை

தீபகற்ப இந்தியாவில் சாதவாகனரும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட சங்கத் தமிழரும் பண்டைய வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். ஏனையோர், திணை என்ற சூழியத் தொகுதியில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வேட்டைக்காரர்கள், ஆடுமாடு மேய்ப்போர், வழிப்பறிக் கொள்ளையர், மீனவர் மற்றும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆவர். இவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி செய்து கொண்டு வாழ்ந்தவர்கள்.…

ஆசீவகர்கள் யார்?

இந்தியாவில் ஆரியரின் வருகையினால் தோன்றிய வேதங்களையும், அவற்றைத் தழுவி நிற்போரையும் எதிர்த்துச் சில மதங்கள் தோன்றின. அவற்றுள் சார்வாகர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் ஒரு தனிக் கடவுளையோ,அன்றேல் அக்கடவுளின் ஏற்றத்தையோ நம்பாதவர்கள். வேதங்கள் கூறும் சமயச் சடங்குகள் மக்களை உய்விக்க முடியாது என இவர்கள் நம்பினர். எனவே, வேத நெறி தழுவாத, வேதத்தை…

இலமூரியா உண்மையா? ஒரு தேடலும் ஐயமும்

கடல்கோளால் அழிந்த இலமூரியா என்ற குமரிகண்ட பற்றி கருதுகோள் நம்மிடையே உண்டு. ஒரு காலத்தில் கிழக்காசிய நாடுகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இணைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களின் விளைவாக கடல்நீரின் மட்டம் உயர்ந்து, அந்த நிலப்பகுதி பல தனித்தனி தீவுகளாகப் பிரிந்து விட்டது என்றும் நம்பப்படுகிறது. ஆப்பிரிக்காவில் தோன்றிய தொல்மாந்தரினமானது, இப்படியாக…

ஐரோப்பிய வணிகர் வருகை

ஐரோப்பிய வணிகர் வருகை : தொடக்கத்திலிருந்தே இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிடையே சிறப்பான வாணிகம் நடைபெற்று வந்தது. அலெக்ஸாந்தர் காலத்தில் கிரேக்கர்கள் வடஇந்தியா மீது படையெடுத்த காலத்திற்குப் பிறகு இந்தியா மீது எந்த ஐரோப்பிய நாடும் படையெடுத்ததில்லை. வாணிபத் தொடர்பே தொடர்ந்து இருந்தது. அவ்வாணிபத் தொடர்பு ஏறத்தாழ இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட, அலெக்ஸாந்திரியா…

பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும்

கல்வெட்டுகளில் தட்டாரும் தச்சரும் ஆசாரி, ஆசாரியன் என்ற பட்டங்களைப் பெற்றவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். கற்பணி செய்யும்தச்சர்கள் பலரைக்கல்வெட்டுகளில்காணமுடிகின்றது. இவர்கள் சிற்பாச்சாரியர்,தச்சாசாரியன்” என்று அழைக்கப்பட்டனர். எல்லா வகை ஊர்களுக்கென்றும் அவ்வூர்களில் இருந்த கோயில்களுக்கென்றும் தனித்தனியாகப் பல சிற்பாசிரியர்கள் இருந்திருக்கின்றனர்.ஊரார் செய்த முடிவுகளையும் அரச ஆணைகளையும் கோயில் சுவர்களில் கல்வெட்டாகப் பொறிக்கும் பணியினையும் கோயிலில் கட்டடப் பணிகளையும் 200 நாட்டில்…

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர்

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர் : தமிழகத்தில் பக்திமார்க்க அடிப்படையில் சைவ சமயம் தழைத்தோங்க நாயன்மார்களும், வைணவம் செழிக்க ஆழ்வார்களும் அரும்பாடுபட்டுள்ளனர். சைவ சமயத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களும், முக்கியமானவர்களாவர். இச்சமயச் சான்றோர்களுக்கு மக்கள் சிறுக்கோயில்கள் கட்டியும், சிற்பங்கள் உருவாக்கியும் வழிபாடு நடத்தியுள்ளனர். சோழர் காலத்திலேயே அப்பர், சுந்தரர், சம்பந்தர்…

திருநெல்வேலி சாணார்கள்

திருநெல்வேலி சாணார்கள் திருநெல்வேலி மிசன் பற்றிய வரலாறு அதன் பொருளாதார நிலை.வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்களுடன் கூடிய அறிக்கைகள் அவ்வப்போது நமக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால் அவ்வறிக்கைகள் ஒருபுறம் இருந்த போதிலும் இங்கிலாந்தில் இருப்பவர்கள் இப்பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் மிசனரி ஊழியத்தின் தன்மை. அது எதிர்கொள்ளும் அளப்பரிய இடர்ப்பாடுகள் அவற்றால் உருவான விளைவுகளுக்கு ஏற்ற…

சங்ககாலக் கலைகள்

சங்ககாலக் கலைகள் நாளாந்த வாழ்க்கையில் கலையானது மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருந்தாலும் அதற்கப்பாலுமுள்ள தனித்துவமான வாழ்வியல் கருத்தாக்கங்களிலும் கலை செயற்படவல்லது. கலைசார்ந்த கலைஞர்கள் சமூகவயப்பட்டவர்கள், அரசியல் வகிபாகத்தை வடிவமைப்பவர்கள் (பிரந்தா பெக் 1982). கலைக்குரிய விதிகள், கலையின் அமைப்பு, அதன் வடிவங்கள் முதலானவை ஒவ்வொரு கலையையும் அர்த்தமுடையதாக்குகிறது என்பது அமைப்பிய அணுகுமுறை (structural approach). கலைகள் வரலாற்று…

இயற்கையின் அளவையிலான வரம் – வேளாண் பயன்கள்

வேளாண் பயன்கள் : அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை அறிவியல், உதவிப் பேராசிரியரான ப. வேணுதேவன் அவர்களும், வேளாண் விரிவாக்கம் ஆய்வாளரான மு.வ.கருணா ஜெபா மேரி, இந்து இதழுக்காய் எழுதிய கட்டுரையில், வேளாண் பயன்கள் சிறப்பாய் சொல்லப்பட்டுள்ளன. அது இப்பகுதியில் தரப்பட்டுள்ளது. சிறு கூலங்கள் எளிதாய் அனைவரும் சாகுபடி செய்ய ஏதுவான பல சிறப்பியல்புகளைக்…