சங்க காலம்

சங்ககாலக் கலைகள்

சங்ககாலக் கலைகள் நாளாந்த வாழ்க்கையில் கலையானது மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருந்தாலும் அதற்கப்பாலுமுள்ள தனித்துவமான வாழ்வியல் கருத்தாக்கங்களிலும் கலை செயற்படவல்லது. கலைசார்ந்த கலைஞர்கள் சமூகவயப்பட்டவர்கள், அரசியல் வகிபாகத்தை வடிவமைப்பவர்கள் (பிரந்தா பெக் 1982). கலைக்குரிய விதிகள், கலையின் அமைப்பு, அதன் வடிவங்கள் முதலானவை ஒவ்வொரு கலையையும் அர்த்தமுடையதாக்குகிறது என்பது அமைப்பிய அணுகுமுறை (structural approach). கலைகள் வரலாற்று ரீதியான நினைவூட்டல்களைத் தருகின்றன. மனிதகுலத்தின் அனுபவங்கள் அனைத்தும் தனிமனிதர்களின் நினைவில் இருப்பதில்லை. அவை மொழியால் பேணப்படுகிறது. கலையும் ஒரு மொழிதான்.

சங்ககாலக் கலைகள் Read More »

சங்ககால மறவர்

மறவர்க்கு அளிக்கப்படும் பட்டங்கள் : மறவர்களுக்கு வேந்தன் செய்யும் பல சிறப்புகளில் பட்டங்கள் அளித்துப் போற்றுவதும் ஒன்றாம். இதன்படி ஏனாதி, காவிதி முதலிய பட்டங்களைச் சிறப்பு வாய்ந்த படைத் தலைவர்களுக்குச் சூட்டுவதுண்டு. இதனை “மாராயம்” என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இப்பட்டங்களைச் சூடும்பொழுது அதற்குரிய மோதிரம் ஒன்றும் அரசனால் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனை ‘மாராயம் பெற்ற நெடுமொழியானும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் கொடுக்கப்பட்டிருக்கும் பழம்பாடல் ஒன்றால் அறியலாம். இக்காலத்தில் சிறந்த தொண்டு புரியும்

சங்ககால மறவர் Read More »

சங்ககால அரசர்

சங்ககால அரசர் : சங்க காலக் கலைஞர்கள் அரசரைக் கண்டு ஆதரவு பெற்றனர். அவ்வரசர்களை மூவகையாகப் பாகுபடுத்துகிறது. சங்க இலக்கியம். அவர்கள் சீறூர் மன்னன், குறுநில மன்னன், வேந்தன் எனப்பட்டனர். சீறூர் மன்னரில் சிலர் நாடகற்றிக் குறுநில மன்னராயினர். ஆகவே சீறூர் மன்னரையும். வேந்தரையும் பற்றி விரிவாகக் கூறுவோம். சீறூர் மன்னன் (புறம் 197, 299, 308, 319, 328), சீறூர் மதவலி (புறம் 331), சிறுகுடிக்கிழான் (புறம் 388), சீறூர் வண்மையோன் (புறம் 330), சீறூர்

சங்ககால அரசர் Read More »

Shopping Cart