Description
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் சான்றுகள் உண்டா? இதுவரை அப்படிப்பட்ட சான்று எதுவும் காட்டப்படவில்லை.